2024 Maruti Dzire வேரியன்ட் வாரியான விவரங்கள் இங்கே
published on நவ 07, 2024 05:39 pm by dipan for மாருதி டிசையர்
- 126 Views
- ஒரு கருத்தை எழுதுக
LXi, VXi, ZXi மற்றும் ZXi பிளஸ் என 4 வேரியன்ட்களில் 2024 மாருதி டிசையர் கிடைக்கும்.
ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் -ன் உடன்பிறப்பான 2024 மாருதி டிசையர் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிசையர் 4 வேரியன்ட்களில் கிடைக்கும்: LXi, VXi, ZXi மற்றும் ZXi பிளஸ். இது வரும் நவம்பர் 11 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ளது. புதிய டிசையரின் ஒவ்வொரு வேரியன்ட்களும் பல்வேறு வசதிகள் மற்றும் ஆப்ஷன்களை கொண்டுள்ளன. டிசையரை வாங்க முடிவு செய்துள்ளீர்கள் என்றால் ஒவ்வொரு வேரியன்ட்டிலும் கிடைக்கும் விரிவான விவரங்களை இங்கே பார்க்கலாம்:
2024 மாருதி டிசையர் LXi
டிசைரின் என்ட்ரி-லெவல் LXi வேரியன்ட்டில் கிடைக்கும் வசதிகளின் விரிவான பட்டியல் இங்கே:
எக்ஸ்ட்டீரியர் |
இன்ட்டீரியர் |
கம்ஃபோர்ட் மற்றும் வசதி |
இன்ஃபோடெயின்மென்ட் |
பாதுகாப்பு |
|
|
|
|
|
மாருதி டிசைரின் என்ட்ரி-லெவல் LXi வேரியன்ட் ப்ரொஜெக்டர் ஹாலோஜன் ஹெட்லைட்கள், எல்இடி டெயில் லைட்ஸ், 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றுடன் தேவைப்படும் அடிப்படையான வசதிகளை கொண்டுள்ளது. இது டூயல்-டோன் இன்டீரியர், மேனுவல் ஏசி மற்றும் பவர் விண்டோக்களையும் கொண்டுள்ளது. இருப்பினும் இதில் ஆடியோ சிஸ்டம் மற்றும் அலாய் வீல்கள் கொடுக்கப்படவில்லை.
2024 மாருதி டிசையர் VXi
அடுத்ததாக VXi வேரியன்ட் பேஸ்-ஸ்பெக் LXi வேரியன்ட்டை விட பின்வரும் விஷயங்களை கூடுதலாக பெறுகிறது:
எக்ஸ்ட்டீரியர் |
இன்ட்டீரியர் |
கம்ஃபோர்ட் மற்றும் வசதி |
இன்ஃபோடெயின்மென்ட் |
பாதுகாப்பு |
|
|
|
|
|
முந்தைய வேரியன்ட் உடன் ஒப்பிடுகையில் பல குறிப்பிடத்தக்க அப்டேட்களுடன் பேஸ் LXi வேரியன்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இது டர்ன் இன்டிகேட்டர்களுடன் ORVM -கள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் பாடி கலர்டு டோர் ஹேண்டில்களும் உள்ளன. உள்ளே இது கப்ஹோல்டர்கள், பின்புற ஏசி வென்ட்கள், உயரத்தை அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுநர் இருக்கை மற்றும் எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் மற்றும் ஃபோல்டபிள் ORVMகளுடன் பின்புற சென்டர் ஆர்ம்ரெஸ்ட் உள்ளது. VXi வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் 4-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் கொண்ட 7-இன்ச் டச் ஸ்கிரீனையும் கொண்டுள்ளது.
மேலும் பார்க்க: 15 படங்களில் 2024 மாருதி டிசைரை விரிவாக பாருங்கள்
2024 மாருதி டிசையர் ZXi
மிட்-ஸ்பெக் ZXi வேரியன்ட் முந்தைய VXi டிரிம் உடன் ஒப்பிடும் போது பின்வரும் விஷயங்களை கொண்டுள்ளது:
எக்ஸ்ட்டீரியர் |
இன்ட்டீரியர் |
கம்ஃபோர்ட் மற்றும் வசதி |
இன்ஃபோடெயின்மென்ட் |
பாதுகாப்பு |
|
|
|
|
|
டிசைரின் ZXi வேரியன்ட் ஆட்டோ LED ஹெட்லைட்கள், LED DRL -கள் மற்றும் 15-இன்ச் அலாய் வீல்கள் போன்ற பிரீமியம் வசதிகளை கொண்டுள்ளது. புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ஆட்டோ ஏசி போன்ற மேம்பட்ட வசதி மற்றும் வசதிகளையும் கொண்டுள்ளது. 6 ஸ்பீக்கர்கள் (2 ட்வீட்டர்கள் உட்பட) மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜியுடன் இன்ஃபோடெயின்மென்ட் மேம்படுத்தப்பட்டுள்ளது. ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவை மூலம் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே ZXi அதிக டெக்னாலஜி நிறைந்த வேரியன்ட் ஆக உள்ளது.
2024 மாருதி டிசையர் ZXi பிளஸ்
ஃபுல்லி லோடட் 2024 மாருதி டிசையர் ZXi வேரியன்ட் பின்வரும் வசதிகளை கொண்டுள்ளது:
எக்ஸ்ட்டீரியர் |
இன்ட்டீரியர் |
கம்ஃபோர்ட் மற்றும் வசதி |
இன்ஃபோடெயின்மென்ட் |
பாதுகாப்பு |
|
|
|
|
|
ஃபுல்லி லோடட் 2024 மாருதி டிசையர் அதன் ஒட்டுமொத்த கவர்ச்சியை உயர்த்தும் உயர்தர வசதிகளுடன் வருகிறது. இது சிங்கிள்-பேன் சன்ரூஃப், LED முன் ஃபாக் லைட்ஸ், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் கலர்டு MID மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை உள்ளன. 9-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆர்காமிஸ்-டியூன் செய்யப்பட்ட சவுண்ட் சிஸ்டத்துடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 360 டிகிரி கேமரா மற்றும் வைப்ரேஷன் சென்சார் கொண்ட ஆன்டி தெஃப்ட் புரடெக்ஷன் அமைப்புடன் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: New Honda Amaze வெளியாகும் தேதி மற்றும் கூடுதல் விவரங்கள்
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
2024 ஸ்விஃப்ட்டுடன் அறிமுகமான அதே 1.2-லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இதிலும் உள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் |
1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல்-சிஎன்ஜி |
பவர் |
82 PS |
70 PS |
டார்க் |
112 Nm |
102 Nm |
டிரான்ஸ்மிஷன் |
5-ஸ்பீடு மேனுவல், 5-ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) |
5-ஸ்பீடு மேனுவல் |
கிளைம்டு மைலேஜ் |
24.79 கிமீ/லி (மேனுவல்), 25.71 கிமீ/லி (AMT) |
ஒரு கிலோவுக்கு 33.73 கி.மீ |
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
புதிய தலைமுறை மாருதி டிசையர் விலை ரூ. 6.70 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது 2025 ஹோண்டா அமேஸ், டாடா டிகோர் மற்றும் ஹூண்டாய் ஆரா போன்ற சப்காம்பாக்ட் செடான்களுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.