2023 டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் வெளியிடப்பட்டது, விலை ரூ. 16.19 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது
டாடா சாஃபாரி க்காக அக்டோபர் 17, 2023 05:11 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 180 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதுப்பிக்கப்பட்ட சஃபாரி நவீன வடிவமைப்பு மற்றும் சில புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
-
ரூ. 16.19 லட்சம் முதல் ரூ. xx லட்சம் வரை (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்) விலை இருக்கும்.
-
4 வேரியன்ட்களில் கிடைக்கிறது: ஸ்மார்ட், ப்யூர், அட்வென்ச்சர் மற்றும் அக்கம்பிளிஸ்டு.
-
வெளிப்புற வடிவமைப்பு மாற்றங்களை பொறுத்தவரையில் எஸ்யூவி -யின் முன் மற்றும் பின்புறத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
-
ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் பதிப்பில் உள்ள அதே 2-லிட்டர் டீசல் இன்ஜினை பெறுகிறது.
-
புதிய அம்சங்களில் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 ஏர்பேக்குகள், பவர்டு டெயில் கேட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை அடங்கும்.
2023 டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் ரூ.16.19 லட்சம் (அறிமுக, எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடுத்தர அளவிலான 3-வரிசை எஸ்யூவி 4 வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது: ஸ்மார்ட், ப்யூர், அட்வென்ச்சர் மற்றும் அக்கம்பிளிஸ்டு, மேலும் புதிய வடிவமைப்பு மற்றும் நவீன அம்சங்களை பெறுகிறது.
புதிய சஃபாரி எப்படி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மற்றும் அது என்ன வழங்குகிறது என்பதைப் பார்க்கவும்:
விலை
2023 டாடா சஃபாரி வேரியன்ட்கள் |
அறிமுக விலை (எக்ஸ்-ஷோரூம்) |
ஸ்மார்ட் |
ரூ.16.19 லட்சம் |
ப்யூர் |
ரூ.17.69 லட்சம் |
ப்யூர்+ |
ரூ.19.39 லட்சம் |
அட்வென்ச்சர் |
ரூ.20.99 லட்சம் |
அட்வென்ச்சர் |
ரூ.22.49 லட்சம் |
அக்கம்பிளிஸ்டு |
ரூ.23.99 லட்சம் |
அக்கம்பிளிஸ்டு+ |
ரூ.25.49 லட்சம் |
ஆட்டோமெட்டிக் வேரியன்ட்கள் |
|
ப்யூர்+, அட்வென்ச்சர்+, அக்கம்பிளிஸ்டு, அக்கம்பிளிஸ்டு+ |
ரூ.20.69 லட்சம் |
#டார்க் வேரியன்ட்கள் |
|
ப்யூர்+, அட்வென்ச்சர்+, அக்கம்பிளிஸ்டு, அக்கம்பிளிஸ்டு+ |
ரூ.20.69 லட்சம் |
சஃபாரி ஃபேஸ்லிஃப்டின் அனைத்து வெவ்வேறு வேரியன்ட்களுக்கான தொடக்க விலை விவரங்களை மட்டுமே டாடா பகிர்ந்துள்ளது மற்றும் முழு விலை பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பனோரமிக் சன்ரூஃப் ப்யூர்+ வேரியன்டில் கூடுதல் ஆப்ஷனாகும், அதே சமயம் ADAS என்பது சஃபாரி அட்வென்ச்சர்+ வேரியன்ட்டிற்கான கூடுதல் அம்சமாகும்.
புதிய சஃபாரியின் ஆரம்ப விலை முந்தைய விலையை விட ரூ.34,000 அதிகரித்துள்ளது. டாப்-ஸ்பெக் வேரியன்ட்களுக்கு, சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் ஒரு லட்சத்திற்கும் மேலாக விலை உயர்ந்துள்ளது. இப்போது புதிய சஃபாரி என்ன வழங்குகிறது என்பதைப் பார்ப்போம்.
நவீன வடிவமைப்பு
புதிய சஃபாரியின் ஒட்டுமொத்த வடிவம் மற்றும் அளவீடுகளும் அதன் முன்னோடிகளை போலவே உள்ளன, ஆனால் ஒவ்வொரு மூலையிலும் நவீன எலமென்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்புறம் கனெக்டட் DRL செட்டப், ஒரு புதிய ஸ்லீக்கர் கிரில், வெர்டிகலான LED ஹெட்லைட்கள் மற்றும் புதிய வடிவிலான பம்பர் மற்றும் ஸ்கிட் பிளேட் ஆகியவற்றை பெறுகிறது.
பக்கவாட்டு தோற்றம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லாமல் ஒரே மாதிரியாக உள்ளது, ஆனால் இப்போது புதிய 19-இன்ச் ஸ்டைலிஷ் அலாய் வீல்கள் மற்றும் முன் கதவுகளில் "சஃபாரி" பேட்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது.
பின்புறம் முன்புறம் போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளது. டெயில் லைட்டுகள் இப்போது இணைக்கப்பட்டுள்ளன, மேலும் பூட் லிப் மற்றும் பம்பர் புதிய வடிவில் இருக்கின்றன. பின்புறத்தில் உள்ள சஃபாரி லோகோ இப்போது பெரிதாக உள்ளது. டாடா மூன்று புதிய வண்ண ஆப்ஷன்களையும் வழங்குகிறது: காஸ்மிக் கோல்ட், சூப்பர்நோவா காப்பர் மற்றும் லூனார் ஸ்லேட்.
உள்ளே, கேபினில் தாக்கத்தை ஏற்படுத்தும் நவீன வடிவமைப்பு மாற்றங்களின் அதே ட்ரீட்மென்ட்டை பெறுகிறது. டேஷ்போர்டு அடுக்குகளாகவும், வுடன் இன்செர்ட்களை பெறவும், கீழே சீராக வளைந்த வடிவமைப்பை கொண்டுள்ளது. கிராப் ஹேண்டில்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை ஆனால் பேக்லிட் டாடா லோகோவுடன் புதிய 4-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் சென்டர் கன்சோலில் டச்-பேஸ்டு க்ளைமேட் கண்ட்ரோல் பேனல் உள்ளது.
அதே பவர்டிரெய்ன்
மேம்படுத்தப்பட்ட டாடா சஃபாரி அதன் ப்ரீ-ஃபேஸ்லிப்ட் வெர்ஷனின் அதே இன்ஜினை கொண்டுள்ளது. 2-லிட்டர் டீசல் இன்ஜின் 170PS மற்றும் 350Nm ஐ கொடுக்கிறது, மேலும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமெட்டிக் வேரியன்ட்களும் வசதிக்காக பேடில் ஷிஃப்டர்களை பெறுகின்றன.
டாடா எஸ்யூவி -க்காக 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினையும் உருவாக்கியுள்ளது, இது சரியான நேரத்தில் புதிய சஃபாரியில் கொடுக்கப்படும்.
விரிவாக்கப்பட்ட அம்சங்களின் பட்டியல்
இந்த ஃபேஸ்லிஃப்ட் மூலம், டாடா சஃபாரியின் அம்ச பட்டியலில் நிறைய சேர்க்கப்பட்டுள்ளன. இப்போது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 12.3 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, மல்டிகலர் அம்பியன்ட் லைட்டிங், டச் பேஸ்டு ஏசி பேனல், 10 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஒரு பவர்டு டெயில் கேட் கொண்ட டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றை பெறுகிறது.
வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் (6-சீட்டர் வேரியன்ட்களில் 2வது வரிசை இருக்கைகள்) போன்ற மற்ற அம்சங்கள் தக்கவைக்கப்பட்டுள்ளன. டிரைவரின் இருக்கையானது 6-வே பவர் அட்ஜெஸ்ட் செய்யக்கூடியதாக உள்ளது.
பாதுகாப்பின் அடிப்படையில் கூட, சஃபாரி இப்போது 7 ஏர்பேக்குகளை பெறுகிறது மற்றும் அதன் ADAS தொகுப்பில் இப்போது அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளது. மற்ற பாதுகாப்பு அம்சங்களில் EBD உடன் ஏபிஎஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), 360 டிகிரி கேமரா, லேன் டிபார்ச்சர் வார்னிங், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் ஆகியவை அடங்கும்.
போட்டியாளர்கள்
மஹிந்திரா XUV700, எம்ஜி ஹெக்டர் பிளஸ் மற்றும் ஹூண்டாய் அல்காஸர் ஆகிய கார்களுடன் டாடா சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் அதன் போட்டியை தொடர்கிறது