• English
  • Login / Register

Mahindra Scorpio N கார்பன் எடிஷன் ரூ.19.19 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

mahindra scorpio n க்காக பிப்ரவரி 24, 2025 09:36 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 9 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹையர்-ஸ்பெக் Z8 மற்றும் Z8 L வேரியன்ட்கள் உடன் மட்டுமே கார்பன் எடிஷன் கிடைக்கும். இது வழக்கமான ஸ்கார்பியோ N -ன் Z8 மற்றும் Z8 L வேரியன்ட்களை விட ரூ.20,000 அதிகம்.

Scorpio N Carbon edition launched

  • பிளாக்-அவுட் எலமென்ட்களுடன் ஒரே மாதிரியான வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பில் மாற்றம் எதுவும் இல்லை.

  • கறுப்பு நிற அலாய் வீல்கள், விண்டோ கார்னிஷ் மற்றும் ரூஃப் ரெயில்ஸ் ஆகியவை கிடைக்கும்.

  • கேபினில் ஆல் பிளாக் தீம் உள்ளது மற்றும் இது இருக்கைகளில் கறுப்பு நிற லெதரெட் அப்ஹோல்ஸ்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

  • 8-இன்ச் டச் ஸ்கிரீன், 7-இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன் சீட்கள் ஆகியவை வசதிகளில் அடங்கும்.

  • பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் கேமரா, TPMS மற்றும் அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • வழக்கமான மாடலாக டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இரண்டையும் பெறுகிறது.

மஹிந்திரா ஸ்கார்பியோ N கார்பன் ரூ.19.19 லட்சம் முதல் ரூ.24.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரையிலான விலை விவரங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது Z8 மற்றும் Z8L வேரியன்ட்களின் 7-சீட்டர் பதிப்புகளுடன் கிடைக்கிறது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்களுடன் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் இரண்டிலும் கிடைக்கும். விரிவான வேரியன்ட் வாரியான விலை விவரங்கள் இங்கே:

வேரியன்ட்

வழக்கமான ஸ்கார்பியோ N

ஸ்கார்பியோ N கார்பன்

விலை வித்தியாசம்

Z8 பெட்ரோல் MT

ரூ.18.99 லட்சம்

ரூ.19.19 லட்சம்

+ ரூ 20,000

Z8 பெட்ரோல் AT

ரூ.20.50 லட்சம்

ரூ.20.70 லட்சம்

+ ரூ 20,000

Z8 டீசல் MT 2WD

ரூ.19.45 லட்சம்

ரூ.19.65 லட்சம்

+ ரூ 20,000

Z8 டீசல் AT 2WD

ரூ.20.98 லட்சம்

ரூ.21.18 லட்சம்

+ ரூ 20,000

Z8 டீசல் MT 4WD

ரூ.21.52 லட்சம்

ரூ.21.72 லட்சம்

+ ரூ 20,000

Z8 டீசல் AT 4WD

ரூ.20.98 லட்சம்

ரூ.23.44 லட்சம்

+ ரூ 20,000

Z8 L பெட்ரோல் MT

ரூ.20.70 லட்சம்

ரூ.20.90 லட்சம்

+ ரூ 20,000

Z8 L பெட்ரோல் AT

ரூ.22.11 லட்சம்

ரூ.22.31 லட்சம்

+ ரூ 20,000

Z8 L டீசல் MT 2WD

ரூ.21.10 லட்சம்

ரூ.21.30 லட்சம்

+ ரூ 20,000

Z8 L டீசல் AT 2WD

ரூ.22.56 லட்சம்

ரூ.22.76 லட்சம்

+ ரூ 20,000

Z8 L டீசல் MT 4WD

ரூ.23.13 லட்சம்

ரூ.23.33 லட்சம்

+ ரூ 20,000

Z8 L டீசல் AT 4WD

ரூ.24.69 லட்சம்

ரூ.24.89 லட்சம்

+ ரூ 20,000

அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை

கார்பன் என்ற பெயருக்கு ஏற்ப இது வழக்கமான ஸ்கார்பியோ N -லிருந்து உள்ளே-வெளியே நிறைய பிளாக் எலமென்ட்களுடன் வருகிறது. மாற்றங்களை இங்கே பார்ப்போம்:

வித்தியாசமானது என்ன?

Mahindra Scorpio N Carbon

மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார்பனின் வெளிப்புற வடிவமைப்பு வழக்கமான மாடலை போலவே உள்ளது. ஹெட்லைட்கள், டெயில் லைட்டுகள், LED DRL -கள் மற்றும் LED ஃபாக் லைட்ஸ் இரண்டு எஸ்யூவி பதிப்புகளிலும் ஒரே மாதிரியாக உள்ளன. 

இருப்பினும் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்ஸ், வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள் (ORVMகள்) மற்றும் ஜன்னல் கிளாடிங்க்ஸ் ஆகியவை கறுப்பு நிறத்தில் உள்ளன. மேலும் வழக்கமான ஸ்கார்பியோ N ஆனது சில்வர் ஃபினிஷ் கொண்ட முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டுகள் மற்றும் டோர் கிளாடிங், இப்போது கார்பன் பதிப்பில் டார்க் கிரே ஃபினிஷ் நிறத்தில் செய்யப்பட்டுள்ளன. வெளிப்புற டோர் ஹேண்டில்களில் டார்க் குரோம் ஆக்ஸென்ட் உள்ளது. 

Mahindra Scorpio N Carbon interior

வெளிப்புறத்தில் மாற்றங்கள் பெரிதாக இல்லை என்றாலும் கூட வழக்கமான மாடலைப் போலவே வடிவமைப்பு உள்ளது. ஆல் பிளாக் தீம் சேர்க்கப்பட்டுள்ளதால் உட்புறம் முற்றிலும் புதியதாக உள்ளது. மேலும் கார்பன் பிளாக் கலர் லெதரெட் இருக்கைகள் மற்றும் ஏசி வென்ட்கள் மற்றும் டச் ஸ்கிரீன் பேனலை சுற்றியுள்ள பிரஷ்டு அலுமினியம் டிரிம் ஆகியவற்றுடன் வருகிறது.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

Mahindra Scorpio N Carbon seats

வழக்கமான மாடலை போலவே இதிலும் வசதிகள் உள்ளன. எனவே இது 8-இன்ச் டச் ஸ்கிரீன், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 12-ஸ்பீக்கர் சோனி சவுண்ட் சிஸ்டத்துடன் வருகிறது. இது சிங்கிள்-பேன் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 6-வே பவர்டு அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், ஆட்டோ ஏசி, ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் வைப்பர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகளிலும் எந்த மாற்றங்களும் இல்லை. மற்றும் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், பின்புற பார்க்கிங் கேமரா, ஹில் ஹோல்ட் மற்றும் ஹில் டிசென்ட் கண்ட்ரோல் மற்றும் டிரைவர் டிரெளவுஸினெஸ் டிடெக்‌ஷன் போன்ற அம்சங்களை உள்ளடக்கியது. இது ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவையும் உள்ளன.

மேலும் படிக்க: Tata Harrier மற்றும் Tata Safari ஸ்டீல்த் எடிஷன் விலை ரூ. 25.09 லட்சமாக நிர்ணயம்

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

மஹிந்திரா ஸ்கார்பியோ N கார்பன் வழக்கமான மாடலின் அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது. விவரங்கள் இங்கே:

இன்ஜின்

2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

2.2 லிட்டர் டீசல் இன்ஜின்

பவர்

203 PS

175 PS

டார்க்

370 Nm (MT) / 380 Nm (AT)

370 Nm (MT) / 400 Nm (AT)

டிரான்ஸ்மிஷன்*

6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT

6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT

டிரைவ்டிரெய்ன்^

RWD

RWD / 4WD

*AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்; MT = மேனுவல் டிரான்ஸ்மிஷன்

^RWD = ரியர் வீல் டிரைவ்; 4WD = 4 வீல் டிரைவ்

போட்டியாளர்கள்

Mahindra Scorpio N Carbon

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N மற்ற நடுத்தர அளவிலான எஸ்யூவி -களான டாடா ஹாரியர், டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் மற்றும் ஹூண்டாய் அல்கஸார் போன்ற கார்களுடன் போட்டியிடுகிறது.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Mahindra scorpio n

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience