சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற 7 சிறப்பான 7-சீட்டர் எஸ்யூவி-கள்: உங்கள் பெரிய குடும்பத்திற்கு ஏற்ற ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்!

published on மே 28, 2024 07:39 pm by dipan for மஹிந்திரா போலிரோ

இந்தியாவில் மக்களுக்கு எஸ்யூவி-களின் மேல் உள்ள ஆர்வம் 7 சீட்டர் மாடல்களை வெகுஜன சந்தையில் பரவலாக பிரபலமாக்கியுள்ளது.

எஸ்யூவி-கள் இந்தியாவில் பெரும் புகழ் பெற்றுள்ளன, மைக்ரோ முதல் முழு அளவிலான மாடல்கள் வரை பலவிதமான பாடி டைப்களில் கிடைக்கும். இந்த வளர்ந்து வரும் கார்கள் பிரபல மூன்று வரிசை எஸ்யூவி-களை வெகுஜன சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன. மேலும் பெரிய குடும்பங்கள் எஸ்யூவி அனுபவத்தை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் வாடிக்கையாளர்களுக்கான தேவைகள் பரவலாக வேறுபடுகின்றன. மேலும் அதில் ஒரு முக்கிய தேவையாக காரின் சீட்டிங் கெப்பாசிட்டி உள்ளது. இந்தியாவில் உள்ள எஸ்யூவி-கள் நான்கு முதல் ஏழு சீட்கள் வரையிலான கட்டமைப்புகளுடன் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. பல பிரிவுகளில் பரந்த அளவிலான ஆப்ஷன்களை வழங்குகின்றன. நீங்கள் 7-சீட்டர் எஸ்யூவி-க்கான சந்தையில் இருந்தால் இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் 7 ஆப்ஷன்களின் பட்டியலை நாங்கள் உங்களுக்காக தொகுத்துள்ளோம். குறைந்த விலையில் இருந்து அதிக விலை வரை தொகுக்கப்பட்ட இந்த பட்டியல் உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற ஒரு எஸ்யூவி-யை தேர்ந்தெடுப்பதற்கு இது பெரிதும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

  1. மஹிந்திரா பொலிரோ நியோ: ரூ.9.95 லட்சத்தில் தொடங்குகிறது

மஹிந்திரா பொலிரோ நியோ இந்தியாவில் கிடைக்கக்கூடிய ஒரு மலிவு விலையில் 7-சீட்டர் எஸ்யூவி-யாக தனித்து நிற்கிறது. அதன் என்ட்ரி-லெவல் N4 வேரியன்ட், ரூ.9.95 லட்சத்தில் தொடங்குகிறது, மேலும் இது 100 PS மற்றும் 260 Nm-ஐ உருவாக்கும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. கூடுதலாக டாப்-ஆஃப்-லைன் வேரியன்ட்கள் ரியரில் மெக்கானிக்கல் லாக்கிங் டிஃபெரென்ஷியலுடன் பொருத்தப்பட்டுள்ளன.

  1. மஹிந்திரா பொலேரோ: ரூ.9.98 லட்சத்தில் தொடங்குகிறது

மஹிந்திரா பொலேரோ இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய சந்தையில் தனது இருப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதே விலையுள்ள மோனோகோக் எஸ்யூவி-களுக்கு ஒரு அட்டகாசமான மாற்றாகவும் வாங்குபவர்களுக்கு ஒரு சிறந்த தீர்வாகவும் உள்ளது. சமீபத்திய 7-சீட் கொண்ட பொலிரோவின் சமீபத்திய விலை ரூ. 9.98 லட்சமாக உள்ளது. 76 PS மற்றும் 210 Nm டார்க்கை உருவாக்கும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், பொலிரோ மிகவும் அவுட்டேட்டட் மாடலாக உள்ளது. பலர் அப்டேட்டட் காரை எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை 2026-க்குள் அது கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  1. சிட்ரோன் C3 ஏர்கிராஸ்: ரூ 11.96 லட்சம் முதல்

சிட்ரோன் C3 ஏர்கிராஸ் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் ஒரு தனித்துவமான முன்மொழிவாக உள்ளது. பெரும்பாலான உற்பத்தியாளர்கள் 5-சீட்டர் கார்களை மட்டுமே வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர், சிட்ரோன் கூடுதல் மைல் தூரத்தை பின்பக்கத்தில் இரண்டு கூடுதல் சீட்களின் ஆப்ஷனை வழங்குவதன் மூலம் விலையை குறைவாக பராமரிக்கிறது. 5-சீட்டர் வேரியன்ட்கள் ரூ.9.99 லட்சத்திலும், 7-சீட்டர் வேரியன்ட்கள் ரூ.11.96 லட்சத்திலும் தொடங்கி, எங்கள் பட்டியலில் மலிவு விலை கார்களில் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் மூன்றாவது இடத்தைப் பெறுகிறது. ஹூட்டின் கீழ், இது 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 110 PS மற்றும் 206 Nm டார்க்கை உருவாக்குகிறது. உங்களின் டிரைவர் ஆப்ஷன்களுக்கு ஏற்றவாறு 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் (ஆட்டோமேட்டிக்) கியர்பாக்ஸ் ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்யலாம்.

  1. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்: ரூ 13.59 லட்சம் முதல்

இந்தியாவில் ஸ்கார்பியோ N என அழைக்கப்படும் மூன்றாம் தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மஹிந்திரா இரண்டாம் தலைமுறை மாடலை சில மாற்றங்கள் மற்றும் புதிய பெயர்ப்பலகையான ஸ்கார்பியோ கிளாசிக் உடன் தொடர்ந்து வழங்கத் தேர்வு செய்துள்ளது. இந்த முடிவு பழைய தலைமுறை ஸ்கார்பியோ பல்வேறு வாடிக்கையாளர்களின் ஆப்ஷன்களைப் பூர்த்தி செய்யக் கிடைக்கும் என்பதை உறுதி செய்கிறது. ஆப்ஷன்களை எளிமையாக்கி மஹிந்திரா இரண்டு வேரியன்ட்களை மட்டுமே வழங்குகிறது. முறையே 7- மற்றும் 9-சீட்டர் அமைப்பை கொண்டுள்ளது. இரண்டுமே 132 PS மற்றும் 300 Nm டார்க்கை வழங்கும் ஸ்ட்ராங் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. சாலையில் சிறப்பான செயல்திறனுக்காக 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இது இணைக்கப்பட்டுள்ளது.

  1. மஹிந்திரா ஸ்கார்பியோ N: ரூ 13.85 லட்சம் முதல்

மஹிந்திரா ஸ்கார்பியோ N ஆனது ஸ்கார்பியோ வரிசையின் சமீபத்திய பரிணாமத்தைக் குறிக்கிறது, மேம்பட்ட அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பவர்டிரெய்ன் ஆப்ஷன்களைப் வழங்குகிறது. 6- மற்றும் 7-சீட்டர் அமைப்பில் கிடைக்கிறது. ஸ்கார்பியோ N -ன் 7 சீட்கள் கொண்ட வேரியன்ட் ரூ.13.85 லட்சத்தில் தொடங்குகிறது. வாங்குபவர்களுக்கு 132 PS/300 Nm வழங்கும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 203 PS/380 Nm உற்பத்தி செய்யும் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் இடையே தேர்வு உள்ளது. கூடுதலாக, வாங்குபவர்கள் தங்கள் டிரைவிங் ஆப்ஷன்களுக்கு ஏற்றவாறு ரியர்-வீல்-டிரைவ் (RWD) மற்றும் ஃபோர்-வீல்-டிரைவ் (4WD) என்ற இரண்டு டிரைவ்டிரெய்ன் ஆப்ஷன்களை வழங்குகிறது.

  1. டாடா சஃபாரி: ரூ 16.19 லட்சம் முதல்

டாடா சஃபாரி இந்தியாவில் டாடாவின் முதன்மையான 3-வரிசை காராக உள்ளது. இது 6- மற்றும் 7-சீட்டர் கட்டமைப்புகளை வழங்குகிறது. இதன் விலை ரூ.16.19 லட்சமாக உள்ளது. 170 PS மற்றும் 350 Nm டார்க்கை உருவாக்கும் வலுவான 2-லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது, இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுக்கு இடையே ஒரு தேர்வை வழங்குகிறது. இவை இரண்டும் முன் வீல்களுக்கு பவரை வழங்குகின்றன. பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் தற்போது இல்லை என்றாலும் இது எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எஸ்யூவி-யின் EV வேரியன்ட் உருவாகி வருகிறது, இது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  1. ஹூண்டாய் அல்கஸார்: ரூ 16.78 லட்சம் முதல்

ஹூண்டாய் அல்கஸார் கிரெட்டாவுக்கு ஒரு பெரிய எஸ்யூவி-க்கான ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். இது 6 அல்லது 7 பயணிகள் வசதியாக பயணிப்பதற்க்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது: 160 PS மற்றும் 253 Nm டார்க்கை வழங்கும் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின், 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்) மற்றும் 116 PS மற்றும் 250 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா XUV700 (ரூ.16.89 லட்சம்), MG ஹெக்டர் பிளஸ் (ரூ.17 லட்சம்) மற்றும் 5-டோர் ஃபோர்ஸ் கூர்க்கா (ரூ.18 லட்சம்) ஆகியவை பட்டியலில் இடம் பெறாத மற்ற எஸ்யூவி-கள் ஆகும்.

எனவே பட்டியலில் இருக்கும் காரிகளில் உங்களின் தேர்வு ஏதுவாக இருக்கும் என்பதை கீழே உள்ள கமெண்ட் பகுதியின் மூலமாக எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேலும் படிக்க: பொலேரோ டீசல்

d
வெளியிட்டவர்

dipan

  • 50 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment on Mahindra போலிரோ

Read Full News

explore similar கார்கள்

ஹூண்டாய் அழகேசர்

Rs.16.77 - 21.28 லட்சம்* get சாலை விலை
டீசல்24.5 கேஎம்பிஎல்
பெட்ரோல்18.8 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
செப்டம்பர் சலுகைகள்ஐ காண்க

மஹிந்திரா scorpio n

Rs.13.85 - 24.54 லட்சம்* get சாலை விலை
டீசல்15.42 கேஎம்பிஎல்
பெட்ரோல்12.17 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
செப்டம்பர் சலுகைகள்ஐ காண்க

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை