Kia Sonet ஃபேஸ்லிஃப்ட்டின் சமீபத்திய டீஸர் காரில் புதிய அம்சங்கள் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது
published on டிசம்பர் 07, 2023 07:59 pm by rohit for க்யா சோனெட்
- 35 Views
- ஒரு கருத்தை எழுதுக
சமீபத்திய டீஸர், ஹூண்டாய் வென்யூ N லைன் காருக்கு பிறகு புதிய சோனெட் அதன் பிரிவில் ADAS -ஐ பெறும் இரண்டாவது மாடலாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
-
சமீபத்திய டீஸர் சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டிற்கான செல்டோஸில் இருப்பதைப் போன்ற டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளேவையும் காட்டுகிறது.
-
வெளிப்புற மாற்றங்களில் LED ஃபாக் லைட்ஸ், கனெக்டட் மற்றும் புதிய வடிவிலான LED டெயில்லைட்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும்.
-
கேபின் புதிய அப்ஹோல்ஸ்டரி மற்றும் புதிய கிளைமேட் கன்ட்ரோல் பேனலை பெற வாய்ப்புள்ளது.
-
அதே 10.25 இன்ச் டச் ஸ்கிரீன், சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகளுடன் வரும்.
-
பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் இன்னும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் கிடைக்கும்.
-
2024 -ன் தொடக்கத்தில் இது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; விலை 8 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.
ஃபேஸ்லிஃப்ட் கியா சோனெட் காரை நாம் இன்னும் சில நாட்களில் பார்க்கவிருக்கிறோம் . நாம் காரின் வெளியீட்டுக்காக காத்திருக்கும் போது, கியா நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட எஸ்யூவி -யின் டீஸரை வெளியிடத் தொடங்கியுள்ளது. இது காரில் மாற்றப்பட்ட விஷயங்களை நமக்கு காட்டுகிறது. புதிய சோனெட் -ன் சமீபத்திய டீஸர் மேலும் விவரங்களைக் காட்டுகிறது.
புதிய விவரங்கள்
சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய டீஸர் வெளிப்படுத்திய மிகப்பெரிய அம்சம், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஆட்டோ-எமர்ஜென்சி பிரேக்கிங் (AEB) இல் உள்ள ‘கொலிஷன் வார்னிங்’ வசதியைக் கொண்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில், ஹூண்டாய் வென்யூ N லைன் காரை தவிர ADAS -ஐ வழங்கும் மற்றொரு மாடலாக இது இருக்கும்.
முந்தைய டீசரில் ஓரளவு மட்டுமே தெரிந்தாலும், சமீபத்திய வீடியோ கிளிப் செல்டோஸ் போன்று டிரைவருக்கன டிஜிட்டல் டிஸ்ப்ளேவும் இதிலும் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. பின்புறத்தில், சோனெட் ஃபேஸ்லிஃப்ட் ஒரு புதிய, கனெக்டட் LED டெயில் லேம்ப் செட்டப்பை பெறும்.
முந்தைய டீசரின்படி, 2024 சோனெட்டில் புதிய வடிவிலான கிரில், நீளமான ஃபாங் வடிவ LED DRL -கள், இடமாற்றம் செய்யப்பட்ட மற்றும் நேர்த்தியான LED ஃபாக் லைட்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் இருக்கும் என்று கியா -வின் டீஸர் வெளிப்படுத்தியுள்ளது.
எதிர்பார்க்கப்படும் கேபின் அப்டேட்கள்
உட்புறத்தில், சோனெட் ஃபேஸ்லிஃப்ட் இப்போதுள்ள மாடலின் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் செட்டப்புடன் தொடரும், அதே நேரத்தில் ஒரு புதிய கிளைமேட் கன்ட்ரோல் யூனிட் மற்றும் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.
டிரைவருக்கான் டிஜிட்டல் டிஸ்ப்ளேவை தவிர கூடுதலாக 360 டிகிரி கேமராவும் கொடுக்கப்படலாம். வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், க்ரூஸ் கன்ட்ரோல், ஒரு சன்ரூஃப் மற்றும் ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றுடன் சப்-4m எஸ்யூவி -யை கியா தொடர்ந்து வழங்கும்.
ADAS -ஐ தவிர, பாதுகாப்புக்காக ஆறு ஏர்பேக்குகள் (இப்போது ஸ்டாண்டர்டானது), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவை இருக்கும்.
மேலும் படிக்க: 2024 இல் இந்தியாவிற்கான வரவிருக்கும் கார்கள்: அடுத்த ஆண்டு சாலைகளில் நீங்கள் பார்க்கக்கூடிய அனைத்தும்
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
சோனெட்டின் பவர்டிரெயின்களில் கியா எந்த மாற்றத்தையும் செய்யாது. எஸ்யூவி பின்வரும் ஆப்ஷன்களுடன் தொடரும்:
விவரங்கள் |
1.2 லிட்டர் பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1.5 லிட்டர் டீசல் |
பவர் |
83 PS |
120 PS |
116 PS |
டார்க் |
115 Nm |
172 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT |
6-ஸ்பீடு iMT/ 7-ஸ்பீடு DCT |
6-ஸ்பீடு iMT/ 6-ஸ்பீடு AT |
iMT- க்கு பதிலாக டீசல் இன்ஜினுடன் வழக்கமான 6-ஸ்பீடு MT ஆப்ஷனை கியா மீண்டும் கொண்டு வரக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது (கிளட்ச் பெடல் இல்லாமல் மேனுவல் டிரான்ஸ்மிஷன்). அது உண்மையா என்பதைப் பார்க்க காத்திருக்க வேண்டும் .
விலை விவரங்கள் ?
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கியா சோனெட் 2024 -ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும்போது அதன் ஆரம்ப விலை ரூ. 8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, நிஸான் மேக்னைட், மஹிந்திரா XUV300, ரெனால்ட் கைகர் மற்றும் மாருதி ஃப்ரான்க்ஸ் கிராஸ்ஓவர் ஆகியவற்றுடன் இது போட்டியிடும்.
மேலும் படிக்க: சோனெட் டீசல்