சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2024 Maruti Dzire இந்த தேதியில் வெளியாகவுள்ளது

shreyash ஆல் அக்டோபர் 28, 2024 04:29 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
84 Views

புதிய வடிவமைப்பு, புதிய உட்புறம், புதிய வசதிகள் ஆகியவற்றுடன் புதிய டிசையர் வரும். மேலும் குறிப்பிடத்தக்க வகையில் புதிய மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இதில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • புதிய கிரில், ஸ்லீக்கர் ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லைட்ஸ் மற்றும் புதிய அலாய் வீல்கள் இந்த காரில் இருக்கலாம்.

  • பிளாக் மற்றும் பெய்ஜ் கலர் டூயல் டோன் கேபின் தீம் கொடுக்கப்படலாம்.

  • 9 இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்ஸ் ஆகிய வசதிகள் இருக்கும்.

  • ஸ்பை ஷாட்களில் காணப்படுவது போல் 360 டிகிரி மற்றும் சன்ரூஃப் கிடைக்கும்.

  • ஸ்விஃப்ட்டின் 82 PS 1.2-லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இதில் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • விலை ரூ.6.70 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.

ஒரு ஜெனரேஷன் அப்டேட்டுக்கு மாருதி டிசையர் தயாராக உள்ளது. இப்போது மாருதி நிறுவனம் 2024 டிசையர் காரின் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் விலை விவரங்கள் நவம்பர் 11 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இந்த காரில் வெளிப்புறம் மட்டுமல்ல உட்புறமும் அப்டேட் செய்யப்பட்டிருக்கும். புதிய ஸ்விஃப்ட்டிலிருந்து கடன் வாங்கப்பட்ட Z-சீரிஸ் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினும் கொடுக்கப்படலாம். புதிய தலைமுறை டிசையரில் இருந்து என்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்பது இங்கே.

வெளிப்புறத்தில் உள்ள மாற்றங்கள்

முன்பு இணையத்தில் வெளியான ஸ்பை ஷாட்களில் காணப்பட்ட வடிவமைப்பின் அடிப்படையில் பார்க்கும் போது பழைய ஸ்விஃப்ட்டில் பெரிய வித்தியாசத்தை பார்க்கலாம். வெளிப்புறத்தில் குரோம் ஸ்லேட்டுகளுடன் கூடிய பெரிய கிரில், ஸ்லீக்கர் ஹெட்லைட்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் ஆகியவை இருக்கும். புதிய தலைமுறை செடான் புதிய வடிவிலான டெயில் லைட்டுகளையும் பெறலாம். மேலும் அப்டேட்டட் டெயில்லைட்கள், நவீன எல்இடி லைட்டிங் எலமென்ட்களையும் காரில் பார்க்கலாம்.

மேலும் பார்க்க: 2024 ஆண்டி மீதியில் வெளியிடப்படவுள்ள கார்கள் என்ன தெரியுமா ?

கேபின் மற்றும் எதிர்பார்க்கப்படும் வசதிகள்

2024 ஸ்விஃப்ட் டச் ஸ்கிரீன் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது

2024 டிசையர் அதன் வெளிச்செல்லும் பதிப்பைப் போலவே டூயல்-டோன் பிளாக் மற்றும் பெய்ஜ் கேபின் தீம் உடன் வரும். இருப்பினும் டேஷ்போர்டு அமைப்பு 2024 ஸ்விஃப்ட் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர்டில் உள்ள வசதிகளில் 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பின்புற ஏசி வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை அடங்கும். 2024 டிசையர் சிங்கிள்-பேன் சன்ரூஃப் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த வசதியுடன் வரும் முதல்-இன்-செக்மென்ட் சப்காம்பாக்ட் செடானாகவும் மாறும். இதன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை இருக்கும்.

எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்

2024 டிசையர் புதிய Z-சீரிஸ் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2024 ஸ்விஃப்ட்டில் அறிமுகமானது. விவரங்கள் பின்வருமாறு:

இன்ஜின்

1.2 லிட்டர் 3 சிலிண்டர் Z-சீரிஸ் பெட்ரோல்

பவர்

82 PS

டார்க்

112 Nm

டிரான்ஸ்மிஷன்

5-ஸ்பீடு MT, 5-ஸ்பீடு AMT

சிஎன்ஜி பவர்ட்ரெயின் ஆப்ஷன் பின்னர் அறிமுகப்படுத்தப்படலாம்.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

2024 மாருதி டிசையர் ஆரம்ப விலை ரூ.6.70 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் ஆரா, டாடா டிகோர், மற்றும் ஹோண்டா அமேஸ் போன்ற மற்ற சப்காம்பாக்ட் செடான்களுடன் போட்டியிடும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

பட ஆதாரம்

Share via

Write your Comment on Maruti டிசையர்

P
palanivel p
Oct 26, 2024, 5:43:49 PM

It's 100 percent truth because am eagerly waiting for the car only

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.1.70 - 2.69 சிஆர்*
புதிய வேரியன்ட்
Rs.6.54 - 9.11 லட்சம்*
பேஸ்லிப்ட்
புதிய வேரியன்ட்
Rs.12.28 - 16.55 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை