கிராண்ட் i10 நியோஸ் -ஐ விட இந்த 5 கூடுதல் அம்சங்களைப் பெற்றுள்ள ஹூண்டாய் எக்ஸ்டர்
published on ஜூன் 19, 2023 03:56 pm by rohit for ஹூண்டாய் எக்ஸ்டர்
- 107 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹூண்டாய் எக்ஸ்டெர், அதன் ஹேட்ச்பேக் உடன்பிறப்புடன் பொதுவான சில விஷயங்களையும் கொண்டுள்ளது.
நாங்கள் சற்றும் முன்னர்தான் படங்களில் ஹூண்டாய் எக்ஸ்டரின் கேபினின் எங்கள் முதல் விரிவான பார்வையைப் வழங்கியுள்ளோம். மைக்ரோ எஸ்யூவி உடன் வழங்கப்படும் பல அம்சங்களையும் கார் தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியது. எக்ஸ்டர் தயாரிப்பு வரிசையில் கிராண்ட் i10 நியோஸ்-க்கு மேல் இடம் பெற்றிருக்கும் என்பதால், அதன் அனுமானிக்கப்பட்ட பிளாட்ஃபார்ம் உடன்பிறப்புகளுடன் புதிய அம்சங்களுடன் வருகிறது.
கிராண்ட் i10 நியோஸைவிட எக்ஸ்டர் கூடுதலாக வழங்கும் முக்கிய ஐந்து அம்சங்களைப் பார்ப்போம்:
டிஜிட்டைஸ்டு டிரைவர்’ஸ் டிஸ்ப்ளே
கிராண்ட் i10 நியோஸ்-இன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
ஃபேஸ்லிப்டட் வென்யூ -விலிருந்து அதே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் எக்ஸ்டரை ஹூண்டாய் பொருத்தியுள்ளது. டயர் அழுத்தங்கள், ஓடோமீட்டர் ரீடிங் மற்றும் எரிபொருள் காலியாகும் தூரம் போன்ற முக்கியத் தகவல்களைக் காட்ட, மையத்தில் ஒரு வண்ண TFT MID யைப் பெறுகிறது. இதற்கிடையில், கிராண்ட் i10 நியோஸ் இரண்டு அனலாக் டயல்களின் மையத்தில் மட்டுமே வண்ண TFT டிஸ்பிளேயைப் பெறுகிறது.
ஸ்டாண்டர்டாக ஆறு ஏர்பேக்குகள்
ஃபேஸ்லிப்டட் கிராண்ட் i10 நியோஸ் ஆறு ஏர்பேக்குகளில் நான்கை ஸ்டாண்டர்டாக வழங்குகிறது, ஹூண்டாய் கூடுதல் தூரம் முன்னேறி எக்ஸ்டருக்கு ஆறு ஏர்பேக்குகளை நிலையாக வழங்கியுள்ளது. இதுவும் அதன் நேரடி போட்டியாளரான டாடா பன்ச்-ஐ விட எக்ஸ்டரில் இருக்கும் நன்மைகளில் ஒன்றாகும்.
இரட்டை கேமரா டேஷ்கேம்
வென்யூ N லைன் உபகரணமாக அல்லாமல் அதிகாரப்பூர்வ அம்சங்களின் பட்டியலில் டேஷ்கேமை செட் அப்புடன் வரும் ஹூண்டாய் இந்தியாவின் முதல் காராக மாறியது. ஹூண்டாய் இப்போது எக்ஸ்டர் டூயல்-டிஸ்பிளே ஒரு யூனிட் உடன் கிடைக்கும் என்று உறுதி செய்துள்ளது, இது அவசர சூழ்நிலைகளில் உதவிக்கு வரக்கூடும் , உங்கள் பயணங்களை பதிவு செய்ய அல்லது நீண்ட மற்றும் சாகச பயணங்களை ஆவணப்படுத்த இது உதவும்.
மேலும் காணவும்: முதன் முதலாக கேமராவின் கண்களுக்கு சிக்கிய, தோற்றத்தில் பொலிவு கூட்டப்பட்ட ஹூண்டாய் i20 N லைன்
சிங்கிள்-பேன் சன்ரூஃப்
ஹூண்டாயின் புதிய என்ட்ரி-லெவல் எஸ்யூ -யின் கவர்ச்சியானது ஒற்றை-பேன் சன்ரூஃப்-ஐ சேர்ப்பதன் மூலம் அதிகரித்துள்ளது, இது அதனை கிராண்ட் i10 நியோஸ் மட்டுமின்றி, பன்ச் மாடலில் இருந்தும் வேறுபடுத்துகிறது. இது இந்தியாவில் சன்ரூஃப் பொருத்தப்பட்ட மிகச்சிறிய காராகக் கூட இருக்கலாம்.
பகுதியளவு தோலினால் ஆன இருக்கைகள்
டாப்-ஸ்பெக் வேரியன்ட்களில் கூட துணியினால் ஆன இருக்கைகளைப் பெறும் கிராண்ட் ஐ10 நியோஸ் போலல்லாமல் - எக்ஸ்டெர் பகுதியளவுக்கு தோலால் ஆன -இருக்கைகளுடன் வரும். எக்ஸ்டெர் ஆல் பிளாக் கேபின் தீம் கொண்டிருக்கும் போது, ஹேட்ச்பேக் டூயல்-டோன் இன்டீரியர் ஆப்ஷனையும் பெறுகிறது.
தொடர்புடையவை: ஹூண்டாய் எக்ஸ்டர் நீங்கள் அதற்காக காத்திருக்கப் போகிறீர்களா அல்லது அதன் போட்டிக் கார்களில் ஒன்றை தேர்ந்தெடுக்க உள்ளீர்களா ?
முக்கிய ஒற்றுமைகள்
ஹூண்டாய் எக்ஸ்டருக்கு கணிசமான வித்தியாசமான கேபின் மற்றும் வெளிப்புற வடிவமைப்பைக் கொடுத்திருந்தாலும், கிராண்ட் ஐ10 நியோஸுடன் இன்னும் சில முக்கிய பொதுவான அம்சங்களைக் கொண்டுள்ளது.
எக்ஸ்டர் ஆனது கிராண்ட் i10 நியோஸ் போன்ற 8-இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது அதே வீல்பேஸ் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களையும் பெறுகிறது: மேனுவல் மற்றும் AMT தேர்வுடன் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், அத்துடன் CNG மாற்றும் கிடைக்கிறது.
அறிமுகம் மற்றும் விலை விவரங்கள்
ஹூண்டாய் எக்ஸ்டர் ஜூலை 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. விலை ரூ.6 லட்சமாக (எக்ஸ் ஷோரூம்) நிர்ணயிக்கப்படலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். டாடா பன்ச் உடன், எக்ஸ்டரும் சிட்ரோன் சி3, மாருதி ஃப்ரான்க்ஸ், நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்கவும்: ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் AMT