Citroen Basalt ஆகஸ்ட் மாதம் வெள ியிடப்படவுள்ளது, அதைத் தொடர்ந்து விரைவில் விற்பனைக்கு வரும்
published on ஜூலை 17, 2024 05:58 pm by dipan for சிட்ரோய்ன் பசால்ட்
- 28 Views
- ஒரு கருத்தை எழுதுக
வடிவமைப்பை பொறுத்தவரையில் தற்போதுள்ள C3 ஹேட்ச்பேக் மற்றும் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி போன்ற சிட்ரோன் கார்களுடன் பாசால்ட் சில ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது.
-
பசால்ட் இந்தியாவில் சிட்ரோனின் நான்காவது மாடலாக இருக்கும்.
-
V-வடிவ LED DRL -கள் மற்றும் ஸ்பிளிட்-ஹெட்லேம்ப் வடிவமைப்பு கொண்ட C3 ஏர்கிராஸ் போன்ற வடிவமைப்பை இது கொண்டிருக்கும்.
-
10.2-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே போன்ற வசதிகளுடன் C3 ஏர்கிராஸை போலவே இன்ட்டீரியர் இருக்கும்.
-
இது C3 ஏர்கிராஸ் எஸ்யூவி -யின் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை (110 PS மற்றும் 205 Nm) MT மற்றும் AT ஆப்ஷன்களுடன் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பசால்ட் காரின் விலை ரூ.11 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள மற்றொரு எஸ்யூவி-கூபே காராக சிட்ரோன் பசால்ட் இருக்கும். இது ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் என்று பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான சிட்ரோன் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வரவிருக்கும் இந்த SUV-கூபே மாடலில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய விஷயங்களை பற்றிய அனைத்து விவரங்களும் இங்கே:
வடிவமைப்பு மற்ற சிட்ரோன் கார்களைப் போன்று இருக்கும்
இந்த வடிவமைப்பு 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்பட்ட பாசால்ட் கான்செப்ட் மூலம் ஈர்க்கப்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் முன்பக்க வடிவத்தை பொறுத்தவரையில் தற்போதுள்ள சிட்ரோன் C3 மற்றும் C3 ஏர்கிராஸ் கார்களில் இருந்து சில விஷயங்களை கடன் வாங்க வாய்ப்புள்ளது. குரோம் மற்றும் ஸ்பிலிட் ஹெட்லேம்ப் ஹவுசிங்கில் முடிக்கப்பட்ட அதே ஸ்பிளிட் கிரில் இருக்கும். கூரை சாய்வான இருக்கும், பக்கவாட்டு தோற்றம் ஸ்போர்ட்டியராக இருக்கும். மேலும் இது ஸ்கொயர்-ஆஃப் வீல் ஆர்ச்கள், சுற்றிலும் பெரிய பாடி கிளாடிங் மற்றும் டூயல்-டோன் அலாய் வீல்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும். பின்புறத்தில் இந்த எஸ்யூவி-கூபே மற்ற சிட்ரோன் கார்களை விட உயரமாக இருக்கும், மேலும் ரேப்பரவுண்ட் LED டெயில்லேம்ப்களை கொண்ட ஒரு நேரான பம்பர் மற்றும் ஹையர்-லெவல் டெயில்கேட் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்.
இன்ட்டீரியர் மற்றும் வசதிகள்
பசால்ட் உள்ளே எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு காத்திருக்கிறோம். அதே சமயம் டாஷ்போர்டு அமைப்பு மற்றும் கேபின் தீம் உள்ளிட்ட கேபினில் நிறைய விஷயங்கள் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் போலவே இருக்கலாம் என எதிர்பார்க்கலாம். இது 10.2-இன்ச் டச் ஸ்கிரீன், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் இரண்டாவது வரிசை பயணிகளுக்கான கூரையில் பொருத்தப்பட்ட ஏசி வென்ட்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதன் நேரடி போட்டியாளரான டாடா கர்வ்வ் காருடன் ஒப்பிடுகையில் இது மிகவும் கவர்ச்சிகரமானதாக காட்டுவதற்காக பாசால்ட்டில் நிறைய வசதிகளை எதிர்பார்க்கலாம்.
பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Tata Curvv மற்றும் Curvv EV ஆகிய இரண்டு கார்களும் இந்த தேதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்
பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் C3 ஏர்கிராஸ் காரின் 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட்டை பாசால்ட் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் விவரங்கள் பின்வருமாறு:
எதிர்பார்க்கப்படும் இன்ஜினின் விவரங்கள் |
சிட்ரோன் பசால்ட் |
இன்ஜின் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
110 PS |
டார்க் |
205 Nm வரை |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT |
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
சிட்ரோன் பசால்ட்டின் விலை சுமார் ரூ.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கலாம். இது டாடா கர்வ்வ் உடன் நேரடியாக போட்டியிடும், அதே சமயம் காம்பாக்ட் எஸ்யூவி -களான ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்க்ஸ்வேகன் டைகுன், டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர், மற்றும் ஹோண்டா எலிவேட் ஆகியவற்றுக்கு ஒரு ஸ்டைலான மாற்றாக இருக்கும்.
வாகன உலகில் இருந்து உடனடி அப்டேட்களை பெற கார்தேக்கோ -வின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்.