Mahindra XUV 3XO கார் பெற்ற முன்பதிவுகளில் 70 சதவிகிதம் பெட்ரோல் வேரியன்ட்களுக்கானவை ஆகும்
மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO க்காக மே 23, 2024 05:47 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 47 Views
- ஒரு கருத்தை எழுதுக
XUV 3XO காருக்கான முன்பதிவு மே 15 அன்று திறக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே 50,000 ஆர்டர்களை பெற்றது.
-
2024 ஏப்ரலில் மஹிந்திரா XUV 3XO (ஃபேஸ்லிப்டட் XUV300) காரை அறிமுகப்படுத்தியது.
-
இது 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை அவற்றுக்கென உள்ள ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் வருகிறது.
-
டீசல் வேரியன்ட்களை விட பெட்ரோல் வேரியன்ட்கள் ரூ.1.6 லட்சம் வரை குறைவான விலையில் உள்ளன.
-
மஹிந்திரா எஸ்யூவி -யின் அறிமுக விலை ரூ.7.49 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கும்.
2024 ஏப்ரல் இறுதியில் XUV300 எஸ்யூவி -யின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பாக மஹிந்திரா XUV 3XO அறிமுகமாகனது. மஹிந்திரா மே 15 அன்று புதிய எஸ்யூவி -க்கான முன்பதிவுகளை தொடங்கியது. மேலும் அது முதல் ஒரு மணி நேரத்தில் 50,000 ஆர்டர்களை பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற முதலீட்டாளர் சந்திப்பில் மஹிந்திராவின் உயர் அதிகாரிகள் புதிய எஸ்யூவி -க்கான ஆர்டர்கள் குறித்த சில தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
பெட்ரோல் வேரியன்ட்டுக்கான தேவை அதிகம்
மஹிந்திரா எஸ்யூவி -கள் பொதுவாக அறியப்பட்டதற்கு மாறாக XUV 3XO -க்கு இதுவரை கிடைத்த மொத்த முன்பதிவுகளில் 70 சதவிகிதம் பெட்ரோல் வேரியன்ட்களுக்கானவை என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது. பல ஆண்டுகளாக XUV300 -ன் விற்பனை இரண்டு எரிபொருள் வேரியன்ட்களுக்கு இடையில் ஒப்பீட்டளவில் சமநிலையில் உள்ளது என்பதில் ஆச்சரியமில்லை. 2024 ஜனவரியில் பெட்ரோல் வேரியன்ட்களின் விற்பனை பங்கு 45 சதவீதத்திற்கு அருகில் இருந்தது, மீதமுள்ள 55 சதவீதம் எஸ்யூவியின் டீசல் மற்றும் EV (XUV400) வேரியன்ட்களால் நிரம்பியுள்ளது.
பெட்ரோல் வேரியன்ட்களுக்கு அதிக தேவை ஏற்படுவதற்கான மற்றொரு காரணம் டீசல் சகாக்களை விட ரூ. 1.6 லட்சம் வரை விலை குறைவான இருப்பதே முக்கிய காரணமாக இருக்கலாம். தார், ஸ்கார்பியோ N அல்லது XUV700
போன்ற பெரிய மற்றும் விலையுயர்ந்த மஹிந்திரா எஸ்யூவி -களை ஒப்பிடும் போது இதன் விலை குறைவாகவே உள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பவர்டிரெய்ன்கள்
ஃபேஸ்லிஃப்ட்டுடன், மஹிந்திரா தனது சப்-4எம் எஸ்யூவியை பெட்ரோல் மற்றும் டீசல் பவர் ட்ரெய்ன்களுடன் தொடர்ந்து வழங்க முடிவு செய்துள்ளது. ஆனால் AMT ஆட்டோமேட்டிக்கை அதன் பெட்ரோல் இன்ஜின்களில் ‘ப்ராப்பர்’ டார்க் கன்வெர்ட்டர் யூனிட்டுடன் மாற்றியது. காரில் உள்ள இன்ஜின்-கியர்பாக்ஸ் காம்போக்களை இங்கே பார்க்கலாம்:
விவரங்கள் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.2 லிட்டர் TGDi டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
112 PS |
130 PS |
117 PS |
டார்க் |
200 Nm |
250 Nm வரை |
300 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT |
கிளைம்டு மைலேஜ் |
18.89 கிமீ/லி, 17.96 கிமீ/லி |
20.1 கிமீ/லி, 18.2 கிமீ/லி |
20.6 கிமீ/லி, 21.2 கிமீ/லி |
உயர்-ஸ்பெக் பெட்ரோல்-தானியங்கி வேரியன்ட்களும் மூன்று டிரைவ் மோடுகள் உள்ளன: Zip, Zap மற்றும் Zoom. செக்மென்ட்-லீடிங் செயல்திறனுடன் மிகவும் ரீஃபைன்மென்ட் ஆன ஆட்டோமெட்டிக் பவர்டிரெய்னின் ஆப்ஷனும் பெட்ரோல் பவர்டு 3XO வேரியன்ட்களின் ஆர்டரில் பெரும் பங்கை கொண்டுள்ளன.
மேலும் படிக்க: மஹிந்திரா XUV 3XO விமர்சனம்: ஃபர்ஸ்ட் டிரைவ்
விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா XUV 3XO -ன் அறிமுக விலை ரூ. 7.49 லட்சம் முதல் ரூ. 15.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) வரை இருக்கும். டாடா நெக்ஸான், கியா சோனெட், மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மற்றும் வரவிருக்கும் ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவி ஆகியவ்ற்றுடன் போட்டியிடும். மேலும் சப்-4மீ கிராஸ்ஓவர் மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் போன்றவற்றுக்கு மாற்றாகவும் உள்ளது.
மேலும் படிக்க: XUV 3XO AMT