• English
    • Login / Register

    பிப்ரவரி அறிமுகத்திற்கு முன்னதாக டீலர்ஷிப்களை வந்தடைந்தது Kia Syros

    க்யா சிரோஸ் க்காக ஜனவரி 21, 2025 09:54 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 72 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    கியா சைரோஸ் பிப்ரவரி 1 ஆம் தேதி விற்பனைக்கு வரும். பிப்ரவரி நடுப்பகுதியில் விநியோகம் தொடங்கும்.

    Kia Syros reaches dealerships

    பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் முதன்முறையாக கியா சைரோஸ் காட்சிப்படுத்தப்பட்டது. அதாவது பிப்ரவரி 1, 2025 அன்று அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக அருகிலுள்ள கியா டீலர்ஷிப்களில் சைரோஸ் எஸ்யூவி -யை நீங்கள் பார்க்கலாம். டீலர்ஷிப் -களில் இருந்து கியா சைரோஸின் சில படங்களை பெற்றுள்ளோம். மேலும் இந்த படங்களில் இருந்து நாம் பார்க்கக்கூடிய அனைத்தும் இங்கே உள்ளன.

    என்ன பார்க்க முடிகிறது?

    Kia Syros front
    Kia Syros side

    படம் பிடிக்கப்பட்டுள்ள மாடல் ஃப்ரோஸ்ட் ப்ளூ சாயலில் வருகிறது. இதில் கார் அறிமுகமானதிலிருந்து கார் தயாரிப்பாளரால் காட்சிப்படுத்தப்பட்டது. எல்இடி ஹெட்லைட்கள், வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள் (IVRM) மற்றும் LED டெயில் லைட்கள் போன்றவற்றை பார்க்க முடிகிறது. 360 டிகிரி கேமரா மற்றும்அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ஏடிஏஎஸ்) ரேடார் ஹவுஸிங்கை பார்க்க முடியவில்லை. 

    Kia Syros rear

    டெயில்கேட்டில் ஒரு ‘T-GDi’ பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இது இந்த கார் சைரோஸ் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது என்பதைக் குறிக்கிறது. உள்ளே 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனையும் பார்க்க முடியவில்லை.

    Kia Syros manual gearbox
    Kia Syros dual displays

    12.3-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் ஒரே அளவிலான டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்ட ஒரு பனோரமிக் டிஸ்பிளேவை பார்க்க முடிகிறது. ஆனால் டிஜிட்டல் ஏசி கன்ட்ரோல்களுக்கான 5-இன்ச் ஸ்கிரீனை பார்க்க முடியவில்லை. முன்புற மைய ஏசி வென்ட்களின் கீழ் ஏசி கன்ட்ரோல்கள் பிஸிக்கல் பட்டன்களாக வழங்கப்பட்டுள்ளன.

    Kia Syros front seats
    Kia Syros ventilated seats button

    உள்ளே சைரோஸ் டூயல்-டோன் புளூ மற்றும் கிரே கலர் கேபின் தீம் மற்றும் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் வருகிறது. மேலும் வென்டிலேஷன் உள்ள இருக்கைகளுக்கான பட்டன்கள் டோர்களில் காணப்படுகின்றன மற்றும் பின்புற ஜன்னல்கள் உள்ளிழுக்கும் சன்ஷேடுகளை கொண்டுள்ளன. இருப்பினும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ரியர்வியூ மிரர் (IRVM) உள்ளே ஆட்டோ டிம்மிங் ஆகியவை பார்க்க முடியவில்லை.

    Kia Syros dashboard

    காட்சிப்படுத்தப்பட்ட மாடல் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் கூடிய HTX வேரியன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் நமக்கு தெரிய வருகிறது. இருப்பினும் சைரோஸ் ஆனது HTX பிளஸ் மற்றும் HTX பிளஸ் (O) டிரிம்களிலும் கிடைக்கிறது. அவை வரிசையில் HTX வேரியன்ட்டிற்கு மேலே உள்ளன. ஆனால் டர்போ-பெட்ரோல் ஆப்ஷன் உடன் டூயல்-கிளட்ச் ஆட்டோமெட்டிக் (DCT) கியர்பாக்ஸுடன் மட்டுமே வருகிறது. 

    மேலும் படிக்க: ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் கியா -வின் பங்களிப்பு: அப்டேட்களின் எலக்ட்ரிக் கிராஸ்ஓவர், ஒரு MPV -யின் சிறப்பு வேரியன்ட் மற்றும் ஒரு புதிய சப்-4m எஸ்யூவி

    கியா சைரோஸ்: பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

    கியா சைரோஸ் கியா சோனெட்டிலிருந்து 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை கடன் வாங்குகிறது. விரிவான விவரங்கள் பின்வருமாறு:

    இன்ஜின்

    1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல்

    1.5 லிட்டர் டீசல்

    பவர்

    120 PS

    116 PS

    டார்க்

    172 Nm

    250 Nm

    டிரான்ஸ்மிஷன்

    6-ஸ்பீடு MT / 7-ஸ்பீடு DCT

    6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT

    கியா சைரோஸ்: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

    Kia Syros rear

    கியா சைரோஸ் ரூ 9.70 லட்சத்தில் இருந்து ரூ 16.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது மற்ற சப்-4எம் எஸ்யூவி -களான சோனெட், மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா XUV 3XO ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும். இது உள்ளிட்ட சில சிறிய எஸ்யூவி -களான ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ் மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றுடன் போட்டியிடும்.

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on Kia சிரோஸ்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience