மாருதி ஃப்ரான்க்ஸ் காரின் எதிர்பார்க்கப்படும் விலைகள்: பலேனோவை விட இது எவ்வளவு விலை கூடுதலாக இருக்கக்கூடும்?
published on பிப்ரவரி 27, 2023 12:52 pm by rohit for மாருதி fronx
- 75 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி ஏற்கனவே ஃப்ரான்க்ஸ் காரின் வேரியண்ட்டுகள் மற்றும் அதன் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் உட்பட கிராஸ்ஓவர் எஸ்யூவியின் அனைத்து தகவல்களையும் பகிர்ந்துள்ளது.
மாருதி-யின் பலேனோ காரை அடிப்படையாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ள கிராஸ்ஓவர் எஸ்யூவியான, ஃப்ரான்க்ஸ், விரைவில் சந்தையில் நுழைய உள்ளது.
டர்போ-பெட்ரோல் இடத்திற்கு மாருதி மீண்டும் திரும்புகிறது என்பதால் இது கூடுதல் கவனம் பெரும் ஒன்றாக மாறியிருக்கிறது. ஃப்ரான்க்ஸ்-ன் வேரியண்ட்டுகள், தொழில்நுட்ப விவரக்குறிப்புகள் மற்றும் அதில் உள்ள வசதிகள் உட்பட அனைத்து விவரங்களும் நமக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்காகக் காத்திருக்கும் வேளையில், நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களை வைத்து அதன் சாத்தியமான விலையைப் பற்றி ஆராயலாம்.
ஆனால் எதிர்பார்க்கப்படும் வேரியண்ட்-களின் விலைகளை ஆராய்ந்து பார்ப்பதற்கு முன், கிராஸ்ஓவரின் பவர்டிரெய்ன் விவரங்களைப் பற்றிப் பார்ப்போம்:
விவரக்குறிப்புகள் |
1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் எஞ்சின் |
ஆற்றல் |
90பிஎஸ் |
100பிஎஸ் |
முறுக்கு விசை |
113என்எம் |
148என்எம் |
பரிமாற்றங்கள் |
5-வேக எம்டீ/ 5-வேக எஎம்டீ |
5-வேக எம்டீ/ 6-வேக ஏடீ |
மாருதி டர்போ-பெட்ரோல் யூனிட்டை அதன் மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் பொருத்தியுள்ளது. சமீபத்தில் காணப்பட்ட சோதனை வாகனத்தை பார்க்கும்போது கார் தயாரிப்பாளர் ஃப்ரான்க்ஸி-ன் சிஎன்ஜி வெர்ஷனில் கவனம் செலுத்தக்கூடும் என்று தெரிய வருகிறது .
ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, க்ரூஸ் கன்ட்ரோல், ஒன்பது இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 360 டிகிரி கேமரா உள்ளிட்ட பலேனோ வில் உள்ள அனைத்து வசதிகளும் இதில் கிட்டத்தட்ட அப்படியே இருக்கின்றன. ஃப்ராங்க்ஸில் உள்ள ஒரே கூடுதல் அம்சம் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகும். இதன் பாதுகாப்பு வசதிகளை எடுத்துக் கொண்டால் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (இஎஸ்பீ), ஆறு ஏர்பேக்குகள், ஐசோஃபிக்ஸ் சைல்ட் சீட் ஆங்கர்கள் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க: சிடி பேச்சு: டர்போ-பெட்ரோல் என்ஜின்கள் மாருதி கார்களுக்கு புதிய காற்றைக் கொண்டு வர முடியுமா?
எதிர்பார்க்கப்படும் வேரியண்ட்-கள் வாரியான விலைகளைப் பாருங்கள்:
வவேரியண்ட் |
1.2-லிட்டர் பெட்ரோல் |
1.2 லிட்டர் பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
சிக்மா |
ரூ. 8 இலட்சம் |
– |
– |
– |
டெல்டா |
ரூ. 8.85 இலட்சம் |
ரூ. 9.40 இலட்சம் |
– |
– |
டெல்டா+ |
ரூ. 9.30 இலட்சம் |
ரூ. 9.75 இலட்சம் |
ரூ. 10.30 இலட்சம் |
– |
செட்டா |
– |
– |
ரூ. 11 இலட்சம் |
ரூ. 12.50 இலட்சம் |
ஆல்ஃபா |
– |
– |
ரூ. 11.85 இலட்சம் |
ரூ. 13.35 இலட்சம் |
நியூ டெல்டா+ வேரியண்ட்-டில் மட்டுமே இரண்டு எஞ்சின்கள் மற்றும் மூன்று பவர் டிரெயின் தேர்வு செய்து கொள்வதற்கான வசதி கொடுக்கப்பட்டுள்ளது. டர்போ-பெட்ரோல் எம்டீ வேரியண்ட்களின் விலை 1.2 லிட்டர் டிரிம்களை விட ரூ. 1.1 லட்சம் பிரீமியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே சமயம் அவற்றின் ஆட்டோமேட்டிக் கவுன்டர்பார்ட்ஸ் ரூ.1.5 லட்சம் பிரீமியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடையவை: டாடா நெக்ஸான் ஈவிக்கு போட்டியாக, ஆல்-எலக்ட்ரிக் மாருதி ஃப்ரான்க்ஸ் வேலையில் உள்ளது
ஃப்ராங்க்ஸ்-ன் எதிர்பார்க்கப்படும் விலைகளை அதன் நெருங்கிய போட்டியாளர்களுடன் ஒப்பிடுவோம்:
மாருதி ஃப்ரான்க்ஸ் |
மாருதி பிரெஸ்ஸா |
கியா சோனெட் |
ஹூண்டாய் வென்யு |
டாடா நெக்ஸான் |
ஹுண்டாய் ஐ20 |
மாருதி பலேனோ |
ரூ. 8 லட்சம் முதல் ரூ. 13.35 லட்சம் வரை |
ரூ.8.19 லட்சம் முதல் ரூ.14.04 லட்சம் வரை |
ரூ. 7.69 லட்சம் முதல் ரூ. 14.39 லட்சம் வரை |
ரூ. 7.68 லட்சம் முதல் ரூ. 13.11 லட்சம் வரை |
ரூ. 7.80 லட்சம் முதல் ரூ. 14.35 லட்சம் வரை |
ரூ. 7.19 லட்சம் முதல் ரூ. 11.83 லட்சம் வரை |
ரூ.6.56 லட்சம் முதல் ரூ.9.83 லட்சம் |
ஃப்ராங்க்ஸ்-க்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லை, ஆனால் இது துணை காம்பாக்ட் எஸ்யூவிக்கள் மற்றும் பிரீமியம் ஹேட்ச் பேக்குகளுக்கு மாற்றாக இருக்கும். கிராஸ்ஓவர் எஸ்யூவிக்-கான முன்பதிவு ஆர்டர்களை மாருதி ஏற்கனவே தொடங்கி விட்டது. மார்ச் மாதத்தில் ஃப்ராங்க்ஸ் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கிறோம்.
0 out of 0 found this helpful