டீலர்ஷிப்களை வந்தடைந்த புதிய 2024 Maruti Dzire கார்
modified on நவ 18, 2024 02:32 pm by shreyash for மாருதி டிசையர்
- 127 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய தலைமுறை டிசையரை மாதத்திற்கு ரூ.18,248 என சந்தா அடிப்படையில் வாங்கிக் கொள்ளலாம் என மாருதி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிய கிரில் வடிவமைப்பு மற்றும் LED லைட் செட்டப் மற்றும் புதிய டூயல்-டோன் அலாய் வீல்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
-
9 இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோ ஏசி மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகளுடன் இது வருகிறது.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை உள்ளன.
-
5-ஸ்பீடு MT மற்றும் AMT ஆப்ஷன்களுடன் புதிய 1.2-லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் இது வருகிறது.
-
குறைக்கப்பட்ட பவர் அவுட்புட் உடன் (70 PS/102 Nm) ஆப்ஷனலான CNG பவர்டிரெயின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கனெக்டட் செய்யப்பட்டிருக்கும்
-
இதன் விலை ரூ.6.79 லட்சம் முதல் ரூ.10.14 லட்சம் வரை (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாருதி நிறுவனம் இந்த வருடம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2024 மாருதி டிசையர் காரை சமீபத்தில் வெளியிட்டது. மேலும் இதன் விலை ரூ.6.79 லட்சம் முதல் ரூ.10.14 லட்சம் வரை (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய டிசையர் இப்போது சில ஷோரூம்களுக்கும் வந்தடைந்துள்ளது. அதை வாடிக்கையாளர்கள் இப்போது நேரில் சென்று பார்க்கலாம். புதிய தலைமுறை டிசையருக்கான டெஸ்ட் டிரைவ் விரைவில் தொடங்கப்பட உள்ளன. கூடுதல் விவரங்களை இங்கே பார்ப்போம்.
வடிவமைப்பு
படத்தில் காட்டப்பட்டுள்ள டிசையர் ஆனது கேலன்ட் ரெட் எக்ஸ்ட்டீரியர் ஷேடு ஆகும். இது டிசையருக்கு மாருதியின் புதிய சாயலாகும். கிடைமட்ட ஸ்லேட்டுகளை கொண்ட கிரில், LED DRLகள் கொண்ட புதிய ஹெட்லைட்கள் மற்றும் புதிய டூயல்-டோன் 15-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை உள்ளன. பின்புறம் இப்போது Y-ஷேப்டு LED இன்டர்னல் லைட்டிங் எலமென்ட்களுடன் புதிய டெயில் லைட்கள் கனெக்ட் செய்யப்பட்டுள்ளன.
2024 மாருதி டிசையர் அதன் ஹேட்ச்பேக் உடன்பிறப்பான ஸ்விஃப்ட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தை கொண்டுள்ளது.
மேலும் பார்க்க: 2024 மாருதி டிசையர்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
இன்ட்டீரியர் மற்றும் வசதிகள்
2024 டிசையரில் ஸ்விஃப்ட் போன்ற டேஷ்போர்டு செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டாஷ்போர்டில் ஃபேக் வுடன் இன்செர்ட்கள் பிளாக் மற்றும் பெய்ஜ் கலர் இன்ட்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது.
மாருதி புதிய தலைமுறை டிசையரில் 9 இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோ ஏசி, வயர்லெஸ் போன் சார்ஜர் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன. சிங்கிள் பேன் சன்ரூஃப் வசதியுடன் வரும் இந்தியாவின் முதல் சப்காம்பாக்ட் செடான் இதுவாகும். 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா (இந்த பிரிவில் முதலாவது), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல் மற்றும் CNG இரு வேரியன்ட்களிலும் கிடைக்கும்
இது புதிய ஸ்விஃப்ட்டில் அறிமுகமான புதிய 1.2 லிட்டர் 3-சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. விவரங்கள் இங்கே:
இன்ஜின் |
1.2 லிட்டர் 3-சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் |
1.2-லிட்டர் 3-சிலிண்டர் Z சீரிஸ் பெட்ரோல்+CNG |
பவர் |
82 PS |
70 PS |
டார்க் |
112 Nm |
102 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு MT, 5-ஸ்பீடு AMT |
5-ஸ்பீடு MT |
கிளைம்டு மைலேஜ் |
24.79 கிமீ/லி (MT), 25.71 கிமீ/லி (AMT) |
33.73 கிமீ/கிலோ |
விலை மற்றும் போட்டியாளர்கள்
2024 மாருதி டிசையர் டாடா டிகோர் மற்றும் ஹூண்டாய் ஆரா உடன் போட்டியிடுகிறது. மேலும் புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் காருக்கும் போட்டியாக இருக்கும். மாருதி டிசையர் சந்தா அடிப்படையிலும் கிடைக்கும். மாதத்திற்கு ரூ.18,248 முதல் திட்டங்கள் தொடங்குகின்றன. இதில் ரிஜிஸ்ட்ரேஷன், சர்வீஸ், காப்பீடு மற்றும் ரோடு சைடு அசிஸ்ட் உள்ளிட்டவை அனைத்தும் அடங்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: மாருதி டிசையர் ஏஎம்டி
0 out of 0 found this helpful