சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2024 சுதந்திர தினத்தன்று அறிமுகமாகின்றது புதிய Mahindra Thar 5-door

மஹிந்திரா தார் ராக்ஸ் க்காக மார்ச் 28, 2024 07:26 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

இது 2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் இது விற்பனைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 15 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).

  • 5 டோர் தார் இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்தது.

  • 3-டோர் மாடலை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் நீண்ட வீல்பேஸ் மற்றும் இரண்டு கூடுதல் கதவுகள் இருக்கும்.

  • வெளிப்புறத் திருத்தங்களில் புதிய வட்ட வடிவ ஹெட்லைட்கள் மற்றும் புதிய வடிவிலான கிரில் ஆகியவை அடங்கும்.

  • ஸ்பை ஷாட்களின் அடிப்படையில் வழக்கமான தார் காரை விட நிறைய வசதிகள் கிடைக்கும்.

  • RWD மற்றும் 4WD செட்டப்களின் தேர்வுடன் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டையும் பெற எதிர்பார்க்கப்படுகிறது.

2024 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவி -களில் ஒன்றாக மஹிந்திரா தார் 5-டோர் இருக்கின்றது. மேலும் இது விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அதன் விலை விவரங்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மஹிந்திரா இப்போது ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்கான அழைப்பை விடுத்துள்ளது அநேகமாக இது தார் காருக்கான அறிமுகத்துக்கானது என்று நாங்கள் நம்புகிறோம். ஆகஸ்ட் 15 2020 அன்று வெளியிடப்பட்ட இரண்டாம் தலைமுறை தார் இந்தியாவின் சுதந்திர தினத்தன்று மஹிந்திராவின் சமீபத்திய வெளியீடுகள் மற்றும் காட்சிப்படுத்தல் நிகழ்வுகளுடன் இது ஒத்துப்போகிறது.

வடிவமைப்பு மற்றும் அளவுகளில் உள்ள வேறுபாடுகள்

3-கதவு மாடலின் நீளமான பதிப்பாக இருப்பதால் தார் 5-டோர் இரண்டு கூடுதல் கதவுகளுடன் நீண்ட வீல்பேஸை கொண்டிருக்கும். இந்த மாற்றங்கள் எஸ்யூவி -யின் நடைமுறைத் திறனை அதிகரிக்கும் இது குடும்பத்துக்கானதாகவும் மற்றும் சாகச வாகனமாக என மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அதன் வடிவமைப்பு தற்போதுள்ள தார் போலவே இருக்கும் என்றாலும் முந்தைய ஸ்பை ஷாட்கள் வட்ட வடிவ LED ஹெட்லைட்கள் மற்றும் புதிய வடிவிலான கிரில் போன்ற சில மாற்றங்கள் பரிந்துரைத்துள்ளன. இது 3-டோர் தார் -ல் கிடைக்காத ஃபிக்ஸ்டு மெட்டல் ஆப்ஷனையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலான கம்ஃபோர்ட்

புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட தார் வழக்கமான 3-டோர் தாரை விட கூடுதல் வசதிகளை கொண்டிருக்கும். சோதனை கார்களின் ஸ்பை போட்டோக்களின் அடிப்படையில் இது ஒரு பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோ ஏசி மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றுடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இது 6 ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு வசதிகளையும் பெறும்.

தொடர்புடையது: மஹிந்திரா Thar 3-door காரை விட கூடுதலாக இந்த 10 வசதிகளை Thar 5-door கொண்டிருக்கும்

பவர்டிரெயின்கள்

மஹிந்திரா தார் 5-டோர் காரில் அதன் 3-டோர் தாரில் உள்ள 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின்களை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது இது மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல்களை போலவே அவுட்புட்டை கொடுக்கும். இரண்டு இன்ஜின்களும் மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை பெறலாம். தார் 5-டோர் ரியர் வீல் டிரைவ் டிரைவ் (RWD) மற்றும் 4-வீல் டிரைவ் (4WD) ஆகிய இரண்டு ஆப்ஷன்களையும் வழங்கும்.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை

மஹிந்திரா தார் 5-டோர் 2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் வெளியிடப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இது இரண்டாவது ஜென் 3-டோர் தாரின் காலவரிசையைப் பின்பற்றினால் அக்டோபர் 2 ஆம் தேதி அதன் விலை விவரங்கள் வெளியிடப்படலாம். இதன் விலை ரூ.15 லட்சம் முதல் தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்). இது மாருதி சுஸூகி ஜிம்னி -க்கு ஒரு பெரிய மாற்றாக இருக்கும் மேலும் 5-டோர் ஃபோர்ஸ் கூர்க்கா உடன் போட்டியிடும்.

மேலும் படிக்க: மஹிந்திரா தார் ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on Mahindra தார் ROXX

K
kathiravan mohan
Mar 28, 2024, 8:37:59 AM

If any pre- booking available

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.13.99 - 24.89 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15 - 26.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.20 - 10.51 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை