சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2023 ஆண்டில் குளோபல் NCAP -ல் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட 7 இந்திய கார்களின் பட்டியல் இங்கே

published on டிசம்பர் 29, 2023 04:58 pm by shreyash for மாருதி ஆல்டோ கே10

கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட 7 கார்களில், 5 கார்கள் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.

இந்தியாவில் வாகனப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு காரை வாங்க முடிவு செய்யும் வாடிக்கையாளர்களும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். 6 ஏர்பேக்குகள், அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் அல்லது எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பல கார்கள் இந்த ஆண்டு இந்த பெற்றுள்ளன. 2023 ஆம் ஆண்டில், குளோபல் NCAP மாருதி, ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன், ஹூண்டாய், மற்றும் டாடா உட்பட மொத்தம் 7 இந்திய-ஸ்பெக் கார்களை கிராஷ்-டெஸ்ட் செய்தது. அவற்றின் முடிவுகளை சுருக்கமாகப் பார்ப்போம். மேலும், இந்தியாவின் சொந்த கிராஷ் டெஸ்ட் ஏஜென்சியான பாரத் NCAP செயல்பாட்டுக்கு வந்து விட்டதால், குளோபல் NCAP இந்தியா-ஸ்பெக் கார்களை இனிமேல் சோதனை செய்யாது.

பொறுப்பு துறப்பு: 2022 ஆம் ஆண்டில், குளோபல் NCAP அதன் மதிப்பீட்டு விதிமுறைகளை புதுப்பித்தது, கார்களுக்கான சைடு போல் மற்றும் பாதசாரி சோதனைகளுடன் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோலை (ESC) சேர்க்கப்பட்டிருப்பதை கட்டாயமாக்கியது. இந்த மேம்படுத்தப்பட்ட குளோபல் NCAP நெறிமுறைகளின்படியே இந்த அறிக்கையின் முடிவுகள் தரப்பட்டுள்ளன. மேலும் தகவலுக்கு, இங்கே பாருங்கள்.

Maruti Wagon R

மதிப்பீடு

மதிப்பெண்

பெரியவர்களுக்கான பாதுகாப்பு

1-நட்சத்திரம்

19.69 / 34

குழந்தைகளுக்கான பாதுகாப்பு

0-நட்சத்திரம்

3.40 / 49

தற்போதைய தலைமுறை மாருதி வேகன் R 2019 ஆண்டில் குளோபல் NCAP -ல் முதன்முதலில் சோதிக்கப்பட்டது, இதில் பெரியவர்களுக்கான மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் தலா 2 நட்சத்திரங்களைப் பெற்றது. குளோபல் NCAP -ன் மேம்படுத்தப்பட்ட மதிப்பீட்டு நெறிமுறைகளின் கீழ் 2023 ஆம் ஆண்டில் மாருதி ஹேட்ச்பேக் மீண்டும் சோதிக்கப்பட்டது, மேலும் இந்த கார் வயது வந்தோருக்கான பாதுகாப்பில் 1 நட்சத்திரத்தைப் பெற்றுள்ளது மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் எந்த நட்சத்திரமும் கிடைக்கவில்லை. ஹேட்ச்பேக்கின் ஃபுட்வெல் மற்றும் பாடி ஷெல் இரண்டும் நிலையற்றவை ஆக மதிப்பிடப்பட்டது.

மாருதி வேகன் R காரில் இரட்டை முன் ஏர்பேக்குகள், ABS உடன் EBD, பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் (AMT வேரியன்ட்களில் மட்டும்) போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

இதையும் பார்க்கவும்: டிராஃபிக்கில் மாட்டிக் கொள்ளும் போது உங்கள் காரை பாதுகாப்பதற்கான 7 வழிகள்

Maruti Alto K10

மதிப்பீடு

மதிப்பெண்

பெரியவர்களுக்கான பாதுகாப்பு

2-நட்சத்திரம்

21.67 / 34

குழந்தைகளுக்கான பாதுகாப்பு

0-நட்சத்திரம்

3.52 / 49

குளோபல் NCAP ஆல் கிராஷ்-டெஸ்ட் செய்யப்பட்ட மற்றொரு மாருதி மாருதி ஆல்டோ கே10. மாருதி வேகன் R காரை விட கூடுதலாக பெரியவர்களுக்கான பாதுகாப்பு (ஏஓபி) மதிப்பெண் பெற்றிருந்தாலும், என்ட்ரி லெவல் மாருதி பெரியவர்களுக்கான பாதுகாப்பில் வெறும் 2 நட்சத்திரங்களைப் பெற்றது. குழந்தைகளுக்கான பாதுகாப்பில், ஆல்டோ K10 ஒரு நட்சத்திரத்தைக் கூட பெறத் தவறிவிட்டது. பாடி-ஷெல் ஒருமைப்பாடு நிலையானதாகக் கருதப்பட்டாலும், மேலும் சுமைகளைத் தாங்கும் திறன் கொண்டதாக இருந்தாலும், அதன் ஃபுட்வெல் பகுதி நிலையற்றதாக மதிப்பிடப்பட்டது.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, மாருதி ஆல்டோ K10 ஆனது இரட்டை முன் ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ரிவர்சிங் கேமரா மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Volkswagen Virtus Skoda Slavia

மதிப்பீடு

மதிப்பெண்

பெரியவர்களுக்கான பாதுகாப்பு

5-நட்சத்திரம்

29.71 / 34

குழந்தைகளுக்கான பாதுகாப்பு

5-நட்சத்திரம்

42/49

ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா 2023 ஆண்டில் குளோபல் NCAP -ல் க்ராஷ்-டெஸ்ட் செய்யப்பட்டன. இரண்டு செடான்களும் கட்டமைப்பு தளங்கள் (MQB A0IN) மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை பகிர்ந்து கொள்கின்றன. இரண்டு முன் ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டிருந்தாலும், விர்ட்டஸ் மற்றும் ஸ்லாவியா இரண்டும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் ஈர்க்கக்கூடிய 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றன. இரண்டு செடான்களின் பாடி ஷெல் மற்றும் ஃபுட்வெல் பகுதி நிலையானதாகவும் மேலும் லோடிங்குகளை தாங்கும் திறன் கொண்டதாகவும் கருதப்பட்டது.

இரண்டு செடான்களிலும் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

இதையும் பார்க்கவும்: புதிய முரட்டுதனமான தோற்றத்துடன் ஹோண்டா எலிவேட் ஃபீல்ட் எக்ஸ்ப்ளோரர் கான்செப்ட் காரின் முன்னோட்டம் ஜப்பானில் வெளியிடப்பட்டது

Hyundai Verna

மதிப்பீடு

மதிப்பெண்

பெரியவர்களுக்கான பாதுகாப்பு

5-நட்சத்திரம்

28.18 / 34

குழந்தைகளுக்கான பாதுகாப்பு

5-நட்சத்திரம்

42/49

ஹூண்டாய் வெர்னா 6 ஏர்பேக்குகள் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைப் பெற்று, 2023 ஆண்டில் ஒரு ஜெனரேஷன் அப்டேட் கொடுக்கப்பட்டது. குளோபல் NCAP க்ராஷ் டெஸ்டில், வெர்னா, பெரியவர்களுக்கான மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் முழு 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்ற, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஹூண்டாய் ஆனது. 6 ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டிருந்தாலும், VW-ஸ்கோடா செடான்களை விட வெர்னா குறைந்த பெரியவர்களுக்கான பாதுகாப்பை (AOP) கொண்டிருந்தது. இருப்பினும், மூன்று VW-ஸ்கோடா செடான்கள் - வெர்னா, விர்ட்டஸ் மற்றும் ஸ்லாவியா - குழந்தைகளுக்கான பாதுகாப்பில் (COP) சமமான மதிப்பெண்களைப் பெற்றன.

வெர்னாவின் பாதுகாப்பு கருவியில் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), முன் பார்க்கிங் சென்சார்கள், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவையும் அடங்கும்.

Tata Harrier Safari

மதிப்பீடு

மதிப்பெண்

பெரியவர்களுக்கான பாதுகாப்பு

5-நட்சத்திரம்

33.05 / 34

குழந்தைகளுக்கான பாதுகாப்பு

5-நட்சத்திரம்

45 / 49

டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி இரண்டுக்கும் 2023 ஆண்டில் மிட்லைஃப் அப்டேட் கொடுக்கப்பட்டது. புதிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மாடல்களிலும், ஹாரியர் மற்றும் சஃபாரி வயது வந்தோருக்கான பாதுகாப்பு (AOP) மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு (COP) ஆகியவற்றில் அதிக மதிப்பெண்களைப் பெற்றன, ஒவ்வொன்றும் இரண்டு வேரியன்ட்களிலும் 5-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றன.

டாடா ஹாரியர் மற்றும் சஃபாரியில் ஏழு ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக 6), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) , அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது.

இவை அனைத்தும் 2023 -ல் குளோபல் NCAP ஆல் கிராஷ்-டெஸ்ட் செய்யப்பட்ட அனைத்து இந்தியா-ஸ்பெக் மாடல்களாகும். இனி இந்தியாவில் விற்கப்படும் கார்கள் பாரத் NCAP இலிருந்து பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெறும், அதன் சோதனை வழிகாட்டுதல்கள் புதுப்பிக்கப்பட்ட குளோபல் NCAP விதிமுறைகளுக்கு இணையாக இருக்கும். ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார்களின் சோதனை மதிப்பெண்களை இங்கே காணலாம். அடுத்து எந்த காரின் கிராஷ் டெஸ்ட்டை பார்க்க விரும்புகிறீர்கள்? கீழே கமென்ட்டில் தெரிவியுங்கள்.

மேலும் படிக்க: மாருதி Alto K10 ஆன் ரோடு விலை

s
வெளியிட்டவர்

shreyash

  • 171 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது மாருதி Alto K10

Read Full News

explore similar கார்கள்

வோல்க்ஸ்வேகன் விர்டஸ்

Rs.11.56 - 19.41 லட்சம்* get சாலை விலை
பெட்ரோல்20.8 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

ஸ்கோடா ஸ்லாவியா

Rs.11.53 - 19.13 லட்சம்* get சாலை விலை
பெட்ரோல்19.36 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

டாடா ஹெரியர்

Rs.15.49 - 26.44 லட்சம்* get சாலை விலை
டீசல்16.8 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

ஹூண்டாய் வெர்னா

Rs.11 - 17.42 லட்சம்* get சாலை விலை
பெட்ரோல்18.6 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

மாருதி வாகன் ஆர்

Rs.5.54 - 7.38 லட்சம்* get சாலை விலை
சிஎன்ஜி34.05 கிமீ / கிலோ
பெட்ரோல்24.35 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

மாருதி ஆல்டோ கே10

Rs.3.99 - 5.96 லட்சம்* get சாலை விலை
சிஎன்ஜி33.85 கிமீ / கிலோ
பெட்ரோல்24.39 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
மே சலுகைகள்ஐ காண்க

trendingஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்
Rs.6.99 - 9.24 லட்சம்*
Rs.5.65 - 8.90 லட்சம்*
Rs.7.04 - 11.21 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை