சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2023 டாடா நெக்ஸான் மற்றும் நெக்ஸான் EV கார்களை டீலர்ஷிப்களில் இப்போது நீங்கள் பார்க்கலாம்

published on செப் 13, 2023 06:27 pm by ansh for டாடா நிக்சன்

செப்டம்பர் 14 ஆம் தேதி ICE மற்றும் EV மாடல்களின் விலையை டாடா அறிவிக்கும்

  • நெக்ஸான் EV அதன் டாப்-ஸ்பெக் எம்பவர்டு வேரியன்ட் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

  • ICE நெக்ஸான் டாப்-ஸ்பெக் பியர்லெஸ் வேரியன்ட்யில் டீலர்ஷிப்புகளை அடைந்துள்ளது.

  • இரண்டு மாடல்களும் ஒரே மாதிரியாக தோற்றமளிக்கின்றன, வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் நுட்பமான மாற்றங்களுடன் வெளிவந்துள்ளன.

  • நெக்ஸானின் தொடக்க விலை ரூ.8 லட்சம் முதல் இருக்கலாம் மற்றும் நெக்ஸான் EV ரூ.15 லட்சத்தில் (எக்ஸ்- ஷோரூம்) கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் ஆகிய கார்கள் டாடா நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன, மேலும் இரண்டிற்கும் முன்பதிவுகள் தொடங்கப்படுள்ளன. டாடா இந்த விலையை செப்டம்பர் 14 -ம் தேதி அறிவிக்கவுள்ளது, ஆனால் இந்த கார்கள் அறிமுகத்திற்கு முன்பே டீலர்ஷிப்புகளை அடைந்துள்ளதால் நீங்கள் இப்போது நேரில் சென்று இந்த கார்களை பார்க்கலாம்.

வடிவமைப்பு வேறுபாடுகள்

தூரத்தில் இருந்து பார்த்தால், ICE மற்றும் EV நெக்ஸான் ஆகியவற்றை தனித்தனியாக அடையாளம் காண்பது எளிதானதாக இல்லை. ஆனால் அருகில் நெருக்கமாக பார்த்தால், வேறுபாடுகள் மிகவும் தெளிவாக உள்ளன. இந்த EV இணைக்கப்பட்ட LED DRL அமைப்பு, மூடிய கிரில் மற்றும் பம்பர் மற்றும் ஹெட்லேம்பு ஹௌசிங்கில் செங்குத்து பேட்டர்ன்கள் உள்ளன. பூட்லிடில் உள்ள "Nexon" மற்றும் "Nexon.ev" பேட்ஜ்களை தவிர பக்கவாட்டு மற்றும் பின்புற தோற்றம் ஒரே மாதிரியாக உள்ளது.

2023 நெக்ஸான் EV காரின் டாப் வேரியன்ட்டில் 12.3 இன்ச் டச் ஸ்கிரீனுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் வென்டிலேட்டட் முன்பக்க இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் நெக்ஸான் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட்டை பெறுகிறது மற்றும் அதன் டாப்-ஸ்பெக் பதிப்பில் வென்டிலேட்டட் முன்புற இருக்கைள் கொடுக்கப்படவில்லை. இது மேனுவல் டிரான்ஸ்மிஷனையும் பெறுகிறது, எனவே ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களில் வழங்கப்படும் பேடில் ஷிஃப்டர்கள் இதில் கொடுக்கப்படவில்லை.

அம்சங்கள்

இந்த இரண்டு மாடல்களின் சிறப்பம்சங்களின் பட்டியல் ஏறக்குறைய ஒரே மாதிரியாக உள்ளது. இந்த இரண்டு அலகுகளுக்கும் இடையில், 10.25 இன்ச் டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே, தொடர்ச்சியான டர்ன் இன்டிகேட்டர்கள் , டச்-எனபிள்டு கொண்ட AC பேனல், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவை பொதுவான அம்சங்களாகும்.

மேலும் படிக்க: இந்த 10 படங்களில் டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்

பாதுகாப்பை பொறுத்தவரை, ஆறு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக, EBD உடன் கூடிய ABS , எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ரெயின் சென்சிங் வைப்பர்கள், ரியர்வியூ கேமரா மற்றும் பிளைண்ட் வியூ மானிட்டருடன் கூடிய 360 டிகிரி கேமரா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

வெவ்வேறு பவர்டிரெயின்கள்

ICE நெக்ஸான் இரண்டு இன்ஜின்ன் ஆப்ஷன்களை பெறுகிறது: 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்பட்ட 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் (115PS/260Nm) மற்றும் நான்கு டிரான்ஸ்மிஷன் விருப்பங்களைப் பெறும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் (120 PS / 170 Nm): 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு AMT, மற்றும் 7-ஸ்பீடு DCT

மேலும் படிக்க: Nexon EV Facelift காரின் ஸ்டீயரிங் வீலில் ஏர்பேக் எப்படி பொருத்தப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் இரண்டு பேட்டரி பேக்குகளை பெறுகிறது - 30kWh மற்றும் 40.5kWh - இது முறையே 129PS/215Nm மற்றும் 145PS/215Nm ஆகியவற்றை வெளிப்படுத்தும் மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. சிறிய பேட்டரி பேக் மேம்பட்ட ரேஞ்ச் -ஆன 325km வரை செல்லக் கூடியது மற்றும் பெரியது 465km ரேஞ்ச் -ஐ கொண்டுள்ளது. இந்த இரண்டு பேட்டரி பேக்குகளையும் DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி 56 நிமிடங்களில் 10 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.

விலை போட்டியாளர்கள்

ஃபேஸ்லிஃப்டட் நெக்ஸான் மற்றும் நெக்ஸான் EV ஆகிய இரண்டு மாடல்களையும் டாடா செப்டம்பர் 14 ஆம் தேதி அறிமுகப்படுத்தும், மேலும் அவற்றின் விலை ரூ .8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ரூ .15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். கியா சொனெட், ஹூண்டாய் வென்யூ, மாருதி பிரெஸ்ஸா மற்றும் மஹிந்திரா XUV300 போன்றவற்றுடன் ICE நெக்ஸான் தொடர்ந்து போட்டியிடும், மேலும் நெக்ஸான் EV மஹிந்திரா XUV400 உடனான போட்டியைத் தொடரும்.

மேலும் படிக்க: நெக்ஸான் AMT

a
வெளியிட்டவர்

ansh

  • 18 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது டாடா நிக்சன்

Read Full News

explore similar கார்கள்

டாடா நிக்சன்

Rs.8 - 15.80 லட்சம்* get சாலை விலை
டீசல்23.23 கேஎம்பிஎல்
பெட்ரோல்17.44 கேஎம்பிஎல்
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல்/ஆட்டோமெட்டிக்
ஜூன் சலுகைகள்ஐ காண்க

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.10.99 - 15.49 லட்சம்*
Rs.14.49 - 19.49 லட்சம்*
Rs.60.97 - 65.97 லட்சம்*
Rs.7.99 - 11.89 லட்சம்*
Rs.41 - 53 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை