• English
  • Login / Register

அடுத்த மாதம் சிட்ரோன் C3 யின் விலை அதிகரிக்கவுள்ளது

published on ஜூன் 13, 2023 04:30 pm by shreyash for சிட்ரோய்ன் சி3

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இது 2023 ஆம் ஆண்டில் சிட்ரோன் C3 இன் மூன்றாவது விலை உயர்வாகும், மேலும் இது அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து நான்காவது விலை உயர்வு ஆகும்.

Citroen C3

● சிட்ரோன் C3-இன் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலை தற்போது ரூ. 6.16 லட்சம் முதல் ரூ. 8.92 லட்சம் வரை உள்ளது.

● இது இரண்டு இன்ஜின் தேர்வுகளுடன் வருகிறது: 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்.

● ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஐ ஆதரிக்கும் 10.2-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட்டைக் கொண்டுள்ளது.

● C3 இப்போது எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம்(TPMS) ஆகியவற்றைப் பெறுகிறது.

இந்த ஆண்டு ஜூலை 1 முதல் ஹேட்ச்பேக்கின் விலை மீண்டும் உயர்த்தப்படும் என்பதால், இப்போது சிட்ரோன் C3 -க்கு ரூ. 17,500 வரை கொடுக்கத்  தயாராக இருங்கள். சிட்ரோன் ஏற்கனவே புதிய டாப்-ஸ்பெக் 'ஷைன்' டிரிம் வெளியிடுவதன் மூலம் C3 இன் அம்சத் தொகுப்பைத் திருத்தியுள்ளது, இதனால் C3 மூன்று விதமான வேரியன்ட்களில் கிடைக்கிறது. C3 இன் தற்போதைய விலையைப் பார்ப்போம்.

விலை அட்டவணை

 

வேரியன்ட் 

 

விலை 

லைவ்

 

ரூ.6.16 லட்சம்

ஃபீல்

 

ரூ.7.08 லட்சம்

ஃபீல் வைப் பேக்

 

ரூ.7.23 லட்சம்

ஃபீல் டூயல் டோன்

 

ரூ.7.23 லட்சம்

ஃபீல் டூயல் டோன் வித் வைப் பேக்

7.38 லட்சம் 

ஃபீல் டர்போ டூயல் டோன்

 

ரூ.8.28 லட்சம்

ஃபீல் டர்போ டூயல் டோன் வித் வைப் பேக்

 

ரூ.8.43 லட்சம்

ஷைன்

 

ரூ.7.60 லட்சம்

ஷைன் டூயல் டோன்

 

ரூ.7.75 லட்சம்

ஷைன் டூயல் டோன் வித் வைப் பேக்

 

ரூ.7.87 லட்சம்

ஷைன் டர்போ டூயல் டோன்

 

ரூ.8.80 லட்சம்

ஷைன் டர்போ டூயல் டோன் வித் வைப் பேக்

ரூ.8.92 லட்சம்

இந்த விலை அனைத்தும் டெல்லியின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்

ஹேட்ச்பேக் விலை ரூ.17,500 வரை உயரும் என்பதால், விலை உயர்வு வேரியன்ட்களைப் பொறுத்து மாறுபடலாம்.

வழங்கப்படும் அம்சங்கள்

Citroen C3 Cabin

35 கனெக்ட்டட்  கார் அம்சங்களுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றை ஆதரிக்கும் 10.2-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற வசதிகளுடன் C3 ஐ சிட்ரோன் பொருத்தியுள்ளது. C3 ஆனது மின்சாரம் மூலமாக சரிசெய்யக்கூடிய ORVMகள், டே/நைட் IRVM, உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை மற்றும் நான்கு ஸ்பீக்கர்களைக் கொண்ட ஸ்பீக்கர் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இரட்டை முன் ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), சீட்பெல்ட் நினைவூட்டல் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் கொண்ட ரிவர்சிங் கேமரா ஆகியவை பயணிகளின் பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்: சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட C3 ஐ தென்னாப்பிரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்ஜின் ஆப்ஷன்கள்

Citroen C3 1.2-litre naturally aspirated petrol engine

சிட்ரோன் C3 இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது: 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (82PS/115Nm) மற்றும் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (110PS/190Nm). முந்தையது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் பிந்தையது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் போட்டியாளர்களை பார்க்கலாம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரெஞ்சு ஹேட்ச்பேக் மாருதி இக்னிஸ், டாடா பன்ச் மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற கார்களுக்கு மாற்றாக உள்ளது.

மேலும் படிக்க: சிட்ரோன் C3-இன் ஆண்ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your Comment on Citroen சி3

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience