Mahindra Thar 5-door காரின் லோவர் லோயர்-ஸ்பெக் வேரியன்ட் சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது
published on மார்ச் 28, 2024 07:46 pm by shreyash for மஹிந்திரா தார் ராக்ஸ்
- 20 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய ஸ்பை ஷாட்கள் தார் 5-டோரின் லோயர்-ஸ்பெக் வேரியன்ட்டின் உட்புறத்தையும் காட்டுகின்றன.
-
மஹிந்திரா அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜினுடன் தாரின் இந்த வெர்ஷனை வழங்கும்.
-
இது ரியர்-வீல்-டிரைவ் (RWD) மற்றும் 4-வீல்-டிரைவ் (4WD) ஆகிய இரண்டு ஆப்ஷன்களிலும் வழங்கப்படலாம்.
-
அதன் 3-டோர் பதிப்பில் பெரிய டச் ஸ்கிரீன் டிரைவருக்கான ஆல் டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் சன்ரூஃப் உள்ளிட்ட கூடுதல் வசதிகளை பெறலாம்.
-
இதன் விலை ரூ.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா தார் 5-டோர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிப்பில் உள்ளது. இது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளா மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவி -களில் இதுவும் ஒன்றாகும். நீட்டிக்கப்பட்ட தார் சோதனைக் கார் பலமுறை காணப்பட்டது. புதிய எக்ஸ்ட்டீரியர் மற்றும் இன்ட்டீரியர் விவரங்களை வெளிப்படுத்துகிறது. இந்த நேரத்தில் தார் 5-டோர் காரை அதன் லோயர்-ஸ்பெக் வேரியன்ட்டின் விவரங்களும் தெரிய வந்துள்ளன.
ஸ்பை ஷாட் மூலமாக தெரிந்த விவரங்கள்
ஸ்பை ஷாட்டின் அடிப்படையில் மஹிந்திரா தார் 5-கதவின் டேஷ்போர்டில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. அதற்குப் பதிலாக ஒரு அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் கொடுக்கப்படலாம். இது தார் 5-டோர் லோவர்-ஸ்பெக் வேரியன்ட் ஒன்றாக இருக்கலாம் என்று தெரிவிக்கிறது. எஸ்யூவி -யின் இந்தக் குறிப்பிட்ட சோதனைக் கார் இன்னும் முன் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது பேஸ் மாடலாக இல்லாவிட்டாலும் லோவர்-ஸ்பெக் வேரியன்ட்டாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
மேலும் பார்க்க: Force Gurkha 5-door முதல் டீசர் வெளியானது, 2024 இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம்
தார் 5 டோர் காரின் இரண்டாவது வரிசையையும் பார்க்க முடிந்தது. ஸ்பை ஷாட்டில் ஒரு ஆர்ம்ரெஸ்ட் தெரியும். வெளியில் இருந்து பார்த்தால் தார் 3-டோர் பதிப்பில் காணப்படும் அதே அலாய் வீல்களும் உள்ளன.
எதிர்பார்க்கப்படும் வசதிகள்
மஹிந்திரா தார் 5 கதவின் ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களில் உள்ள அதன் தற்போதைய 3-டோர் பதிப்பை விட கூடுதல் வசதிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரிய டச் ஸ்கிரீன் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே சிங்கிள் பேன் சன்ரூஃப் ரியர் ஏசி வென்ட்கள் மற்றும் ரியர்வியூ மிரர் (IRVM) உள்ளே ஆட்டோ டிம்மிங் ஆகியவை அடங்கும். தார் 3-டோர் காரை விட தார் 5-டோர் காரில் என்ன கிடைக்கும் என்பது பற்றிய கூடுதல் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஒரு ரியர்வியூ கேமரா மற்றும் ஹையர் வேரியன்ட்களில் 360 டிகிரி கேமராவையும் பெறலாம். டிராக்ஷன் கன்ட்ரோல், ஹி டிசென்ட் கன்ட்ரோல் மற்றும் அனைத்து பயணிகளுக்கான சீட்பெல்ட் ரிமைண்டர் போன்ற வசதிகள் தற்போதுள்ள மஹிந்திரா தார் இருந்து கிடைக்கும்.
அதே இன்ஜின் ஆப்ஷன்கள்
மஹிந்திரா தாரின் பெரிய பதிப்பில் அதே பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை மஹிந்திரா அப்படியே கொடுக்கலாம். ஆனால் அவை அனைத்தும் தற்போதுள்ள 3-கதவு தாரை விட கூடுதல் பவர் அவுட்புட்டை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகிய இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம். இந்த யூனிட்கள் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும்.
தார் 5-டோர் ரியர் வீல் டிரைவ் (RWD) மற்றும் 4-வீல் டிரைவ் (4WD) டிரைவ் ட்ரெயின்கள் ஆகிய இரண்டு ஆப்ஷனையும் பெறலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா தார் 5-கதவு ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியிடப்படும். மேலும் இது 2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் வெளியிடப்படலாம். இதன் விலை ரூ. 15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம். இது ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோர் -காருக்கு போட்டியாக இருக்கும், மேலும் மாருதி ஜிம்னி -க்கு ஒரு பெரிய மாற்றாக இருக்கும்
மேலும் படிக்க: தார் ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful