• English
  • Login / Register

மார்ச் 2023 இல் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய 4 புதிய கார்கள் இவை

modified on மார்ச் 01, 2023 07:07 pm by tarun for citroen ec3

  • 54 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய SUV-கிராஸ்ஓவர் உடன் நியூ ஜெனரேஷன் செடான் மற்றும் அதன் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட போட்டியாளராக இந்த மார்ச் மாதம் விற்பனைக்கு வரும்.

Upcoming Cars March 2023

2023 -ன் மூன்றாவது மாதத்தில் குறைவான அறிமுகங்களே இருந்தாலும் இவை மிக முக்கியமானதாகும். ஹூண்டாய் தனது ஆல்-நியூ ஜெனரேஷன் செடானைக் கொண்டுவருகிறது, அதே நேரத்தில் அதன் பிரதான போட்டியாளரான ஹோண்டாவும் ஒரு புதுப்பிப்புடன் வருகிறது. அது மட்டுமல்லாமல், மாருதியிலிருந்து ஒரு புதிய கிராஸ்ஓவர்-எஸ்யூவி மற்றும் ஒரு புதிய எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கையும் எதிர்பார்க்கலாம். 

மார்ச் மாதத்தில் நாம் எதிர்பார்க்கும் நான்கு கார்கள் இதோ: 

புதிய ஹூண்டாய் வெர்னா

New Hyundai Verna front design sketch

லாஞ்ச் தேதி - 21 மார்ச்

எதிர்பார்க்கப்படும் விலை - 10 லட்சம் ரூபாய் முதல்

ஹூண்டாய் ஆல்-நியூ வெர்னாவை மார்ச் மாதம் அறிமுகப்படுத்தும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. செடானுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டன. முன்னர் வெளியான வரைபடங்கள் மூலமாக இந்த மாடல் ஸ்போர்ட்டியாக இருக்கும் தெரியவருகிறது. புதிய வெர்னா கார் பெரியதாகவும் அதிக பிரீமியமாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அம்சங்களைப் பொறுத்தவரை, நாங்கள் ஒரு பெரிய டச்ஸ்க்ரீன் சிஸ்டம், ஒரு புதிய டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் ADAS ஆகியவற்றை எதிர்பார்க்கிறோம். டீசல் எஞ்சின் நிறுத்தப்பட்டாலும், அதன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அப்படியே இருக்கும். மேலும், புதிய வெர்னாவில் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் இருக்கிறது , இது 160PS பவர் வரை வழங்கும்.

 

ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஹோண்டா சிட்டி

லாஞ்ச் தேதி - 2 மார்ச்

எதிர்பார்க்கப்படும் விலை - 11 லட்சம் ரூபாய் முதல்

Honda City facelift

வெர்னாவின் போட்டியாளரும் மார்ச் மாத தொடக்கத்தில் சிறிய ஃபேஸ்லிஃப்ட்டுடன் புதுப்பிக்கப்படவுள்ளது. புதிய ஹோண்டா சிட்டியின் உள்ளேயும் வெளியேயும் சிறிய விஷுவல் மாற்றங்களைப் பார்க்கலாம், மேலும் காற்றோட்டமான முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் ADAS (அதன் ஹைப்ரிட் வேரியண்டிலிருந்து எடுக்கப்பட்டது) போன்ற புதிய அம்சங்களையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எங்கள் சமீபத்திய கண்டுபிடிப்புகளின்படி, சிட்டியில் ஃபேஸ்லிஃப்ட்டுடன் மிகவும் மலிவு விலையில் ‘SV’ வேரியண்ட்டைப் பெறக்கூடும். இதேபோல், அதன் ஹைப்ரிட் கவுண்டர்பார்ட்டும் கூட ஆக்ஸசிபிள் 'V'  வேரியண்ட்டுடன் எதிர்பார்க்கப்படுகிறது. செடான் அதன் 1.5-லிட்டர் பெட்ரோல் மற்றும் வலுவான-ஹைப்ரிட் பவர்டிரெய்ன்களுடன் தொடரும் ஆனால் BS6 ஃபேஸ் 2 கம்ப்ளையன்ஸ் உடன் இருக்கும்.

மாருதி ஃப்ரான்க்ஸ்

எதிர்பார்க்கப்படும் லாஞ்ச் தேதி - மார்ச் மத்தியில்

எதிர்பார்க்கப்படும் விலை - 8 லட்சம் ரூபாய் முதல்

Maruti Fronx front

 

மார்ச் மத்தியில் மாருதி நிறுவனம் ஃபிராங்க்ஸ் SUV-கிராஸ்ஓவரின் விலையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலேனோ மற்றும் கிராண்ட் விட்டாராவின் கலவையான ஸ்டைலிங்கில் ஃபிராங்க்ஸ் உள்ளது. கேபின் பலேனோவைப் போலவே தோற்றமளிப்பதுடன் வலுவான-ஹைப்ரிட் மாருதி SUV-லிருந்து எடுக்கப்பட்டுள்ள சில சிறப்பம்சங்களும் உள்ளன. இது பலேனோவில் இருக்கும் 1.2-லிட்டர் பெட்ரோல் எஞ்சினைப் பெற்றாலும், ஃபிராங்க்ஸ் மாருதியின் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சினை மிட்-ஹைப்ரிட்டாக மாற்றி மீண்டும் கொண்டு வருகிறது. அம்சங்களைப் பொறுத்தவரை, ஃபிராங்க்ஸ் ஒன்பது இன்ச் டச்ஸ்க்ரீன் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஹெட்-அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா மற்றும் ஆறு ஏர்பேக்குகள் வரை கிடைக்கும்.

மேலும் படிக்க: மாருதி ஃப்ரான்க்ஸ் எதிர்பார்க்கப்படும் விலைகள்:பலேனோவை விட இது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கும்?

சிட்ரோயன் eC3

எதிர்பார்க்கப்படும் லாஞ்ச் தேதி - மார்ச் மாத தொடக்கத்தில்

எதிர்பார்க்கப்படும் விலை - 11 லட்சம் ரூபாய் முதல்

Citroen eC3

C3 ஹேட்ச்பேக்கின் எலக்ட்ரிக் வர்ஷன் மார்ச் மாத தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எக்ஸாஸ்ட் பைப் இல்லாமல், அதன் பெட்ரோல் காரைப் போலவே அப்படியே இருக்கிறது. இதில் 29.2kWh பேட்டரி பேக் உள்ளது. இது 320 கி.மீ (ARAI -யால் சான்றளிக்கப்பட்டது ) தூரம் வரை ரேஞ்சை வழங்கும். eC3 ஆன் செய்ததும் 57PS மற்றும் 143Nm கொடுக்கும் என கூறப்படுகிறது. 10-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள் ஆகியவற்றுடன், அதன் பெட்ரோலுக்கு இணையான வசதிகளை இந்த காருடன் பெற்றுக் கொள்ள முடியும். 

 

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா

Toyota Innova Crysta

எதிர்பார்க்கப்படும் லாஞ்ச் தேதி - மார்ச் மத்தியில்

எதிர்பார்க்கப்படும் விலை - 20 லட்சம் ரூபாய் முதல்

இன்னோவா கிரிஸ்டா, பிப்ரவரியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அது நடக்கவில்லை. இப்போது, இந்த MPV-யின் விலை இந்த மாதம் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கிறோம். புதிய தலைமுறை இன்னோவா ஏற்கனவே விற்பனையில் இருக்கும் நிலையில் பழைய மாடல் ஒரே டீசல்-மேனுவல் தோற்றத்தில் தொடர்ந்து விற்பனையில் இருக்கும். இது ஆட்டோமேடிக் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், பவர்டு டிரைவர் சீட், டச்ஸ்கிரீன் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஏழு ஏர்பேக்குகள் போன்ற அம்சங்களுடன் பல டிரிம்களில் கிடைக்கும்.

இந்த கார்களைத்  தவிர, நியூ-ஜென் நெக்சஸ் RH  மற்றும் மாருதி பிரெஸ்ஸா CNG ஆகியவற்றின் விலையும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம். இந்த கார்கள் பிப்ரவரியில் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் லாஞ்ச் செய்யப்படவில்லை.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Citroen ec3

Read Full News

explore similar கார்கள்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • Kia Syros
    Kia Syros
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • லேக்சஸ் lbx
    லேக்சஸ் lbx
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • எம்ஜி 3
    எம்ஜி 3
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
×
We need your சிட்டி to customize your experience