Tata Punch EV மற்றும் Citroen eC3: விவரங்கள் ஒரு ஒப்பீடு
published on ஜனவரி 22, 2024 05:25 pm by shreyash for டாடா பன்ச் EV
- 35 Views
- ஒரு கருத்தை எழுதுக
பன்ச் EV ஆனது சிட்ரோன் eC3 -யை விட சிறப்பான தொழில்நுட்பத்தை கொண்டது. அது மட்டுமல்லாமல் நீண்ட தூரத்துக்கான பேட்டரி பேக் ஆப்ஷனையும் வழங்குகிறது.
டாடா பன்ச் EV டாடா -வின் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தும் ஆல் எலக்ட்ரிக் வரிசையில் சேர்ந்துள்ள புதிய கார் ஆகும். மைக்ரோ எஸ்யூவி, அதன் ஆல்-எலக்ட்ரிக் வடிவில், பல புதிய அம்சங்களையும் பெற்றுள்ளது.அளவு மற்றும் விலை அடிப்படையில் பார்த்தால் பன்ச் EV -க்கு மிக நெருக்கமான போட்டியாளராக சிட்ரோன் eC3 உள்ளது. விவரங்களை வைத்து eC3 -க்கு எதிராக பன்ச் EV எப்படி போட்டியிடுகின்றது என்பதை இப்போது பார்க்கலாம்.
அளவுகள்
அளவுகள் |
டாடா பன்ச் EV |
சிட்ரோன் eC3 |
நீளம் |
3857 மி.மீ |
3981 மி.மீ |
அகலம் |
1742 மி.மீ |
1733 மி.மீ |
உயரம் |
1633 மி.மீ |
1604 மி.மீ வரை |
வீல்பேஸ் |
2445 மி.மீ |
2540 மி.மீ |
பூட் ஸ்பேஸ் |
366 லிட்டர் (+14 லிட்டர் ஃப்ரங்க் ஸ்டோரேஜ்) |
315 லிட்டர் |
-
சிட்ரோன் eC3 டாடா பன்ச் EV -யை விட நீளமாக இருந்தாலும், இது சிட்ரோனின் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கை விட அகலமாகவும் உயரமாகவும் பன்ச் EV உள்ளது.
-
இருப்பினும், சிட்ரோன் eC3 நீண்ட வீல்பேஸை கொண்டுள்ளது, பன்ச் EV -யை விட அதன் நீளம் சாதகமாக உள்ளது.
-
பூட் ஸ்பேஸ் என்று வரும்போது, டாடா பன்ச் EV -யானது பின்புறத்தில் அதிக லக்கேஜ் பகுதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், முன்பக்கத்தில் பானட்டின் கீழ் கூடுதலாக 14 லிட்டர் சேமிப்பகத்துடன் வருகிறது.
இதையும் பார்க்கவும்: டாடா பன்ச் EV vs சிட்ரோன் eC3 vs டாடா டியாகோ EV vs MG காமெட் EV: கார்களின் விலை ஒப்பீடு
எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் விவரங்கள்
விவரங்கள் |
டாடா பன்ச் EV |
சிட்ரோன் eC3 |
|
ஸ்டாண்டர்டு |
லாங் ரேஞ்ச் |
||
பேட்டரி பேக் |
25 kWh |
35 kWh |
29.2 kWh |
பவர் |
82 PS |
122 PS |
57 PS |
டார்க் |
114 Nm |
190 Nm |
143 Nm |
கிளைம்டு ரேஞ்ச் |
315 கி.மீ |
421 கி.மீ |
320 கி.மீ |
-
பன்ச் EV மற்றும் eC3 ஆகிய இரண்டும் 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்யும் போது சமமான சார்ஜிங் நேரத்தையே கொண்டுள்ளது.
-
ஆனால் கூடுதலாக பன்ச் EV வாடிக்கையாளர்கள் ரூ.50,000 செலுத்தினால் சார்ஜ் செய்யும் நேரத்தை குறைக்கும் வகையில் 7.2kW AC ஃபாஸ்ட் சார்ஜரை பெறலாம்.
-
eC3, மறுபுறம், 3.3 kW AC சார்ஜர் ஆப்ஷனை மட்டுமே பெறுகிறது, இது பேட்டரியை 10 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 10 மணிநேரத்திற்கும் மேலாக எடுக்கும்.
சார்ஜிங்
சார்ஜர் |
டாடா பன்ச் EV |
சிட்ரோன் eC3 |
|
ஸ்டாண்டர்டு |
லாங் ரேஞ்ச் |
||
DC ஃபாஸ்ட் சார்ஜர் (10-80%) |
56 நிமிடங்கள் |
56 நிமிடங்கள் |
57 நிமிடங்கள் |
7.2 kW AC சார்ஜர் (10-100 %) |
3.5 மணி நேரம் |
5 மணிநேரம் |
என்.ஏ. |
15 A / 3.3 kW சார்ஜர் (10-100 %) |
9.4 மணிநேரம் |
13.5 மணிநேரம் |
10.5 மணி நேரம் |
-
பன்ச் EV மற்றும் eC3 இரண்டும் 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் செய்யும் போது சமமான சார்ஜிங் நேரத்தையே கொண்டுள்ளன.
-
வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.50,000 செலுத்தினால், சார்ஜ் செய்யும் நேரத்தைக் குறைக்க உதவும் 7.2kW AC ஃபாஸ்ட் சார்ஜரை பெறலாம்.
-
மறுபுறம் eC3 -யில் 3.3 kW AC சார்ஜருக்கான ஆப்ஷன் மட்டுமே உள்ளது, இது பேட்டரியை 10 முதல் 100 சதவீதம் வரை ஜூஸ் செய்ய 10 மணிநேரத்திற்கும் மேலாக எடுக்கும்.
இதையும் பார்க்கவும்: 2025 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ள டாடா EV -கள் என்னவென்று தெரியுமா ?
அம்சம் சிறப்பம்சங்கள்
டாடா பன்ச் EV |
சிட்ரோன் eC3 |
(TPMS) |
|
-
டாடா பன்ச் EV ஆனது சிட்ரோன் eC3 மற்றும் மேலே உள்ள ஒரு பிரிவில் இருந்து வரும் சிலவற்றை விட அதிகமான கம்ஃபோர்ட் வசதிகளை வழங்குகிறது.
-
வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளை வழங்கும் அதன் அளவிலான ஒரே எலக்ட்ரிக் மைக்ரோ-எஸ்யூவியாக பன்ச் EV தனித்து நிற்கிறது.
-
10.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் உள்ள பன்ச் EV -யின் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் கூட, eC3 இன் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்டை விட ரூ. 62,000 குறைவானது, LED ஹெட்லைட்கள், குளிரூட்டப்பட்ட க்ளோவ்பாக்ஸ், ஆட்டோமெட்டிக் ஏசி, ஒரு ஏர் ஃபியூரிபையர், மற்றும் மல்டி-மோட் ரீனெஜரேட்டிவ் பிரேக்கிங். சுவாரஸ்யமாக, இதன் விலை ரூ.13 லட்சம் என்றாலும் கூட இந்த அம்சங்கள் சிட்ரோன் eC3 இன் டாப்-ஸ்பெக் வேரியன்டில் கூட வழங்கப்படவில்லை, டாடாவின் மைக்ரோ எலக்ட்ரிக் எஸ்யூவி 6 ஏர்பேக்குகள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களையும் வழங்குகிறது.
-
சிட்ரோன் எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா போன்ற சில முக்கிய அம்சங்களைத் கொடுக்கவில்லை. இந்த வசதிகள் இப்போது eC3 -யை விடக் குறைவான விலையில் உள்ள கார்களில் கூட கிடைக்கின்றன.
விலை
டாடா பன்ச் EV |
சிட்ரோன் eC3 |
ரூ.10.99 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் (அறிமுகம்) |
ரூ.11.61 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை |
தீர்ப்பு
டாடா பன்ச் EV ஆனது சிட்ரோன் eC3 -யை விட பணத்திற்கான அதிக மதிப்புடைய காராக உள்ளது, அதன் விரிவான அம்சங்கள் பட்டியல் மற்றும் லாங் ரேஞ்ச் ஆப்ஷன்களையும் இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அதே சமயம் சிட்ரோன் eC3 -யின் டாப்-ஸ்பெக் டிரிம் கூட சில குறிப்பிடத்தக்க வசதிகளை கொண்டிருக்கவில்லை, மேலும் நீண்ட தூர பேட்டரி ஆப்ஷனும் இல்லை. இந்த எலக்ட்ரிக் மாடல்களில் எதை நீங்கள் வாங்க விரும்புகிறீர்கள், ஏன்? என்பதை கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
மேலும் படிக்க: பன்ச் EV ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful