• English
    • Login / Register

    Mahindra XUV300 Facelift: இதற்காக காத்திருக்கலாமா ? அல்லது அதற்கு பதிலாக அதன் போட்டியாளர்களிடமிருந்து நீங்கள் தேர்வு செய்ய வேண்டுமா?

    மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO க்காக மார்ச் 14, 2024 06:56 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 21 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    புதிதாக அறிமுகமாகவுள்ள அப்டேட்டட் XUV300 காரில் புதிய வடிவமைப்பு புதுப்பிக்கப்பட்ட கேபின் கூடுதல் வசதிகள் கொடுக்கப்படலாம் எனவும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

    Mahindra XUV400 Facelift Buy Or Hold

    மஹிந்திரா XUV300 ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகம் இப்போது நெருக்கமாக உள்ளது. இன்னும் சில மாதங்களில் இது விற்பனைக்கு கொண்டு வரப்படும். இந்த ஃபேஸ்லிஃப்ட் புதிய தோற்றம் புதுப்பிக்கப்பட்ட இன்ட்டீரியர் மற்றும் பல்வேறு புதிய வசதிகளுடன் வரலாம். அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களும் கொடுக்கப்படவுள்ளன. இருப்பினும் சப்காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் ஏற்கனவே பல்வேறு கார்கள் உள்ளன. எனவே XUV300 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகத்துக்காக காத்திருக்க வேண்டுமா. அல்லது அதற்குப் பதிலாக அதன் போட்டியாளர்களில் ஒன்றை இப்போதே வாங்கலாமா ? நாம் அதை இங்கே பார்க்கலாம்.

    மாடல்

    விலை (எக்ஸ்-ஷோரூம்)

    2024 மஹிந்திரா XUV300

    ரூ 8.5 லட்சம் முதல் (எதிர்பார்க்கப்படுகிறது)

    டாடா நெக்ஸான்

    ரூ.8.15 லட்சம் முதல் ரூ.15.80 லட்சம்

    கியா சோனெட்

    ரூ.7.99 லட்சம் முதல் ரூ.15.60 லட்சம்

    ஹூண்டாய் வென்யூ

    ரூ.7.94 லட்சம் முதல் ரூ.13.48 லட்சம்

    மாருதி பிரெஸ்ஸா

    ரூ.8.34 லட்சம் முதல் ரூ.14.14 லட்சம்

    ரெனால்ட் கைகர்

    ரூ.6 லட்சம் முதல் ரூ.11.23 லட்சம்

    நிஸான் மேக்னைட்

    ரூ.6 லட்சம் முதல் ரூ.11.27 லட்சம்

    டாடா நெக்ஸான்: தோற்றம், பவர்டிரெய்ன்கள் மற்றும் பிரீமியம் வசதிகளுக்காக வாங்கலாம்

    Tata Nexon

    ஃபேஸ்லிஃப்ட் டாடா நெக்ஸான் இந்த பிரிவில் மிகவும் அப்டேட் ஆன நவீன எஸ்யூவி -களில் ஒன்றாகும். இது ஒரு ஷார்ப் மற்றும் நவீன வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது காருக்கு ஒரு விலையுயர்ந்த தோற்றத்தை கொடுக்கின்றது. மேலும் இது முன்பை விட சிறந்த தோற்றமுடைய கேபினுடன் வருகிறது. 10.25 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான 10.25 இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 6 ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை கொடுக்கப்படலாம். நெக்ஸான் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. மேலும் இது இப்போது 7-ஸ்பீடு DCT (டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்) ஆப்ஷனையும் பெறுகிறது.

    ஹூண்டாய் வென்யூ: கொடுக்கும் பணத்துக்கு நல்ல மதிப்பு மற்றும் ஸ்போர்டியர் பதிப்பில் பிரீமியம் வசதிகளுக்காக வாங்கலாம்

    Hyundai Venue

    ஹூண்டாய் வென்யூ 360 டிகிரி கேமரா வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் பெரிய டிஸ்ப்ளேக்கள் போன்ற விஷயங்கள் இல்லாத காரணத்தால் அப்டேட்டட் நெக்ஸானை விட சற்று பின்தங்கியுள்ளது. இருப்பினும் இது அதன் உயர்மட்ட வடிவமைப்பு காரணமாக பிரீமியம் தோற்றம் கொண்ட காராக உள்ளது. மேலும் இது பெட்ரோல், டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. இந்த வென்யூ கேமரா அடிப்படையிலான ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) -களை கொண்டுள்ளது மற்றும் அதன் டாப்-ஸ்பெக் வேரியன்ட் புதிய நெக்ஸானை விட ரூ. 2 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக வென்யூ ஒரு ஸ்போர்ட்டி N லைன் பதிப்பிலும் வருகிறது. இது உள்ளேயும் வெளியேயும் காஸ்மெட்டிக் அப்டேட்களை கொண்டுள்ளது.

    கியா சோனெட்: சிறந்த வசதிகள், ADAS & சரியான டீசல் ஆட்டோமெட்டிக் ஆகியவற்றுக்காக வாங்கலாம்

    Kia Sonet

    இந்த பிரிவில் கியா சோனெட் நெக்ஸானை விடவும் அதிக வசதிகள் கொண்ட கார் ஆகும். இது 10.25-இன்ச் டச் ஸ்கிரீன், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, 4-வே பவர் அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்  மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாதுகாப்பைப் பொறுத்தவரை இது 360-டிகிரி கேமராவைப் கொண்டுள்ளது. இதன் பாதுகாப்பு பட்டியலில் ADAS ஆனது லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் போன்றவற்றை வழங்குகிறது. மேலும் வென்யூ போலவே சோனெட் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களின் ஆப்ஷனை பெறுகிறது. இரண்டாவது 6-டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமெட்டிக் ஆப்ஷனை பெறுகிறது. இது நெக்ஸான் -ன் AMT -யை விட மென்மையான அனுபவத்தை அளிக்கிறது.

    மாருதி பிரெஸ்ஸா: சிறப்பான இடவசதி, பெரிய பெட்ரோல் இன்ஜின் மற்றும் பரந்த சர்வீஸ் நெட்வொர்க் போன்ற விஷயங்களுக்காக வாங்கலாம்

    Maruti Brezza

     மாருதி பிரெஸ்ஸா கார் மிக நீண்ட காலமாகவே சப் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தியது. இது அதிக பிரீமியமாக புதுப்பிக்கப்படும் வரை சற்று விலை அதிகம் என்றே தோன்ற வைக்கிறது. இந்திய கார் தயாரிப்பாளரின் எஸ்யூவி போன்ற வழக்கமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மற்றும் வசதிகளின் அடிப்படையில் சிறப்பாக எதையும் வழங்கவில்லை. இருப்பினும் இந்த எஸ்யூவி -யானது 5 பயணிகளுக்கு கேபினுக்குள் அமரும் வேரியன்ட்யில் இடவசதியை கொண்டுள்ளது. ஒரு பெரிய 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின், மாருதியின் பரந்த சேவை நெட்வொர்க் போன்ற விஷயங்கள் இந்த காருக்கு சாதகமாக உள்ளன. இருப்பினும் 9-இன்ச் டச் ஸ்கிரீன், 360-டிகிரி கேமரா மற்றும் சன்ரூஃப் போன்ற அடிப்படை வசதிகளை மட்டுமே இது பெறுகிறது. குறிப்பாக கேபின் தரமாக இல்லை மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷனையும் பெறவில்லை.

    ரெனால்ட் கைகர் & நிஸான் மேக்னைட்: குறைவான விலையில் சிறப்பான வசதிகள் மற்றும் பெட்ரோல் பவர்டிரெயின் போன்றவற்றுக்காக வாங்கலாம்

    Renault Kiger
    Nissan Magnite

    ரெனால்ட் கைகர் மற்றும் நிஸான் மேக்னைட் ஆகிய இரண்டு கார்களின் முக்கிய விற்பனை புள்ளி இதன் குறைவான விலை ஆகும். இந்த இரண்டு எஸ்யூவி -களும் ரூ. 6 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகின்றன. அவை பிரிவில் உள்ள மற்ற எஸ்யூவி -களை விட ரூ. 2 லட்சம் குறைவானவை. மேலும் அவற்றின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களின் விலை ரூ. 12 லட்சத்துக்கு கீழ் (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. இருப்பினும் இந்த குறைவான விலை சப்-4m எஸ்யூவி -களில் பெரிய டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வென்டிலேட்டட் இருக்கைகள் போன்ற வசதிகள் கொடுக்கப்ப்டவில்லை. மேலும் பாதுகாப்பின் அடிப்படையில் அதிக வசதிகளும் கிடைக்கவில்லை. எவ்வாறாயினும் பழைய GNCAP கிராஷ் டெஸ்ட்டில் மேக்னைட் மற்றும் கைகர் ஆகிய இரண்டும் 4-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளன என்பதை குறிப்பிட்டு கூற வேண்டும். இன்ஜினை பொறுத்தவரையில் இரண்டு எஸ்யூவிக்களும் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் மற்றும் டர்போ-பெட்ரோல் 1-லிட்டர் இன்ஜின்களுடன் வருகின்றன மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் இரண்டும் உள்ளன. ஆனால் இரண்டிலும் டீசல் யூனிட்டை கிடைக்காது.

    2024 மஹிந்திரா XUV300: புதிய வடிவமைப்பு, அகலமான கேபின், டீசல் இன்ஜின் & நல்ல மதிப்பு ஆகியவற்றுக்காக காத்திருங்கள்

    2024 Mahindra XUV300

    புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட XUV300 -க்கு இப்போது வரை அதிகாரப்பூர்வமாக டீஸர் எதுவும் வெளியிடப்படவில்லை. என்றாலும் இப்போது XUV300 தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த ஃபேஸ்லிஃப்ட் மூலம் மஹிந்திரா XUV300 புதிய மற்றும் நவீன தோற்றம் கொண்ட வடிவமைப்பைப் பெறும் மேலும் அதன் கேபினிலும் அதே மாற்றத்தை எதிர்பார்க்கலாம். இப்போதும் கூட அதன் பிரிவில் உள்ள மிகவும் அகலமான எஸ்யூவி -களில் இதுவும் ஒன்றாகும். மேலும் இது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பதிப்பை போலவும் இருக்கும். போட்டியைத் தொடர மஹிந்திரா பெரிய 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற புதிய வசதிகள் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் மற்றும் அதன் பாதுகாப்பு வசதிகளும் அப்டேட் செய்யப்படும்.

    Mahindra XUV400 EV cabin

    மஹிந்திரா XUV400 -ன் கேபின் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது

    மேலும் தற்போதைய XUV300 -ன் டீசல் மற்றும் டர்போ-பெட்ரோல் பவர் ட்ரெயின்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பிலும் கொடுக்கப்படும் . இருப்பினும் மஹிந்திரா தனது போட்டியாளர்களில் பெரும்பாலானவற்றில் கிடைக்கக்கூடிய சரியான ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுக்கு பதிலாக AMT ஆகிய இரண்டையும் தொடர்ந்து வழங்கக்கூடும். ஆயினும்கூட ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட XUV300 அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது பணத்திற்கான சிறப்பான மதிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் படிக்க: அதிகமான பெயர்களை வர்த்தகத்துக்காக பதிவு செய்கிறது மஹிந்திரா

    நீங்கள் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட மஹிந்திரா XUV300 -க்காக காத்திருப்பீர்களா ? அல்லது அதன் போட்டி கார்களில் ஏதாவது ஒன்று உங்கள் கவனத்தை ஈர்த்துள்ளதா ? கீழே உள்ள கமெண்ட் பகுதியின் மூலமாக எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

    மேலும் படிக்க: XUV300 AMT

    was this article helpful ?

    Write your Comment on Mahindra எக்ஸ்யூவி 3XO

    2 கருத்துகள்
    1
    G
    gulabsing raghuvanshi
    Mar 17, 2024, 8:33:34 AM

    हम xuv 300 facelift का काफ़ी दिनों से इंतजार कर रहे है.

    Read More...
      பதில்
      Write a Reply
      1
      V
      vamshi mohan
      Mar 14, 2024, 1:20:13 PM

      ya definietly will wait for it and much eager to own it

      Read More...
        பதில்
        Write a Reply

        explore similar கார்கள்

        ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

        புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

        கார் செய்திகள்

        • டிரெண்டிங்கில் செய்திகள்
        • சமீபத்தில் செய்திகள்

        டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

        • லேட்டஸ்ட்
        • உபகமிங்
        • பிரபலமானவை
        ×
        We need your சிட்டி to customize your experience