• English
  • Login / Register

தயாரிப்புக்கு தயாராகவுள்ள Citroen Basalt காரின் விவரங்கள் வெளியாகியுள்ளன, 2024 ஆகஸ்ட் மாதம் அறிமுகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

published on ஜூலை 26, 2024 01:52 pm by shreyash for சிட்ரோய்ன் பசால்ட்

  • 380 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கூபே ரூஃப்லைன் மற்றும் ஸ்பிளிட் கிரில் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் தயாரிப்புக்கு தயாராக உள்ள சிட்ரோன் பசால்ட் கிட்டத்தட்ட அதன் கான்செப்ட் பதிப்பைப் போலவே இருக்கிறது.

  • சிட்ரோன் இந்தியாவில் 5 -வது காராக பசால்ட்டை வழங்க உள்ளது.

  • வெளிப்புறத்தில் உள்ள ஹைலைட்ஸ்களாக எக்ஸ்-வடிவ ஸ்பிளிட்டட் LED DRL -கள், டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் கூபே ரூஃப்லைன் ஆகியவை இருக்கின்றன.

  • டூயல் டிஸ்பிளேக்கள் உட்பட C3 ஏர்கிராஸ் போன்ற டாஷ்போர்டு ஆகியவை இந்த காரில் கொடுக்கப்படலாம்.

  • க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • C3 ஏர்கிராஸ் காரில் உள்ள அதே 110 PS 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்தக்கூடும்.

  • விலை ரூ.10 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரெஞ்சு நிறுவனமான சிட்ரோன் விரைவில் பசால்ட் காரை அறிமுகம் செய்யவுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த கார் டாடா கர்வ்வ் -க்கு போட்டியாக இருக்கும். C3 ஏர்கிராஸ் காம்பாக்ட் எஸ்யூவி -யை அடிப்படையாக வைத்து பசால்ட் எஸ்யூவி-கூபே வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது அறிமுகத்திற்கு முன்னதாக சிட்ரோன் உற்பத்திக்கு தயாராகவுள்ள பாசால்ட் காரின் வெளிப்புறப் படங்களின் முதல் தொகுப்பை வெளியிட்டுள்ளது.

C3 ஏர்கிராஸின் கூபே பதிப்பு

சிட்ரோன் பாசால்ட் என்பது ஒரு எஸ்யூவி-கூபே ஸ்டைல் ஆகும். இது தற்போதுள்ள C3 ஏர்கிராஸ் காம்பாக்ட் எஸ்யூவி -யின் வடிவமைப்பு விஷயங்களை பெற்றுள்ளது.. முன்பக்கத்தில் இது X-வடிவ ஸ்பிளிட்டட் LED DRL -கள் மற்றும் C3 ஏர்கிராஸில் உள்ளதைப் போன்ற ஒரு ஸ்பிளிட் கிரில் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பக்கவாட்டில் கூபே ரூஃப்லைன் மற்றும் டூயல்-டோன் ஃபினிஷ் அலாய் வீல்களை பார்க்க முடிகிறது. ஆனால் கான்செப்ட் காரில் பிளாக்-அவுட் வீல்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

தற்போதுள்ள C3 ஹேட்ச்பேக் மற்றும் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி போன்ற சிட்ரோன் மாடல்களில் வழங்கப்படும் பழைய மாடல் ஃபிளாப்-ஸ்டைல் ​டோர் ஹேண்டில்களை இது தொடர்ந்து தக்க வைத்துள்ளது. பின்புறத்தில் கிடைமட்ட LED டெயில் லைட்கள் மற்றும் பிளாக்டு அவுட் பம்பர், சில்வர் ஸ்கிட் பிளேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

கேபின் மற்றும் வசதிகள்

பாசால்ட்டின் இன்ட்டீரியர் விவரங்களை முழுமையாக சிட்ரோன் வெளியிடவில்லை என்றாலும் கூட சமீபத்திய டீஸர்களின் அடிப்படையில் பார்க்கும் போது இது C3 ஏர்கிராஸை போலவே இருக்கும் என தெரிகிறது. பாசால்ட் காரில் வொயிட் கலர் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி கொடுக்கப்படலாம் என்பதை வீடியோ டீஸர் உறுதிப்படுத்தியது. 

பாசால்ட் 10.2-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளேவை C3 ஏர்கிராஸில் இருந்து பெறும். இருப்பினும் பாசால்ட் C3 ஏர்கிராஸில் ஆட்டோமெட்டிக் ஏசியை பெறும். மேலும் இது க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் கீலெஸ் என்ட்ரி போன்ற வசதிகள் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை கொடுக்கப்படும்.

C3 ஏர்கிராஸின் அதே இன்ஜினை பயன்படுத்தலாம்

C3 ஏர்கிராஸில் உள்ள அதே 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் பாசால்ட் காரிலும் கொடுக்கப்படும். அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

இன்ஜின்

1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல்

பவர்

110 PS

டார்க்

205 Nm வரை

டரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT

AT: டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக்

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

சிட்ரோன் பாசால்ட் காரின் விலை ரூ.10 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா கர்வ்வ் -க்கு நேரடி போட்டியாக இருக்கும். அதே நேரத்தில் ஒரு ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட், மற்றும் ஸ்கோடா குஷாக் கார்களுக்கு ஸ்டைலான மாற்றாக இருக்கும்.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு கார்தேக்கோ-வின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்.

was this article helpful ?

Write your Comment on Citroen பசால்ட்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience