Tata Punch EV எம்பவர்டு S மீடியம் ரேஞ்ச் மற்றும் Citroen eC3 ஷைன்: எந்த EV -யை வாங்கலாம் ?
published on ஜூலை 02, 2024 05:17 pm by shreyash for டாடா பன்ச் EV
- 29 Views
- ஒரு கருத்தை எழுதுக
சிட்ரோன் eC3 -யில் ஒரு பெரிய பேட்டரி பேக் உள்ளது. அதே வேளையில் டாடா பன்ச் EV அதிக தொழில்நுட்பம் கொண்டதாக உள்ளது.
டாடா பன்ச் EV இந்த ஆண்டு ஜனவரியில் ஆல் எலக்ட்ரிக் காராக அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் இது கிடைக்கிறது. பன்ச் EV க்கு மிக முக்கிய போட்டியாளர்களில் ஒன்றாக சிட்ரோன் eC3 உள்ளது. மற்றும் அதன் ஒன்-பிலோவ்-டாப்- எம்பவர்டு S மீடியம்-ரேஞ்ச் வேரியன்ட் eC3 -யின் டாப்-ஸ்பெக் ஷைன் வேரியன்ட் -க்கு நெருக்கமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேப்பரில் உள்ள விவரங்கள் மற்றும் வசதிகளின் அடிப்படையில் அவற்றின் ஒப்பீடு இங்கே.
விலை
டாடா பன்ச் EV எம்பவர்டு எஸ் மீடியம் ரேஞ்ச் |
சிட்ரோன் eC3 ஷைன் |
ரூ.13.29 லட்சம் |
ரூ.13.26 லட்சம் |
-
eC3 -யின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டை விட பன்ச் EV எம்பவர்டு S மீடியம் ரேஞ்ச் விலை ரூ.3,000 அதிகம்.
அளவுகள்
அளவுகள் |
டாடா பன்ச் EV |
சிட்ரோன் eC3 |
நீளம் |
3857 மி.மீ |
3981 மி.மீ |
அகலம் |
1742 மி.மீ |
1733 மி.மீ |
உயரம் |
1633 மி.மீ |
1604 மி.மீ வரை (ரூஃப் ரெயில்களுடன்) |
வீல்பேஸ் |
2445 மி.மீ |
2540 மி.மீ |
பூட் ஸ்பேஸ் |
366 லிட்டர் |
315 லிட்டர் |
-
பன்ச் EV ஆனது eC3 -யை விட அகலமானதாக இருந்தாலும் கூட eC3 ஆனது பன்ச் EV -யை விட நீளமாகவும் உயரமாகவும் உள்ளது.
-
பன்ச் EV -யை விட eC3 95 மி.மீ நீளமான வீல்பேஸை கொண்டுள்ளது.
-
இருப்பினும் eC3 உடன் ஒப்பிடும்போது பன்ச் EV 51 லிட்டர் கூடுதல் பூட் இடத்தை வழங்குகிறது.
மேலும் பார்க்க: 2024 ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து புதிய கார்களின் விவரங்கள் இங்கே
எலக்ட்ரிக் பவர்டிரெய்ன்
விவரங்கள் |
டாடா பன்ச் EV மீடியம் ரேஞ்ச் |
சிட்ரோன் eC3 |
பேட்டரி பேக் |
25 kWh |
29.2 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் |
1 |
1 |
பவர் |
82 PS |
57 PS |
டார்க் |
114 Nm |
143 Nm |
கிளைம்டு ரேஞ்ச் |
315 கி.மீ |
320 கி.மீ |
-
சிட்ரோன் eC3 ஆனது பன்ச் EV உடன் ஒப்பிடும்போது ஒரு பெரிய பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. எனவே சிட்ரோன் -ன் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் சற்று அதிக கிளைம்டு ரேஞ்சையும் வழங்குகிறது.
-
இருப்பினும் இது பன்ச் EV அதன் எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் பேப்பரில் அதிக செயல்திறனை வழங்குகிறது. ஏனெனில் இது eC3 -யை விட 25 PS அதிக சக்தி வாய்ந்தது.
-
ஆனால் eC3 ஆனது பன்ச் EV -யை விட 29 Nm அதிக டார்க்கை அவுட்புட்டை கொடுக்கிறது.
சார்ஜிங் விவரங்கள்
சார்ஜர் |
டாடா பன்ச் EV மீடியம் ரேஞ்ச் |
சிட்ரோன் eC3 |
DC ஃபாஸ்ட் சார்ஜர் (10-80%) |
56 நிமிடங்கள் |
57 நிமிடங்கள் |
15 A / 3.3 kW சார்ஜர் (10-100 %) |
9.4 மணிநேரம் |
10.5 மணி நேரம் |
-
பேட்டரி பேக்குகளின் அளவு வித்தியாசம் இருந்தபோதிலும் DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தும் போது இரண்டும் ஏறக்குறைய சமமான சார்ஜிங் டைமிங்கை கொண்டுள்ளன.
-
சிட்ரோன் eC3 -யின் பெரிய பேட்டரி பேக் காரணமாக, வழக்கமான AC சார்ஜரை பயன்படுத்தினால் 10-100 சதவிகிதம் சார்ஜ் செய்ய 1 மணிநேரம் கூடுதலாக எடுக்கும்.
வசதிகள்
வசதிகள் |
டாடா பன்ச் EV எம்பவர்டு S |
சிட்ரோன் eC3 ஷைன் |
வெளிப்புறம் |
|
|
உட்புறம் |
|
|
கம்ஃபோர்ட் & வசதி |
|
|
இன்ஃபோடெயின்மென்ட் |
|
|
பாதுகாப்பு |
|
|
-
வெறும் ரூ. 3,000 கூடுதலாக கொடுக்கும் போது டாடா பன்ச் EV என்பது சிட்ரோன் eC3 -யை விட அதிக மதிப்புடைய தேர்வாகும். இது அதிக தொழில்நுட்பம் கொண்டது மட்டுமல்லாமல், அதிக பாதுகாப்பு அம்சங்களையும் வழங்குகிறது.
-
டாடாவின் ஆல்-எலக்ட்ரிக் மைக்ரோ எஸ்யூவி ஆனது சிட்ரோன் eC3 -ல் இல்லாத ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்ஸ், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஏசி, ஏர் ப்யூரிஃபையர், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் போன்ற வசதிகளைப் பெறுகிறது.
-
இருப்பினும் இரண்டு EV -களும் 10-இன்ச் டச் ஸ்கிரீன்களைப் பெறுகின்றன, மேலும் இரண்டும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்கின்றன. eC3 இன் 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டத்துடன் ஒப்பிடும்போது பன்ச் EV ஆனது 6-ஸ்பீக்கர் ஸ்பீக்கர் செட்டப்பை பெறுகிறது.
-
பாதுகாப்புக்காக பன்ச் EV -யில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை உள்ளன. ஒப்பிடுகையில் eC3 ஆனது டூயல் முன் ஏர்பேக்குகளை மட்டுமே பெறுகிறது. மேலும் பன்ச் EV -யில் உள்ள குறிப்பிடப்பட்ட மற்ற எந்த பாதுகாப்பு வசதிகளும் eC3 -யில் இல்லை.
முக்கியமான விவரங்கள்
ஒப்பீட்டின் அடிப்படையில் பன்ச் EV ஆனது சிட்ரோன் eC3 -யை விட அதிக தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பான ஆப்ஷனாக உள்ளது என்பது தெளிவாகிறது. மறுபுறம் eC3 ஒரு பெரிய பேட்டரி பேக்கை கொண்டுள்ளது ஆனால் பல கம்ஃபோர்ட் மற்றும் வசதிக்காக விஷயங்கள் கொடுக்கப்படவில்லை. எனவே அதே விலை வரம்பில் சிறந்த பேக்கேஜ் கொண்ட EV -யை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் நீங்கள் டாடா பன்ச் EV -யை வாங்கலாம். வசதிகளை விட அதிக ரேஞ்ச் கொண்ட சற்றே பெரிய பேட்டரி பேக்கிற்கு நீங்கள் முன்னுரிமை அளித்தாலோ, பின்புறத்தில் சற்று கூடுதலான லெக்ரூம் தேவைப்பட்டாலோ eC3 -யை கவனத்தில் கொள்ளலாம்.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான ஒப்பீடுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை பின்தொடரவும்
மேலும் படிக்க: டாடா பன்ச் EV ஆட்டோமெட்டிக்