சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

குளோபல் NCAP விபத்து சோதனையில் 5-ஸ்டார் மதிப்பீட்டை பெற்றது 2024 Maruti Dzire

மாருதி டிசையர் க்காக நவ 08, 2024 06:20 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

2024 டிசையரின் பாடிஷெல் ஒருமைப்பாடு (இன்டெகிரேஷன்) மற்றும் ஃபுட்வெல் பகுதி இரண்டும் ஸ்டாண்டர்டானதாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் கூடுதல் லோடிங்குகளை தாங்கும் திறன் கொண்டதாகவும் உள்ளது.

  • 2024 டிசையர் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5-ஸ்டார் மதிப்பீட்டையும், குழந்தைகளின் பாதுகாப்பிற்கான 4 ஸ்டார் மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.

  • பெரியவர்களுக்கான பாதுகாப்புத் சோதனையில் 34 -க்கு 31.24 புள்ளிகளை இது பெற்றது.

  • குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனைகளில் 49 புள்ளிகளுக்கு 39.20 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

  • வழங்கப்படும் ஸ்டாண்டர்டான பாதுகாப்பு வசதிகளில் 6 ஏர்பேக்குகள், ESC மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவை உள்ளன.

  • இது நவம்பர் 11 -ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். இதன் விலை ரூ 6.70 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 மாருதி டிசையர் குளோபல் NCAP -லிருந்து 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற முதல் மாருதி கார் என்ற பெருமையை அதன் வெளியீட்டிற்கு முன்னதாகவே அடைந்துள்ளது. விபத்துச் சோதனைகளில் புதிய டிசையர் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் (AOP) 34 -க்கு 31.24 மதிப்பெண்களையும் குழந்தைகள் பாதுகாப்பில் (COP) 49க்கு 39.20 மதிப்பெண்களையும் பெற்றது. AOP -க்கு 5 ஸ்டார் மதிப்பீட்டையும் COP -க்கு 4 ஸ்டார் மதிப்பீட்டையும் பெற்றது. அதன் க்ராஷ் டெஸ்ட் முடிவுகளின் விரிவான பார்வை இங்கே:

பெரியவர்களுக்கான பாதுகாப்பு

ஃப்ரண்டல் ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் சோதனை: 13.239 புள்ளிகள்

சைடு மூவபிள் டிஃபார்மபிள் பேரியர் சோதனை: 16.00 புள்ளிகள்

முன்பக்க தாக்க சோதனையில் ஓட்டுநரின் மார்பு 'விளிம்பு' நிலைக்கான பாதுகாப்பு மட்டுமே கிடைத்தது. அதே நேரத்தில் பயணிகளின் மார்புக்கு 'போதுமான' பாதுகாப்பு கிடைத்தது. ஓட்டுநர் மற்றும் பயணிகளின் முழங்கால்கள் மற்றும் தலைகள் இரண்டிற்கும் 'நல்ல' பாதுகாப்பு கிடைத்தது. மேலும் அவர்களின் முழங்காலுக்கு 'போதுமான' பாதுகாப்பு கிடைப்பதை காட்டியது. ஃபுட்வெல் மற்றும் பாடிஷெல் ஆகியவை நிலையானதாக மதிப்பீடு கிடைத்தது. அதாவது அவற்றால் கூடுதலான எடைகளை கையாள முடியும்.

சைடு இம்பாக்ட் சோதனையில், தலை, மார்பு, வயிறு, இடுப்பு பகுதி அனைத்துக்கும் ‘நல்ல’ பாதுகாப்பு கிடைத்தது. சைடு போல் இம்பாக்ட் சோதனையின் போது போது, ​​தலை, வயிறு மற்றும் இடுப்புக்கு 'நல்ல' பாதுகாப்பு கிடைத்தது, ஆனால் மார்பு 'விளிம்பு' பாதுகாப்பு மட்டுமே கிடைத்தது.

மேலும் படிக்க: 2024 மாருதி டிசையர் வேரியன்ட் வாரியான அம்சங்கள் விளக்கப்பட்டுள்ளன

குழந்தைகளுக்கான பாதுகாப்பு

முன்பக்க தாக்க சோதனை (64 கிமீ/மணி)

3 வயது டம்மி -யானது குழந்தை இருக்கையில் முன்னோக்கி எதிர்கொள்ளும் வகையில் வைக்கப்பட்டது. இது தலை மற்றும் கழுத்துக்கு முழுப் பாதுகாப்பை வழங்கியது. ஆனால் முன்பக்க தாக்க சோதனையின் போது கழுத்துக்கு ஓரளவுக்கு பாதுகாப்பை வழங்கியது.

18 மாத வயதுடைய டம்மி -யானது இருக்கையின் பின்புறம் எதிர்கொள்ளும் வகையில் நிறுவப்பட்டது. இது தலை வெளிப்படுவதைத் தடுத்து முழுமையாகப் பாதுகாப்பை கொடுத்தது.

பக்கவாட்டு தாக்க சோதனை (50 கிமீ/மணி)

இரு டம்மிகளின் குழந்தை தடுப்பு அமைப்புகள் (CRS) பக்க தாக்க சோதனையின் போது முழு பாதுகாப்பை வழங்கின.

2024 மாருதி டிசையர்: காரிலுள்ள பாதுகாப்பு வசதிகள்

மாருதி டிசையர் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பேஸ்-ஸ்பெக் LXi வேரியன்ட்டிலும் கூட ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வேரியன்ட் பின்புற டிஃபோகர், சீட்-பெல்ட் ரிமைண்டர்கள் மற்றும் அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாயிண்ட் சீட்பெல்ட்கள் மற்றும் ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் ஆகியவை உள்ளன. ஹையர் வேரியன்ட்கள் TPMS (டயர் அழுத்த கண்காணிப்பு அமைப்பு) மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளுடன் வருகின்றன.

2024 மாருதி டிசையர்: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

2023 மாருதி டிசையர் நவம்பர் 11 ஆம் தேதி வெளியிடப்படும். இதன் விலை ரூ.6.70 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2025 ஹோண்டா அமேஸ், டாடா டிகோர் மற்றும் ஹூண்டாய் ஆரா போன்ற சப் காம்பாக்ட் செடான்களுக்கு போட்டியாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Maruti டிசையர்

D
dilkhush meena
Nov 9, 2024, 8:00:10 AM

When this swift dzire hits any bike car or truck then it will be known whether it is 5 star or 0 star, if an accident happens then the speed is not less than 40-50 kmph

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.6.54 - 9.11 லட்சம்*
பேஸ்லிப்ட்
புதிய வேரியன்ட்
Rs.11.82 - 16.55 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.6 - 9.50 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.11.07 - 17.55 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை