• English
  • Login / Register

Citroen Basalt: ஒவ்வொரு வேரியன்ட்டிலும் என்ன கிடைக்கும் ?

சிட்ரோய்ன் பசால்ட் க்காக ஆகஸ்ட் 14, 2024 05:25 pm அன்று ansh ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 45 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த கார் மூன்று வேரியன்ட்களில் வருகிறது: யூ, பிளஸ் மற்றும் மேக்ஸ்

Citroen Basalt Variant-wise Features

இந்தியாவில் சிட்ரோன் பசால்ட் ரூ.7.99 லட்சம் (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி-கூபே யூ, பிளஸ் மற்றும் மேக்ஸ் என 3 வேரியன்ட்களில் கிடைக்கும். நீங்கள் புதிய சிட்ரோன் பசால்ட்டை வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா ? எந்த வேரியன்ட்டைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லையா ?.உங்களுக்கு இந்த கட்டுரை உதவலாம். இங்கே ஒவ்வொரு வேரியன்ட்டிலும் வழங்கப்படும் வசதிகளின் விரிவான விவரம் இங்கே உள்ளது. இது உங்களுக்கு ஏற்ற வேரியன்ட்டை தேர்ந்தெடுக்க உதவும்.

யூ வேரியன்ட்

Citroen Basalt Front Airbag

பாசால்ட்டின் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் வழங்கும் விஷயங்கள்.

வெளிப்புறம்

இன்ட்டீரியர்

இன்ஃபோடெயின்மென்ட்

கம்ஃபோர்ட் & வசதி

பாதுகாப்பு

  • ஹாலோஜன் ஹெட்லேம்ப்கள்

  • முன் ஃபெண்டர் பொருத்தப்பட்ட டேர்ன் இண்டிகேட்டர்ஸ்

  • கவர்கள் இல்லாத 16 இன்ச் ஸ்டீல் வீல்ஸ்

  • பிளாக் வெளிப்புற டோர் ஹேண்டில்ஸ்

  • பிளாக் ORVM -கள்

  • ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி

  • பிளாக் இன்சைடு டோர் ஹேண்டில்ஸ்

  • குரோம் ஏசி ஹேண்டில்ஸ்

  • நிலையான ஹெட்ரெஸ்ட்கள் (முன் மற்றும் பின்)

  • இல்லை

  • முன் பவர் ஜன்னல்கள்

  • முன் 12V சாக்கெட்

  • கையேடு ஏசி

  • 6 ஏர்பேக்ஸ்

  • EBD உடன் ABS

  • எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP)

  • பின்புற பார்க்கிங் சென்சார்கள்

  • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள்

  • பின்புற வெளிப்புற பயணிகளுக்கு 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள்

  • ஹில்-ஹோல்ட் அசிஸ்ட்

பாசால்ட்டின் 'யூ' வேரியன்ட் அடிப்படை விஷயங்களை கொண்டுள்ளது. இது கூடுதலாக கம்ஃபோர்ட் மற்றும் வசதிகளை பெறவில்லை. மேலும் ஒரு இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் அல்லது மியூசிக் சிஸ்டம் கூட கொடுக்கப்படவில்லை. இருப்பினும் இது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் கொண்ட அடிப்படை பாதுகாப்பு வசதிகளை பெறுகிறது.

மேலும் படிக்க: Citroen Basalt மற்றும் Tata Curvv: விவரங்கள் ஒப்பீடு

பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் 1.2-லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் (82 PS/ 115 Nm) 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பசால்ட் பிளஸ்

Citroen Basalt Infotainment Touchscreen

பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்டை விட பிளஸ் வேரியன்ட் இந்த கூடுதல் வசதிகளை வழங்குகிறது:

வெளிப்புறம்

இன்ட்டீரியர்

இன்ஃபோடெயின்மென்ட்

கம்ஃபோர்ட் & வசதி

பாதுகாப்பு

  • LED DRL -கள்

  • கவர்கள் கொண்ட 16 இன்ச் ஸ்டீல் வீல்ஸ்

  • பாடி கலர்டு டோர் ஹேண்டில்ஸ்

  • கிளாஸி பிளாக் ORVMகள்

  • ORVM-ஏற்றப்பட்ட டேர்ன் இண்டிகேட்டர்ஸ்

  • வீல் ஆர்ச்களில் கிளாடிங்குகள்

  • டூயல்-டோன் டாஷ்போர்டு

  • கிளாஸி பிளாக் ஏசி வென்ட்கள்

  • முன் மற்றும் பின்புற அட்ஜெஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள்

  • கப்ஹோல்டர்களுடன் கூடிய பின் இருக்கை சென்ட்ரல் ஹேண்டில் 

  • பார்சல் அலமாரி

  • முன் USB போர்ட்

  • டே/நைட் IRVM

  • 10 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

  • வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே

  • 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்

  • 7-இன்ச் TFT கிளஸ்டர்

  • ஹெயிட் அட்ஜெஸ்ட்டபிள் ஓட்டுநர் இருக்கை

  • ரிக்ளைனிங்-அட்ஜெஸ்ட்டபிள் ஸ்டீயரிங்

  • எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் ORVM -கள்

  • ஆட்டோ ஃபோல்டபிள் ORVM -கள்

  • நான்கு பவர் விண்டோஸ் 

  • சென்ட்ரல் லாக்கிங்

  • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)

இது பசால்ட் -ன் உண்மையான பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் மற்றும் இது பாடி கலர்டு டோர் ஹேண்டில்ஸ் மற்றும் பளபளப்பான-பிளாக் ORVM -களுடன் சிறந்த லைட்டிங் செட்டப்பை வழங்குவதன் மூலம் வெளிப்புறத்தில் அதிக ஸ்டைலை கொண்டு வருகிறது. கேபின் மற்றும் கம்ஃபோர்ட் வசதிகளில் சில சேர்த்தல்கள் இருந்தாலும், இந்த வேரியன்ட்டில் உள்ள மிகவும் பயனுள்ள விஷயம் இன்ஃபோடெயின்மென்ட் பேக்கேஜ் ஆகும். இது டாப்-ஸ்பெக் வேரியன்ட்டிற்கு சமமானதாகும். இந்த வேரியன்ட் 1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் பவர்டிரெய்னுடன் மட்டுமே வருகிறது.

பசால்ட் பிளஸ் டர்போ

Citroen Basalt LED Projector Headlamps

பிளஸ் டர்போ வேரியன்ட்டுடன் இந்த கூடுதல் வசதிகள் கிடைக்கும்.

வெளிப்புறம்

இன்ட்டீரியர்

இன்ஃபோடெயின்மென்ட்

கம்ஃபோர்ட் & வசதி

பாதுகாப்பு

  • LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள்

  • முன் ஃபாக் லைட்ஸ் 

  • முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்கள் 

  • பின்புற USB போர்ட்

  • முன் ஸ்லைடிங் சென்டர் ஆர்ம்ரெஸ்ட்

  • இல்லை

  • ஸ்டீயரிங்கில் கொடுக்கப்பட்ட கன்ட்ரோல்கள்

  • ஆட்டோமெட்டிக் காலநிலை கட்டுப்பாடு

  • பின்புற ஏசி வென்ட்கள்


  • பின்புற டிஃபோகர்

பிளஸ் டர்போ வேரியன்ட்களில் கூடுதல் வசதிகள் இல்லை என்றாலும் கூட இந்த வேரியன்ட்டின் மிகப்பெரிய நன்மை 1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் தேர்வு ஆகும். இது 110 PS மற்றும் 205 Nm வரை இருக்கும். இந்த இன்ஜின் அதிக சக்தி வாய்ந்தது மட்டுமின்றி 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடனும் பயன்படுத்த முடியும். ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் ஆனது பிளஸ் டர்போ வேரியன்ட்டில் கிடைக்கும்.

பசால்ட் மேக்ஸ் டர்போ

Citroen Basalt Alloy Wheels

பிளஸ் டர்போவை விட டாப்-ஸ்பெக் வேரியன்டடில் கிடைக்கும் வசதிகள்:

வெளிப்புறம்

இன்ட்டீரியர்

இன்ஃபோடெயின்மென்ட்

கம்ஃபோர்ட் & வசதி

பாதுகாப்பு

  • 16-இன்ச் அலாய் வீல்கள்

  • ஷார்க் ஃபின் ஆண்டெனா

  • குரோம் இன்செர்ட் பாடி சைடு மோல்டிங்

  • லெதரைட் மூடப்பட்ட ஸ்டீயரிங்

  • செமி லெதரெட் இருக்கை அப்ஹோல்ஸ்டரி

  • ட்வீட்டர்கள்

  • கார் கனெக்டட் டெக்னாலஜி 

  • பின்புறத்தில் இறக்கைகள் கொண்ட ஹெட்ரெஸ்ட்கள்

  • பின் இருக்கை ரிக்ளைனிங் குஷன் (AT மட்டும்)

  • பூட் லைட் 

  • ரியர் வியூ கேமரா

பாசால்ட்டின் டாப்-ஸ்பெக் வேரியன்ட் அலாய் வீல்களுடன் வெளிப்புற தோற்றத்தை கொண்டுள்ளது மற்றும் இது அதிக பிரீமியம் தோற்றமுடைய கேபினுடன் வருகிறது. இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் வசதிகளின் அடிப்படையில் பார்க்கப்போனால் நிறைய விஷயங்கள் இல்லை. ஆனால் இந்த வேரியன்ட்டில் ரியர்வியூ கேமராவுடன் ஒரு சிறந்த பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது. மேக்ஸ் டர்போ வேரியன்ட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வருகிறது. 

விலை மற்றும் போட்டியாளர்கள்

Citroen Basalt

சிட்ரோன் பாசால்ட் காரின் விலை ரூ.7.99 லட்சம் முதல் ரூ.13.57 லட்சம் வரை (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம்). பாசால்ட் காரானது டாடா கர்வ் -க்கு நேரடி போட்டியாக இருக்கும். அதே சமயம் காம்பாக்ட் எஸ்யூவி -களான ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகியவற்றுக்கு ஸ்டைலான மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க: சிட்ரோன் பாசால்ட் மிட்-ஸ்பெக் பிளஸ் வேரியன்ட் 10 படங்களில் விளக்கப்பட்டுள்ளது

குறிப்பு: சிட்ரோன் பசால்ட்டின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டின் விலை விவரம் கார் தயாரிப்பாளரின் இணையதளத்தின் வடிவமைப்பாளரிடன் இருந்து பெறப்பட்டதாகும். சிட்ரோன் நிறுவனம் இன்னும் பசால்ட் வேரியன்ட்களின் முழு விலை விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: சிட்ரோன் பசால்ட் ஆன்ரோடு விலை

was this article helpful ?

Write your Comment on Citroen பசால்ட்

1 கருத்தை
1
D
dk das sharma
Aug 31, 2024, 12:49:08 PM

Very few amenities for the price.Curvv atleast offers value for money and comes good on safety etc.

Read More...
    பதில்
    Write a Reply

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    • டாடா சீர்ரா
      டாடா சீர்ரா
      Rs.10.50 லட்சம்Estimated
      செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • நிசான் பாட்ரோல்
      நிசான் பாட்ரோல்
      Rs.2 சிஆர்Estimated
      அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • எம்ஜி majestor
      எம்ஜி majestor
      Rs.46 லட்சம்Estimated
      ஏப், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • டாடா harrier ev
      டாடா harrier ev
      Rs.30 லட்சம்Estimated
      மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
    • vinfast vf3
      vinfast vf3
      Rs.10 லட்சம்Estimated
      பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
    ×
    We need your சிட்டி to customize your experience