• English
  • Login / Register

5-டோர் Mahindra Thar இரண்டு புதிய வடிவமைப்பு மாற்றங்களுடன் தென்பட்டது

published on ஆகஸ்ட் 29, 2023 08:15 pm by tarun for மஹிந்திரா தார் ராக்ஸ்

  • 66 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த இரண்டு புதிய வடிவமைப்பு அம்சங்களும் 3-டோர் தாரில் இருந்து சற்று வித்தியாசமாக தெரிய உதவும்.

2024 Mahindra Thar 5-Door

  • 5-டோர் தார் புதிய கிரில் மற்றும் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் இருப்பது தெரிய வருகிறது.

  • மேலும் மூன்று டோர்கள் கொண்ட தார் ஒரு ஃபிக்ஸ்டு மெட்டல் டாப் மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃபை கொண்டுள்ளது.

  • புதிய அம்சங்களில் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் ஆட்டோமெட்டிக் ஏசி ஆகியவை அடங்கும்.

  • மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின்களை முன்பு போல் தொடர்ந்து இருக்கும்.

  • வழக்கமான தார் போலவே பின் மற்றும் நான்கு சக்கர டிரைவ் டிரெய்ன்கள் வழங்கப்படலாம்.

  • 2024 ஆண்டின் ஆரம்பத்தில் வெளிவரும்; விலை ஏறத்தாழ ரூ.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5-டோர் மஹிந்திரா தார் மீண்டும் சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ளது, அதில் செய்யப்பட்டுள்ள இரண்டு புதிய மாற்றங்களை பற்றி தெளிவான தோற்றம் நமக்கு கிடைத்தது. கடினமான பாதைகளிலும் உல்லாசமாக வலம் வரும் இந்த ஆஃப்-ரோடரின் பதிப்பு 2024 -ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும். 

புதிதாக என்ன உள்ளது ?

2024 Mahindra Thar 5-Door

ஆன்லைனில் வெளிவந்துள்ள 5-டோர் தாரின் சமீபத்திய படங்கள், தார் ஐகானிக் செவன்-ஸ்லாட் வடிவமைப்பில் இருந்து வேறுபட்ட சிக்ஸ்-ஸ்லாட் கிரில் இருப்பதை உறுதி செய்கின்றன. ஸ்லேட்டுகள் மேலும் கிடைமட்டமாகப் பிரிக்கப்பட்டு இன்னும் ஒரு பாதியளவு-வெளியே தெரியும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு இருந்த வட்டமான ஹெட்லேம்ப்கள்  தக்கவைக்கப்பட்டுள்ளன, ஆனால் ஹாலோஜன்  விளக்குகளுக்குப் பதிலாக,இந்த காரில்  புரொஜெக்டர் யூனிட்கள் இருக்கும். மேலும் எல்ஈடிகளும்  கொடுக்கப்பட்டிருக்கலாம், ஏனெனில், இந்த விலையில் விற்பனையாகும் பெரும்பாலான கார்களில் இது கிடைக்கிறது.

மேலும் படிக்க: 5 மஹிந்திரா ஸ்கார்பியோ N-அடிப்படையிலான குளோபல் பிக் அப் கான்செப்டில் இருந்து 5 முக்கிய அம்சங்கள்

இதுவரை தெரிந்த பிற விவரங்கள்

2024 Mahindra Thar 5-Door

பெரிய தார் கார் அதே மாதிரி பெட்டி அமைப்பும் கரடுமுரடான தோற்றத்தையும் கொண்டிருக்கும். ஆனால் கூடுதலான இரண்டு டோர்களுடன் இருக்கும். மூன்று டோர்கள் கொண்ட தார் காரில் இருக்கும் மற்ற இரண்டு முக்கிய மாற்றங்கள் ஃபிக்ஸ்டு மெட்டல் டாப் மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் ஆகும். உட்புறமானது பெரிய டச் ஸ்கிரீன் அமைப்பு மற்றும் நடைமுறைக்கு ஏற்றபடி சேமிப்பக இடங்கள் போன்ற சிறிய மாற்றங்களுடன் அதே மாதிரி இருக்கலாம்.

பவர்டிரெய்ன்கள் புதுப்பிக்கப்படலாம்

Mahindra Thar 5-Door

5-டோர் தாரை இயக்குவது வழக்கமான ஆஃப்-ரோடரின் அதே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின்களாக இருக்கும், ஒருவேளை அதிகமாக ட்யூன் செய்யப்பட்டிருக்கலாம். இரண்டு பவர்டிரெய்ன்களிலும் ஆறு கியர்கள் கொண்ட 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் வழங்கப்படும். 3-டோர் தாரை போலவே, பின்புறம் மற்றும் நான்கு சக்கர டிரைவ் டிரெய்ன்களின் தேர்வு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மேலும் படிக்க: இதுவரை நாம் பார்த்த ஒவ்வொரு மஹிந்திரா எலக்ட்ரிக் எஸ்யூவியும் அறிமுகத்திற்காகவே உள்ளது

5-டோர் மஹிந்திரா தார் சுமார் ரூ.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது காம்பாக்ட் எஸ்யூவிகளுக்கு ஒரு முரட்டுத்தனமான மாற்றாகவும், மாருதி ஜிம்னிக்கு ஒரு பெரிய மற்றும் அதிக பிரீமியமுள்ள ஆப்ஷனாகவும் இருக்கும். விஷன் தார் கான்செப்டில் காட்டியபடி, ஐந்து டோர்கள் கொண்ட தார் மின்சாரத்தில் இயங்கும் என்பதை மஹிந்திரா சமீபத்தில் உறுதிப்படுத்தியது.

பட ஆதாரம்

மேலும் படிக்க: மஹிந்திரா தார் ஆட்டோமேடிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Mahindra தார் ROXX

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience