டாடா பன்ச் EV vs சிட்ரோன் eC3 vs டாடா டியாகோ EV vs MG காமெட் EV: கார்களின் விலை ஒப்பீடு
published on ஜனவரி 19, 2024 06:23 pm by rohit for டாடா பன்ச் EV
- 704 Views
- ஒரு கருத்தை எழுதுக
பன்ச் EV -யானது, 400 கி.மீ.க்கு மேல் கிளைம்டு ரேஞ்ச் கொண்டதாக உள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரிக் கார் சந்தையில் முதல் எலக்ட்ரிக் மைக்ரோ எஸ்யூவி -யாக டாடா பன்ச் EV களமிறங்கியுள்ளது. இந்த காரின் விலை ரூ. 15 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகின்றது .இதை வாங்க விரும்பினால், ஆல் எலக்ட்ரிக் சப்-4m செடான் உட்பட ஐந்து ஆப்ஷன்களை தேர்வுசெய்யலாம். பன்ச் EV -யின் விலை அதன் நெருங்கிய போட்டியாளர்களின் விலையுடன் ஒன்றிப்போகின்றது என்பதால், விலையின் அடிப்படையில் அதன் போட்டியாளர்களுக்கு எதிராக இது போட்டியிடப்போகின்றது என்பதை இங்கே பார்க்கலாம்.
விலை அட்டவணை
டாடா பன்ச் EV (அறிமுகம்) |
சிட்ரோன் eC3 |
டாடா டியாகோ EV |
எம்ஜி காமெட் இவி |
டாடா டிகோர் EV |
XT MR - ரூ 9.29 லட்சம் |
பிளே - ரூ.9.28 லட்சம் |
|||
XT LR - ரூ.10.24 லட்சம் |
பிளஷ் - ரூ.9.98 லட்சம் |
|||
ஸ்மார்ட் - ரூ 10.99 லட்சம் |
XZ+ LR - ரூ.11.04 லட்சம் |
|||
ஸ்மார்ட்+ - ரூ 11.49 லட்சம் |
லிவ் - ரூ.11.61 லட்சம் |
XZ+ டெக் லக்ஸ் LR - ரூ. 11.54 லட்சம் |
||
XZ+ LR (7.2 kW சார்ஜருடன்) - ரூ.11.54 லட்சம் |
||||
அட்வென்ச்சர் - ரூ.11.99 லட்சம் |
XZ+ டெக் Lux LR (7.2 kW சார்ஜருடன்) - ரூ.12.04 லட்சம் |
XE - ரூ.12.49 லட்சம் |
||
எம்பவர்டு- ரூ.12.79 லட்சம் |
ஃபீல் - ரூ.12.70 லட்சம் |
XT - ரூ.12.99 லட்சம் |
||
ஃபீல் வைப் பேக் - ரூ 12.85 லட்சம் |
||||
அட்வென்ச்சர் LR - ரூ 12.99 லட்சம் |
ஃபீல் டூயல் டோன் வைப் பேக் - ரூ. 13 லட்சம் |
|||
எம்பவர்டு + - ரூ 13.29 லட்சம் |
XZ+ - ரூ 13.49 லட்சம் |
|||
எம்பவர்டு LR - ரூ 13.99 லட்சம் |
XZ+ லக்ஸ் - ரூ 13.75 லட்சம் |
|||
எம்பவர்டு+ LR - ரூ 14.49 லட்சம் |
குறிப்பு: 1) பன்ச் EV -யின் அனைத்து லாங் ரேஞ்ச் (LR) வேரியன்ட்களையும் 7.2 kW AC ஃபாஸ்ட் சார்ஜர் ஆப்ஷனுடன் ரூ. 50,000 கூடுதலாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
2) பன்ச் EV -யின் சன்ரூஃப் பொருத்தப்பட்ட வேரியன்ட்டை நீங்கள் வாங்க விரும்பினால், அதை மிட்-ஸ்பெக் அட்வென்ச்சர் டிரிம்மிலிருந்து ரூ. 50,000 கூடுதலான செலுத்தி வாங்கலாம்.
இதையும் பார்க்கவும்: டாடா பன்ச் EV vs டாடா Tiago EV vs டாடா டிகோர் EV vs டாடா நெக்ஸான் EV: விவரங்கள் ஒரு ஒப்பீடு
முக்கியமான விவரங்கள்
-
எம்ஜி காமெட் இவி, ரூ.7.98 லட்சத்தில், இங்கு மிகவும் குறைவான ஆரம்ப விலை உள்ளது, ஏனெனில் இது ஒரு சிறிய (17.3 kWh) பேட்டரி பேக் மற்றும் குறைவான (230 கிமீ வரை) ரேஞ்ச் க்ளைம் செய்யப்பட்ட 2-டோர் 4-சீட்டர் காராகும்.
-
இதற்கிடையில், டாடா டியாகோ EV ரூ.8.69 லட்சத்தில் தொடங்கும் மிகவும் குறைவான விலையுடன் நடைமுறைக்கு எற்ற EV -யாக உள்ளது.
-
ரூ.10.99 லட்சத்தில், பன்ச் EV இன் என்ட்ரி-லெவல் வேரியன்ட், இதன் நேரடி போட்டியாளராக உள்ள சிட்ரோன் eC3 -யின் விலையை விட ரூ.50,000 குறைவாக உள்ளது.
-
சிட்ரோனின் ஆல்-எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் 320 கிமீ ரேஞ்சை கொண்டுள்ளது, அதே நேரத்தில் பன்ச் EV வேரியன்ட்கள் 315 கிமீ வரை ரேஞ்சை கொண்டுள்ளன.
-
பன்ச் EV மற்றும் டாடா டியாகோ EV 25 kWh/ 35 kWh மற்றும் 19.2 kWh/ 24 kWh - ஆகிய இரண்டு பேட்டரி பேக்குகளை கொடுக்கும் ஒரே எலக்ட்ரிக் கார்கள் இங்கே உள்ளன.
-
சிறிய பேட்டரி பேக் கொண்ட டாப்-ஸ்பெக் பன்ச் EV டாப்-ஸ்பெக் eC3 -யை விட ரூ.29,000 மட்டுமே அதிகம். மேலும், 421 கிமீ வரை கிளைம்டு ரேஞ்ச்க் கொண்ட என்ட்ரி-லெவல் லாங் ரேஞ்ச் வேரியன்ட்டின் விலையும் மிக நெருக்கமாக உள்ளது.
-
MG காமெட் EV தவிர இங்குள்ள அனைத்து EV -களையும் 50 kW DC சார்ஜரை பயன்படுத்தி வேகமாக சார்ஜ் செய்ய முடியும், இது ஒரு மணி நேரத்திற்குள் 10 முதல் 80 சதவீதம் வரை இருக்கும்.
-
டியாகோ EV மற்றும் டாடா டிகோர் EV பன்ச் EV -யின் மீடியம் ரேஞ்ச் வேரியன்ட்களை போலவே கிளைம்டு ரேஞ்ச் -ஐயும் வழங்குகிறது: 315 கிமீ.
-
பன்ச் EV -ன் எம்பவர்டு+ LR என்பது இந்த அட்டவணையில் உள்ள விலையுயர்ந்த டாப்-ஸ்பெக் வேரியன்ட் ஆகும். டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள், 360 டிகிரி கேமரா மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற வசதிகளுடன் இது ஃபுல்லி லோடட் ஆகவும் உள்ளது.
-
இங்குள்ள அனைத்து டாடா EV -க்களும் ஆப்ஷனலான 7.2 kW AC ஃபாஸ்ட் சார்ஜருடன் வருகின்றன, அதற்காக ரூ. 50,000 கூடுதல் செலவாகும்.
போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது பன்ச் EV -யின் விலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமென்ட் பகுதியில் உங்கள் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (பான்-இந்தியா) -வுக்கான விலை ஆகும்
இதையும் பார்க்கவும்: 2025 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ள டாடா EV -கள் என்னவென்று தெரியுமா ?
மேலும் படிக்க: டாடா பன்ச் EV ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful