சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

அறிமுகத்திற்கு முன்னதாக வெளிப்புறம் மறைக்கப்படாத Citroen Basalt கார் படம் பிடிக்கப்பட்டுள்ளது

published on ஜூலை 23, 2024 06:24 pm by samarth for சிட்ரோய்ன் பசால்ட்

ஸ்பை படங்களில் உள்ள கார் சிவப்பு கலரில் இருப்பதை பார்க்க முடிந்தது. ஏற்கனவே சிட்ரோனின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி C5 ஏர்கிராஸ் கார் சிவப்பு கலரில் விற்பனை செய்யப்படுகிறது.

  • பசால்ட் இந்தியாவில் சிட்ரோன் நிறுவனம் செய்யப்படும் 5 -வது மாடலாக இருக்கும்.

  • பாசால்ட்டின் வெளிப்புற ஹைலைட்ஸ் ஆக சாய்வான ரூஃப், ரேப்பரவுண்ட் LED டெயில் லைட்ஸ் மற்றும் டூயல்-டோன் அலாய் வீல்கள் ஆகியவை இருக்கும்.

  • கேபினில் C3 ஏர்கிராஸ் உடன் ஒற்றுமைகள் இருக்க வேண்டும். பெய்ஜ் அப்ஹோல்ஸ்டரி இடம்பெறும்.

  • இது 10.2 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகிய வசதிகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • எதிர்பார்க்கப்படும் பாதுகாப்பு வசதிகளில் 6 ஏர்பேக்ஸ், பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் TPMS ஆகியவை அடங்கும்.

  • 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (110 PS/205 Nm வரை) மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களின் ஆப்ஷனுடன் கிடைக்கும்.

  • விலை ரூ.10 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.

சிட்ரோன் பசால்ட் கார் விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் எஸ்யூவி-கூபே ஆகும். இது ஆகஸ்ட் மாதம் அறிமுகமாக உள்ளது. சிட்ரோன் அதன் சமூக ஊடக தளங்களில் பசால்ட் காரின் டீஸர்களை வெளியிட தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒரு புதிய ஸ்பை வீடியோ ஆன்லைனில் வெளியானது. இது பசால்ட்டின் வெளிப்புறத்தை முழுமையாக வெளிப்படுத்தியது. பாசால்ட் ஆனது டாடா கர்வ்வ் -க்கு நேரடி போட்டியாளராக இருக்கும். இந்தியாவில் சிட்ரோனின் ஐந்தாவது தயாரிப்பாக இருக்கும். இப்போது எஸ்யூவி-கூபே -வின் ஸ்பை வீடியோ என்ன காட்டுகிறது என்று பார்ப்போம்:

கவனிக்கப்பட்ட விவரங்கள்

சமீபத்தில் ஸ்பை ஷாட்களில் சிட்ரோன் எஸ்யூவி-கூபே கலர் பெயிண்ட் ஆப்ஷனில் காணப்பட்டது. இது C5 ஏர்கிராஸ் எஸ்யூவி -யில் கிடைக்கும் சிட்ரோனின் ஃபிளாக்ஷிப் ஆன வல்கனோ ரெட் கலர் ஆப்ஷனை போன்றது. பக்கவாட்டில் பார்க்கும் போது ஒரு சாய்வான கூரை இருப்பதை பார்க்க முடிகிறது. ஆகவே கூபே இயல்புக்கு நெருக்கமாக இருக்கிறது. மற்ற குறிப்பிடத்தக்க எலமென்ட்களில் ஸ்கொயர் வீல் கர்வ்வ்கள், பாடி சைடு கிளாடிங், ஃபிளாக்-டைப் டோர் ஹேண்டில்கள் மற்றும் டூயல்-டோன் அலாய் சக்கரங்கள் ஆகியவை இந்த காரில் இருக்கும்.

கூடுதலாக ORVM-கள் மற்றும் A- மற்றும் B-பில்லர் சி-பில்லரில் ஒரு சிறிய நீட்டிப்புடன் பிளாக்டு அவுட் செய்யப்பட்டிருப்பதை நாங்கள் கவனித்தோம். பின்புறத்தில் ரேப்பரவுண்ட் LED டெயில் லைட்ஸ் மற்றும் பம்பரில் சில்வர் ஸ்கிட் பிளேட் ஆகியவற்றை பார்க்க முடிந்தது.

மேலும் பார்க்க: Tata Curve மற்றும் Citroen Basalt: இரண்டு கார்களின் வெளிப்புற வடிவமைப்பு ஒப்பீடு

எதிர்பார்க்கப்படும் கேபின், வசதிகள் மற்றும் பாதுகாப்பு

சமீபத்தில் சிட்ரோன் இந்தியா பசால்ட்டின் உட்புற விவரங்கள் அடங்கிய டீஸர் செய்து வருகிறது. மேலும் டீஸர்கள் ஒரே மாதிரியான டேஷ்போர்டு லேஅவுட் மற்றும் சென்ட்ரல் ஏசி வென்ட்கள் உட்பட சி3 ஏர்கிராஸ் எஸ்யூவியுடன் உள்ள ஒற்றுமையைக் காட்டுகின்றன. டீஸர்கள் 10.2 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோ ஏசி மற்றும் 7 இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே போன்ற வசதிகளையும் வெளிப்படுத்தியது. கூடுதலாக இது க்ரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் கீலெஸ் என்ட்ரி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்

பாசால்ட் பின்வரும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது:

இன்ஜின்

1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

பவர்

110 PS

டார்க்

205 Nm வரை

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

சிட்ரோன் பசால்ட்டின் விலை ரூ. 10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நேரடியாக டாடா கர்வ்வ் உடன் போட்டியிடும். மற்றும் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், சிட்ரோன் C3 ஏர்கிராஸ், மற்றும் எம்ஜி ஆஸ்டர் ஆகியவற்றுக்கு ஒரு ஸ்டைலான மாற்றாக இருக்கும்.

கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

பட ஆதாரம்

s
வெளியிட்டவர்

samarth

  • 43 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment on Citroen பசால்ட்

Read Full News

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை