• English
  • Login / Register

மாருதி தனது அரேனா மாடல்களின் புதிய பிளாக் எடிஷன்களை அறிமுகப்படுத்துகிறது

மாருதி ஆல்டோ கே10 க்காக மார்ச் 21, 2023 07:02 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 51 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஆல்டோ 800 மற்றும் ஈகோ -வை தவிர, கூடுதலான ப்ரீமியம் இன்றி அனைத்து அரேனா கார்களும் பிளாக் எடிஷன்களைப் பெறுகின்றன.

Maruti Arena Black Edition

  • நெக்ஸா கார் வரிசைகளில் உள்ளதைப் போன்றே, அரேனா கார்களும் சிறப்பு பேர்ல் மிட்நைட் வெளிப்புற கறுப்பு வண்ணத்தில் இப்போது கிடைக்கின்றன.

  • வண்ணத்தைத் தவிர வேறு எந்த தோற்ற மாற்றங்களும் , மெக்கானிக்கலாக மாற்றங்களும் உருவாக்கப்படவில்லை.

  • பிரெஸ்ஸாவின் ZXi மற்றும் ZXi+ டிரிம்களும் இந்த சிறப்பு கறுப்பு வண்ண ஆப்ஷன்களில் கிடைக்கின்றன.

  • பிற அரேனா கார்களின் பிளாக் எடிஷன்கள் வேரியண்ட்களை பற்றி கார் உற்பத்தியாளர் எதுவும் குறிப்பிடவில்லை.
  • மாருதி பிரெஸ்ஸா பிளாக் எடிஷன்களின் விலை அதன் மோனோடோன் டிரிம்களை ஒத்துள்ளது.

 மாருதி  அதன் நாற்பதாவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஐந்து நெக்ஸா  மாடல்களின் பிளாக் எடிஷன்களை அறிமுகப்படுத்தி இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த டிரெண்டில் இணைந்தது.  ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் சிறப்பு மேட் எடிஷன்களை காட்டியிருந்த நிலையில், நிறுவனம் இப்போது பேர்ல் மிட்நைட் பிளாக் வண்ணத்தை அதன் அரெனா கார்களில் அறிமுகப்படுத்தியுள்ளது, என்ட்ரி லெவல் ஆல்டோ 800 மற்றும் ஈகோ தவிர மற்றவற்றில் இது கிடைக்கிறது.

மேலும் படிக்க: ரூ.9.14 இலட்சத்தில் மாருதி பிரெஸ்ஸா CNG அறிமுகப்படுத்தப்பட்டது

Maruti Brezza

பிரெஸ்ஸாவைத் தவிர, இந்த புதிய நிறத்தில் கிடைக்கும் மற்ற அரேனா கார்களுக்கான குறிப்பிட்ட கார் வேரியண்ட்களை  நிறுவனம் குறிப்பிடவில்லை. இந்த காலகட்டத்தில், பிரெஸ்ஸாவின் உயர்-ஸ்பெக் கொண்ட  ZXi மற்றும்  ZXi+ டிரிம்கள் புதிய பிளாக் ஷேடில் கிடைக்கின்றன. இதன் அடிப்படையில், இந்த சிறப்பு பதிப்பில் பிற மாடல்களின் டாப்-டிரிம்கள் கிடைக்கலாம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் உங்கள் பார்வைக்காக, பிரெஸ்ஸாவின் பிளாக் எடிஷன்களின்  விலை விவரங்கள் இதோ:


வேரியண்ட்


விலை 

ZXi


ரூ. 10.95 இலட்சம்

ZXi CNG MT


ரூ. 11.90 இலட்சம்

ZXi+ 


ரூ. 12.38 இலட்சம்

ZXi AT


ரூ. 12.45 இலட்சம்

ZXi+ AT


ரூ. 13.88 இலட்சம்

அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள். 

நெக்ஸா கார்களில் நாம் பார்த்தைப் போலவே, நிற மாற்றத்தைத் தவிர, அரேனா மாடல்களில் பிற தோற்ற மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை, எந்த அம்சங்களும் சேர்க்கப்படவில்லை.மெக்கானிக்கலாக கார்களில் வேறு எந்த மாற்றமும் இல்லை ,மேலும் அதே இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடனேயே இவை வழங்கப்படுகின்றன.

Tata Harrier Dark edition

அதே நேரத்தில்,  டாடாவின் ஸ்பெஷல் டார்க் எடிஷன்கள் என்று வரும்போது, அவை பிளாக்டு-அவுட் அலாய் வீல்ஸ் மற்றும் அனைத்து-பிளாக் இன்டீரியர்களுடன் கூடுதல் அழகாக கிடைக்கின்றன. 
மேலும் விவரம் அறிந்து கொள்ளுங்கள் : அறிமுகப்படலத்திற்கு முன்னரே மாருதி ஜிம்னி டீலர்ஷிப்புகளை அடைந்துவிட்டது 

எதிர்பார்த்த ப்ரீமியம் இல்லை

பிரெஸ்ஸாவின் பிளாக் எடிஷன்களில் அதன் மோனோடோன் கார் வேரியண்ட்களின் விலைகளில் ஒத்துள்ளது,  மற்றும் மாருதி வேறு எந்த மாற்றத்தையும் கொடுக்கவில்லை என்பதால், மற்ற அரேனா கார்களும் அவற்றின் மோனோடோன் டிரிம்களின் விலையையே ஒத்திருக்கும். 
மேலும் படிக்கவும்: ஆல்ட்டோ K10 ஆன் ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Maruti ஆல்டோ கே10

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience