பாருங்கள்: யோசனை முதல் தயாரிப்பு வரை - டாடா கார்வ் உருவாகும் விதம்
published on ஜூலை 31, 2024 05:58 pm by shreyash for டாடா கர்வ்
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
கார் வடிவமைப்பு செயல்முறை பல நிலைகளை உள்ளடக்கியது: இது யோசனை மற்றும் கருத்தியல் வடிவமைப்புடன் தொடங்குகிறது. விரிவான களிமண்ணாலான மாடல் செய்வதில் தொடங்கி இறுதியாக டிசைனை செம்மைப்படுத்துவதோடு முடிவடைகிறது.
ஒரு காரின் டிசைன் பயணம் அதன் கருத்தில் இருந்து உற்பத்தி நிலைக்கு எப்படி முன்னேறுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்த செயல்முறையானது ஆரம்ப யோசனை முதல் இறுதி வடிவமைப்பு வரை பல நிலைகளை உள்ளடக்கியது. சமீபத்தில் டாடா நிறுவனம் இங்கிலாந்தில் உள்ள அவர்களின் வடிவமைப்பு மையத்திற்கு எங்களை வரவேற்றபோது இந்த செயல்முறையை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அங்கே கர்வ்வின் வடிவமைப்பு எவ்வாறு தொடங்கி அதன் இறுதி உற்பத்தி வடிவமாக உருவாகிறது என்பதை நாங்கள் ஆராய்ந்தோம்.
இந்த செயல்முறை எப்படி தொடங்குகிறது?
-
வீடியோவில் காட்டிய படி செயல்முறை யோசனையயில் இருந்தே தொடங்குகிறது. இதில் காரின் வடிவமைப்பு மற்றும் டிசைன் பற்றி தீர்மானிப்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
-
அடுத்த கட்டத்தில் கையால் வரையப்பட்ட மற்றும் டிஜிட்டல் வடிவமைப்புக்கான வரைபடங்களை உருவாக்குவது அடங்கும். டிசைன் இறுதி செய்யப்படும் வரை பல டிசைன் வரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன.
டிசைன் மாடல்கள்
-
இறுதி செய்யப்பட்ட வரைபடங்கள் பின்னர் 2D மற்றும் 3D மாடல்களாக மாற்றப்பட்டு கார் எப்படி இருக்கும் என்பது பற்றிய மிகவும் யதார்த்தமான காட்சியை வழங்குகிறது.
-
பல்வேறு பெயிண்ட் ஷேட்களில் கார் எவ்வாறு தோன்றும் மற்றும் வெவ்வேறு மேற்பரப்புகள் கலர் எவ்வாறு ஒளியைப் பிரதிபலிக்கும் என்பதையும் இது விளக்குகிறது.
விர்ச்சுவல் ரியாலிட்டி
-
டிசைன் மாடல்கள் பின்னர் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு வடிவமைப்பாளர்களுக்கு காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் இரண்டையும் ஆராய்வதற்கான அதிவேக அனுபவத்தை அளிக்கின்றன.
-
இது காரின் எரகனாமிக்ஸ், சீட் அமைக்கப்படும் நிலை, ஸ்டீயரிங் வீல் இடம் மற்றும் ஒட்டுமொத்தத் தெரிவுநிலை போன்ற நுணுக்கமான தகவல்களை வழங்குகிறது.
களிமண் மாடல்கள்
-
இந்த அனைத்து நிலைகளுக்கும் பிறகு களிமண் மாடல்களை உருவாக்குவதன் மூலம் யோசனையானது வடிவம் பெறுகிறது. ஆரம்பத்தில் சிறிய அளவிலான களிமண் மாடல்கள் டிசைனின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக வடிவமைக்கப்படுகின்றன. இந்த மாடல்கள் ஒரு மர அமைப்பைச் சுற்றி களிமண்ணை வடிவமைத்து உருவாக்கப்படுகின்றன.
-
இந்த களிமண் மாடல்கள் முதன்மையாக இயந்திரங்கள் மற்றும் 3D மேப்பிங்கை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இது நேரத்தையும் முயற்சியையும் கணிசமாகக் குறைக்கிறது. இருப்பினும் இறுதி வடிவமைப்பு மற்றும் மேற்பரப்பின் விவரங்கள் கையால் நுணுக்கமாகப் வடிவமைக்கப்படுகின்றன.
-
பல கட்ட மறு வடிவமைப்பு மற்றும் மாற்றங்களுக்குப் பிறகு காரின் இறுதித் தோற்றத்தைப் பற்றிய துல்லியமான பிரதிநிதித்துவத்தை வழங்கும் முழு அளவிலான களிமண் மாடல்கள் உருவாக்கப்படுகின்றன.
-
இந்த மாடல்கள் பின்னர் பெயிண்ட் பூசப்பட்டு இறுதி டிசைன் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்
மேலும் பார்க்க: Tata Nexon EV லாங் ரேஞ்ச் மற்றும் Tata Punch EV லாங் ரேஞ்ச்: ரியர் வேர்ல்டு செயல்திறன் சோதனை
டாடா கர்வ் பற்றி மேலும் சில தகவல்கள்
டாடா கர்வ் இந்தியாவில் முதல் பட்ஜெட் சந்தை எஸ்யூவி கூபேக்களில் ஒன்றாக இது மாற உள்ளது. நேர்த்தியான கூபே டிசைனை கொண்டிருக்கும். கர்வ், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட நெக்ஸான் மற்றும் ஹாரியர்/சஃபாரி உள்ளிட்ட மற்ற டாடா மாடல்களிலிருந்தும் வடிவமைப்புக்கான விஷயங்களை பெறுகிறது. டாடா இதுவரை கர்வ்வின் இன்டீரியரை வெளியிடவில்லை என்றாலும் டாடா நெக்ஸானின் இன்டீரியரை போன்றே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12.3 இன்ச் டச்ஸ்க்ரீன், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பவர்டு டெயில்கேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கர்வ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பிற்காக டாடா கர்வ் ஆனது 6 ஏர்பேக்குகள், பிளைண்ட் வியூ மானிட்டரிங் உடன் கூடிய 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற வசதிகளைக் கொண்டிருக்கும்.
ஹூட்டின் கீழ் என்ன உள்ளது?
டாடா கர்வ் புதிய 1.2 லிட்டர் T-GDi டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் டைரக்ட் இன்ஜெக்ஷனுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது டாடா நெக்ஸானிலிருந்து பெறப்பட்ட 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுக்கான ஆப்ஷனையும் வழங்கும்:
இன்ஜின் |
1.2 - லிட்டர் T-GDi டர்போ-பெட்ரோல் |
1.5 - லிட்டர் டீசல் |
பவர் |
125 PS |
115 PS |
டார்க் |
225 Nm |
260 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீட் MT, 7-ஸ்பீட் DCT (எதிர்பார்க்கப்படுகிறது) |
6-ஸ்பீட் MT, DCT (எதிர்பார்க்கப்படுகிறது) |
DCT: டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்
கர்வ் ICE-இன்(இன்டர்னல் கம்பஸ்டன் என்ஜின்) பெட்ரோல் வேரியன்ட்கள் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) இரண்டையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில அறிக்கைகள் கர்வ் டீசல் வேரியன்ட் ஒரு DCT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுக்கான ஆப்ஷனை வழங்கலாம் என்றும் குறிப்பிடுகின்றன.
கர்வ் முழு எலக்ட்ரிக் வெர்ஷனாகவும் கிடைக்கும். கர்வ் EV-க்கான பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பற்றிய விவரங்களை டாடா இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் மற்றும் 500 கி.மீ-க்கு மேல் கிளைம் செய்யப்படும் ரேஞ்சை இது வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா கர்வ் ரூ. 10.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சிட்ரோன் பாசால்ட்டுடன் நேரடியாக போட்டியிடும் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஹோண்டா எலிவேட், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் ஸ்கோடா குஷாக் போன்ற போட்டியாளர்களுக்கு ஸ்டைலான மாற்றாக கர்வ் இருக்கும்.
மறுபுறம் கர்வ் EV, 20 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது MG ZS EV மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV மற்றும் மாருதி eVX ஆகியவற்றுடன் போட்டியிடும்.
டாடா கர்வ் பற்றிய கூடுதல் அப்டேட்களுக்கு கார்தேக்கோ -வின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful