டீலர்ஷிப்புக்கு வந்த சிட்ரோன் eC3 - கார். இப்போது நீங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தும் பார்க்கலாம்
modified on மார்ச் 01, 2023 07:09 pm by shreyash for citroen ec3
- 47 Views
- ஒரு கருத்தை எழுதுக
எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரின் விலை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
அப்டேட்: eC3 - கார் ரூ.11.50 ( அறிமுக விலை, எக்ஸ்-ஷோரூம் ) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
-
eC3 - ஐ டோக்கன் தொகையாக 25,000 ரூபாய் கொடுத்து முன்பதிவு செய்யலாம்.
-
இது 29.2 கிலோ வாட் பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது, இதன் மூலமாக 320 கி.மீ தூரம் பயணிக்கலாம்.
-
அதன் மின்சார மோட்டார் 57 PS மற்றும் 143 NM உற்பத்தி செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
-
வழக்கமான C3 -யின் அதே வடிவமைப்பு மற்றும் அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.
-
சிட்ரோன், காரின் eC3 -யின் விலை 11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கலாம்.
சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள முதல் எலக்ட்ரிக் வாகனமான eC3, டீலர்ஷிப்களை சென்றடையத் தொடங்கியுள்ளது. டீலர்ஷிப்பில் கார்கள் இருப்பதைப் பொறுத்து பொறுத்து, எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கின் டெஸ்ட் டிரைவ்களை செய்து கொள்ளலாம். eC3 ஹேட்ச்பேக்கின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அதன் முன் பதிவானது ஒரு மாதத்துக்கு முன்பாகவே ரூ.25,000 டோக்கன் தொகைக்கு தொடங்கப்பட்டுள்ளது.
காரின் தோற்றம் எப்படி இருக்கிறது?
வலது முன் ஃபெண்டரில் ஈவி சார்ஜிங் ஃபிளாப்பைத் தவிர, eC3 வழக்கமான C3-யின் ஹேட்ச்பேக் கிராஸ்ஓவரைப் போலவே தெரிகிறது. ஷோரூமுக்கு வந்த யூனிட், வெளியிடப்பட்ட ஸ்பெக் போலவே, போலார் ஒயிட் ரூஃப் உடன் ஜெஸ்டி ஆரஞ்சு நிறத்தில் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: eC3 எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் மூலம் ஃப்ளீட் சந்தையில் சிட்ரோன் நுழைகிறது
உட்புறத்தில், எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கில் C3 போன்ற வசதிகள் உள்ளன. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் கூடிய 10.2-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மேனுவல் ஏசி மற்றும் டிஜிட்டலைஸ் செய்யப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை இந்தக் காரில் கொடுக்கப்பட்டுள்ள வசதிகளாகும். கியர் செலக்டரை மாற்றியமைக்கும் டிரைவ் மோட் செலக்டரை மாற்றுவதுதான் இங்கு குறிப்பிடத்தக்க வித்தியாசமாக உள்ளது.
டுயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், ஈபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை மூலம் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் பார்க்கவும்: 3-வரிசை சிட்ரோயன் C3 மீண்டும் கேமராவில் சிக்கியது, இந்த முறை அதன் உட்புறத்தைக் காட்டுகிறது
EV பவர்டிரெய்ன் & சார்ஜிங் விவரங்கள்
eC3 ஆனது 57 PS மற்றும் 143 NM - ஐ உற்பத்தி செய்யும் மின்சார மோட்டாருடன் 29.2 கிலோ வாட் பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது. இது 6.8 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 60 கி.மீ வேகத்தை எட்டுகிறது. மேலும் 320 கி.மீ (எம்ஐடிசி மதிப்பிடப்பட்டது) தூரத்துக்கு இந்த காரை ஓட்ட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கை சார்ஜ் செய்வதற்காக கீழ்கண்ட சார்ஜிங் வகைகளில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ள முடியும்:
15A பிளக் பாயிண்ட் (10 முதல் 100% வரை) |
10 மணி 30 நிமிடங்கள் |
டிசி ஃபாஸ்ட் சார்ஜர் (10 முதல் 80% வரை) |
57 நிமிடங்கள் |
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
eC3 எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கின் விலையை சிட்ரோன் இன்னும் வெளியிடவில்லை, ஆனால் அவை ரூ. 11 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது இரண்டு வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படும் - லைவ் அண்ட் ஃபீல், இவற்றை தேர்வு செய்வதற்கு பின்னால் இரண்டுக்கும் இடையே ஏராளமான தோற்ற வித்தியாசங்களும் உள்ளன. இது டாடா டியாகொ ஈவி மற்றும் டாடா டிகோர் ஈவி போன்றவற்றை எதிர்கொள்ளும்.