அறிமுகத்திற்கு முன்னதாக Volkswagen Tiguan R-Line காரின் பாதுகாப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
dipan ஆல் ஏப்ரல் 02, 2025 04:52 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 9 Views
- ஒரு கருத்தை எழுதுக
2025 டிகுவான் ஆர்-லைன் வரும் ஏப்ரல் 14 -ம் தேதி அன்று வெளியிடப்படவுள்ளது. மற்றும் இந்தியாவில் ஃபோக்ஸ்வேகனின் முதல் ஆர்-லைன் மாடலாக இருக்கும்.
-
பாதுகாப்புக்காக 9 ஏர்பேக்ஸ், TPMS, நான்கு டிஸ்க் பிரேக்குகள் மற்றும் லெவல்-2 ADAS ஆகியவை இருக்கின்றன.
-
எஸ்யூவியில் 12.9 இன்ச் டச் ஸ்கிரீன், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 3-ஜோன் ஆட்டோ ஏசி ஆகியவை இருக்கும்.
-
பனோரமிக் சன்ரூஃப், டூயல் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பின் இருக்கைகளில் மசாஜ் ஃபங்ஷன் ஆகிய வசதிகள் இருக்கும்.
-
பழைய மாடலுடன் ஒப்பிடுகையில் 14 PS அதிகமாக உற்பத்தி செய்யும் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் இதில் கொடுக்கப்படவுள்ளது
-
விலை ரூ.55 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைன் காரின் இன்ஜின் ஆப்ஷன் பிறகு, சிறந்த வசதிகள் மற்றும் கலர் ஆப்ஷன்கள் ஆகிய விவரங்களை கார் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இப்போது எஸ்யூவி -யின் சில சிறந்த பாதுகாப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. டிகுவான் ஆர்-லைன் பெறும் முக்கிய பாதுகாப்பு வசதிகளின் விவரங்களை இங்கே பார்ப்போம்:
உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகள்
வரவிருக்கும் ஃபோக்ஸ்வேகன் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி பின்வரும் பாதுகாப்பு வசதிகள் இருக்கும்:
-
9 ஏர்பேக்ஸ்
-
டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)
-
ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல்
-
நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள்
-
லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளுடன் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்கள் (ADAS)
இவை மட்டுமின்றி மேலும் சில பாதுகாப்பு வசதிகளும் கொடுக்கப்படலாம் அவை குறித்த விவரங்கள் எஸ்யூவி -யின் அறிமுகத்தின் போது தெரியவரும்.
இதனுடன் ஜெர்மன் கார் தயாரிப்பாளர் எஸ்யூவி ஆக்டிவ் சஸ்பென்ஷன் அமைப்புடன் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இது சவாரி தரத்தை முன்பை விட வசதியானதாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற வசதிகள்
12.9-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே, 3-ஜோன் ஆட்டோ ஏசி, 30-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் மசாஜ் ஃபங்ஷன் மற்றும் லும்பார் சப்போர்ட் உடன் ஸ்போர்ட்டியரான சீட்கள் உள்ளிட்ட வசதிகளுடன் வரும். இது டூயல் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பார்க் அசிஸ்ட் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
மேலும் பார்க்க: புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைன் மற்றும் பழைய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் படங்களில் ஒப்பீடு
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
டிகுவான் ஆர்-லைன் பழைய மாடலின் அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் வரும், ஆனால் அதிக பவரை கொடுக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. விரிவான விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
204 PS (+14 PS) |
டார்க் |
320 Nm (முன்பு போலவே) |
டிரான்ஸ்மிஷன் |
7-ஸ்பீடு DCT* |
டிரைவ்டிரெய்ன் |
ஆல்-வீல் டிரைவ் (AWD) |
*DCT = டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைன் இந்தியாவில் ஏப்ரல் 14, 2025 அன்று விற்பனைக்கு வரும். மற்றும் இதன் விலை ரூ. 55 லட்சத்தில் இருந்து தொடங்கும் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் டுஸான், ஜீப் காம்பஸ் மற்றும் சிட்ரோன் சி5 ஏர்கிராஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.