• English
  • Login / Register

சிட்ரோன் இறுதியாக C3 ஏர்கிராஸ் எஸ்யூவி -யை அறிமுகப்படுத்தியது

published on ஏப்ரல் 28, 2023 05:22 pm by ansh for சிட்ரோய்ன் aircross

  • 57 Views
  • ஒரு கருத்தை எழுதுக

C3 மற்றும் C5 ஏர்கிராஸ் ஆகியவற்றிலிருந்து இந்த மூன்று-வரிசை காம்பாக்ட் எஸ்யூவி -யின் ஸ்டைலிங் பெறப்பட்டுள்ளது மற்றும் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது இது பாதியில் வெளியிடப்படும்.

Citroen C3 Aircross

  • C3 ஏர்கிராஸ் மூன்று-வரிசை SUV கார் ஆகும் ஆனால் கூடுதல் பூட் ஸ்பேஸ் தேவைப்பட்டால் மூன்றாவது -வரிசை இருக்கைகளை அகற்ற முடியும். 

  • சிட்ரோன் C3 -யிடமிருந்து 110PS, 1.2- லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினைப் பெறுகிறது.

  • 10-அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே, டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, அதிகபட்சம் ஆறு ஏர்பேகுகள் மற்றும் டயர் அழுத்தக் கண்காணிப்பு அமைப்பு(TPMS) ஆகிய அம்சங்களை வழங்குகிறது.

  • விலை ரூ. 9 லட்சமாக (எக்ஸ் ஷோ ரூம்) நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட காத்திருப்புக் காலத்திற்குப் பிறகு மற்றும் பல உளவுக் காட்சிகளின் மூலம் , சிட்ரோன் இறுதியாக அதன் சமீபத்திய காரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது . C3 ஹேட்ச்பேக்கின் அடிப்படையில்  கார் தயாரிப்பு நிறுவனம், C3 ஏர்கிராஸ் என்று அழைக்கப்படும் 3-வரிசை காம்பாக்ட் SUV -ஐ அறிமுகப்படுத்தியது . இந்த மாடல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களும் இதோ:

வடிவமைப்பு

Citroen C3 Aircross

C3 ஏர்கிராஸை முன்புறத்திலிருந்து நீங்கள் பார்த்தீர்கள் என்றால், C3 மற்றும் C5 ஏர் கிராஸின் கலவையான ஸ்டைலிங்கை இதில் காண முடியும். அதன் பெரிய முன்புறம் ஸ்டைலிங் C5 ஏர்கிராஸ்-இடமிருந்து பெறப்பட்ட அதேநேரத்தில், அதன் ஹெட்லேம்புகள் C3 ஹேட்ச்பேக்கில் இருப்பதை ஒத்துள்ளது.

மேலும் படிக்கவும்: பிரேக்கிங்: புதுப்பிக்கப்பட்ட சிட்ரோன்  C3 டர்போ மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் ; கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைப் பெற உள்ளது 

பக்கவாட்டில், காம்பாக்ட் SUV நீண்ட தோற்றத்தைப் பெற்றுள்ளது மற்றும் மூன்றாவது வரிசையை தனக்குள் பெறுவதற்காக C3 உடன் ஒப்பிடுகையில் கூடுதல் உயரத்தையும் பெற்றுள்ளது, ஆனால் காம்பாக்ட் SUV 5 -இருக்கை தேர்வையும் பெறலாம். அது புதிய 17-இன்ச் அலாய் வீல்களையும் பெறுகிறது, அதன் வடிவமைப்பு மற்ற இரு மாடல்களைப் போல இல்லை.

Citroen C3 Aircross

பின்புறத்தில், C3 ஏர்கிராஸ் ஒத்த தோற்றமுடைய டெயில் லேம்பு செட்டப்பை பெறுகிறது, ஆனால் அவற்றுக்கு இடையில் மெல்லிய கருப்பு வண்ண கனெக்டிங் எலமென்டைப் அது பெறுகிறது. காம்பாக்ட் SUV -இன் பின்புற விளிம்பு C3’இன் பின்புறத் தோற்றத்தைவிட கூடுதல் அகலமானதாக தோன்றுகிறது.

பவர்டிரெயின்

Citroen C3 Aircross Engine

C3 ஹேட்ச்பேக் இடமிருந்து 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை C3 ஏர்கிராஸ் பெறுகிறது. இந்தப் பிரிவு 110PS மற்றும் 190Nm ஆற்றலைப் பெறுகிறது மற்றும் ஆறு-வேக மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு, C3 ஏர்கிராஸ் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வருவதில்லை, ஆனால் பிற்காலத்தில் வரக்கூடும்.

Citroen C3 Aircross Interior

C3 இலிருந்து கவரப்பட்ட உட்புறத் தோற்றங்கள், மெல்லிய ட்வீக்டு டேஷ்போர்டு வடிவமைப்புடன் வித்தியாசமான கறுப்பு மற்றும் பழுப்பு கலந்த டூயல்-டோன் தீம் மூலம் கவர் செய்யப்பட்டுள்ளது. C3 ஏர்கிராஸ் 7-இருக்கை SUV -யாக இருந்தாலும் கூட மூன்று-வரிசை இருக்கைகளை ரெனால்ட் டிரைபரைப் போல நம்மால் அகற்ற முடியும்.

இதன் அம்சங்கள் சிட்ரோன் C3 -யை ஒத்துள்ளது, சில கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அது வயர்லெஸ் ஆன்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் 10-அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, 7-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்பிளே, இரவு/பகல் IRVM, மற்றும் கூரையில் பொருத்தப்பட்ட பின்புற ஏசி வென்டுகளுடன் மேனுவல் ஏசி அம்சங்களையும் பெறுகிறது.

பாதுகாப்பு

Citroen C3 Aircross

பயணியர் பாதுகாப்பைப் பொருத்தவரை, C3 ஏர்கிராஸ் அதிகபட்சம் ஆறு ஏர்பேகுகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்(ESC), ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் அழுத்தக்கண்காணிப்பு அமைப்பு(TPMS), பின்புற கேமரா மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்களைக் கொண்டிருக்கும்.

விலை & போட்டியாளர்கள்

Citroen C3 Aircross

காம்பாக்ட் SUV -க்கு ரூ.9 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயிக்கப்படலாம் மற்றும் 2023 ஆகஸ்ட் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  C3 ஏர்கிராஸ், அறிமுகப்படுத்தப்பட்டவுடன்,  ஹூண்டாய் கிரெட்டா கியா செல்டோஸ் டொயோட்டா ஹைரைடர் மாருதி கிரான்ட் விட்டாரா ,ஃபோக்ஸ்வேகன் டைகுன்  மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும்.

was this article helpful ?

Write your Comment on Citroen aircross

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience