சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Hyundai Creta காருக்கு மாடல் இயர் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது

shreyash ஆல் மார்ச் 03, 2025 11:13 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

மாடல் ஆண்டின் (MY25) அப்டேட்டின் ஒரு பகுதியாக கிரெட்டா இப்போது EX(O) மற்றும் SX பிரீமியம் என இரண்டு புதிய வேரியன்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் கிரெட்டா நாட்டில் அதிகம் விற்பனையாகும் மற்றும் மிகவும் பிரபலமான எஸ்யூவி -களில் ஒன்றாக இருக்கிறது. இது மிரட்டலான எஸ்யூவி தோற்றம், ஒரு விரிவான அம்சம் பட்டியல் மற்றும் சக்திவாய்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. ஹூண்டாய் இப்போது இந்த எஸ்யூவி -க்கான மாடல் இயர் அப்டேட்களை கொடுத்துள்ளது. இப்போது EX(O) மற்றும் SX பிரீமியம் ஆகிய இரண்டு புதிய வேரியன்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் SX(O) உட்பட தற்போதுள்ள சில வேரியன்ட்களிலுள்ள வசதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கிரெட்டாவின் புதிய டிரிம்களின் விலை விவரங்கள் மற்றும் அப்டேட்களை இங்கே பார்ப்போம்.

EX(O)

வேரியன்ட்

வழக்கமான EX விலை

EX(O) விலை

வித்தியாசம்

1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் MT

ரூ.12.32 லட்சம்

ரூ.12.97 லட்சம்

+ ரூ 65,000

1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் சிவிடி

கிடைக்காது

ரூ.14.37 லட்சம்

கிடைக்காது

1.5 லிட்டர் டீசல் எம்டி

ரூ.13.92 லட்சம்

ரூ.14.57 லட்சம்

+ ரூ.65,000

1.5 லிட்டர் டீசல் ஏடி

கிடைக்காது

ரூ.15.97 லட்சம்

கிடைக்காது

  • புதிய EX(O) வேரியன்ட் வழக்கமான EX வேரியன்ட்டுக்கு மேலே உள்ளது, மற்றும் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது.

  • இது வழக்கமான EX டிரிம் உடன் ஒப்பிடும் போது பனோரமிக் சன்ரூஃப் மற்றும் LED ரீடிங் லைட்கள் உள்ளன.

  • முன்னதாக S(O) என்பது பனோரமிக் சன்ரூஃபின் என்ட்ரி-லெவல் டிரிம் ஆகும். இதன் விலை ரூ.14.47 லட்சம் ஆக உள்ளது. இப்போது இது .5 லட்சம் வரை குறைவான விலையில் கிடைக்கிறது.

  • இது பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன்களின் அந்தந்த ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடனும் கிடைக்கிறது.

  • S(O) CVT என்பது கிரெட்டாவின் என்ட்ரி லெவல் பெட்ரோல் ஆட்டோமெட்டிக் வேரியன்ட் ஆகும். இப்போது, ​​EX(O) CVT முந்தையதை விட ரூ.1.6 லட்சம் குறைவான விலையில் கிடைக்கும்.

  • அதேபோல S(O) டீசல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டை விட EX(O) டீசல் ஆட்டோமேட்டிக் ரூ.1.58 லட்சம் விலை குறைவானதாகும்.

SX பிரீமியம்

வேரியன்ட்

SX டெக் விலை

SX பிரீமியம் விலை

வித்தியாசம்

1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் MT

ரூ.16.09 லட்சம்

ரூ.16.18 லட்சம்

+ ரூ 9,000

1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் சிவிடி

ரூ.17.59 லட்சம்

ரூ.17.68 லட்சம்

+ ரூ 9,000

1.5 லிட்டர் டீசல் எம்டி

ரூ.17.67 லட்சம்

ரூ.17.77 லட்சம்

+ ரூ 10,000

  • புதிய SX ஆனது பிரீமியம் வேரியன்ட் கிரெட்டாவின் SX டெக் மற்றும் SX(O) டிரிம்களுக்கு இடையே விற்பனை செய்யப்படுகிறது.

  • வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 8-வே பவர்டு டிரைவர் சீட், 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை உள்ளன.

  • இது பெட்ரோல் மேனுவல், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மற்றும் டீசல் மேனுவல் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.

SX(O)

வேரியன்ட்

பழைய விலை

புதிய விலை

வித்தியாசம்

1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் MT

ரூ.17.38 லட்சம்

ரூ.17.46 லட்சம்

+ ரூ 8,000

1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் CVT

ரூ.18.84 லட்சம்

ரூ.18.92 லட்சம்

+ ரூ 8,000

1.5 லிட்டர் டீசல் MT

ரூ.18.97 லட்சம்

ரூ.19.05 லட்சம்

+ ரூ 8,000

1.5 லிட்டர் டீசல் AT

ரூ.20 லட்சம்

ரூ.20 லட்சம்

வித்தியாசம் இல்லை

1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் DCT

ரூ.20.11 லட்சம்

ரூ.20.19 லட்சம்

+ ரூ 8,000

  • தற்போதுள்ள கிரெட்டாவின் SX(O) வேரியன்ட் இப்போது ரூ.8,000 வரை விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் டீசல் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

  • SX(O) டிரிம் இப்போது ரெயின் சென்ஸிங் வைப்பர், பின் இருக்கைகளுக்கான வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஸ்கூப் இருக்கைகள் உள்ளன.

பிற அப்டேட்கள்

S(O) -லிருந்து ஹூண்டாய் கிரெட்டா இப்போது ஸ்மார்ட் கீ வசதியுடன் வருகிறது. மேலும் டைட்டன் மேட் கிரே மற்றும் ஸ்டாரி நைட் வெளிப்புற வண்ண ஆப்ஷன்களுடன் கிரெட்டாவின் அனைத்து வேரியன்ட்களிலும் இது கிடைக்கும்.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

டூயல் 10.25-இன்ச் ஸ்கிரீன்கள், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, டூயல் ஜோன் ஏசி மற்றும் முன் இருக்கைகளுக்கான வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றுடன் இது வருகிறது. இதில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் ஈபிடி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (டிபிஎம்எஸ்) மற்றும் ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள் போன்ற வசதிகள் உள்ளன. இது அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங், ஆட்டோமெட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் போன்ற லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -கள் உடன் வருகிறது.

இன்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லை

ஹூண்டாய் கிரெட்டா 3 இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. விவரங்கள் இங்கே:

இன்ஜின்

1.5 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல்

1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

பவர்

115 PS

160 PS

116 PS

டார்க்

144 Nm

253 Nm

250 Nm

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT, CVT

7-ஸ்பீடு DCT

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

விலை வரம்பு மற்றும் போட்டியாளர்கள்

ஹூண்டாய் கிரெட்டாவின் விலை ரூ.11.11 லட்சம் முதல் ரூ.20.42 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது. இது கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், எம்ஜி ஆஸ்டர், ஸ்கோடா குஷாக், மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

Share via

Write your Comment on Hyundai கிரெட்டா

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்பேஸ்லிப்ட்
Rs.65.90 லட்சம்*
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.10 - 11.23 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.18.99 - 32.41 லட்சம்*
புதிய வேரியன்ட்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை