2023 ஜூன் மாதத்தில் வரவிருக்கும் 3 கார்கள் இங்கே
published on மே 30, 2023 07:40 pm by tarun for மாருதி ஜிம்னி
- 34 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜூன் மாதம் சந்தையில் நுழைய இருக்கும் தார் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லைஃப்ஸ்டைல் எஸ்யூவி ஆகும்.
2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியை நெருங்கி வருவதால், மிகப்பெரிய பிராண்டுகளின் சில முக்கியமான வெளியீடுகள் மற்றும் அறிமுகங்களை பார்க்கப் போகிறோம். சமீபத்திய ஆண்டுகளில் மாருதியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாடல் வெளியீடு இறுதியாக ஜூன் மாதம் நடக்கிறது, மேலும் ஹூண்டாய் மற்றும் ஹோண்டாவின் இரண்டு புத்தம் புதிய எஸ்யூவி -களையும் பார்ப்போம். ஆடம்பரமான கார் வகையில் , மெர்சிடீஸ் பென்ஸ் இன் பிரபல பெயர்ப்பலகை நாட்டிற்கு திரும்பி வருகிறது.
ஜூன் மாதத்திற்கான மூன்று அறிமுகங்கள் இதோ:
மாருதி ஜிம்னி
இறுதியாக, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜிப்சியின் மாற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆட்டோ எக்ஸ்போ 2023 இல், மாருதி ஜிம்னியை இந்தியாவிற்கான ஐந்து கதவுகள் கொண்ட அவதாரத்தில் வெளிப்படுத்தியது. SUV 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் பெறுகிறது, இது 105PS மற்றும் 134Nm செயல்திறனை உருவாக்குகிறது, அதே நேரத்தில் அது 5- ஸ்பீடு மேனுவல் மற்றும் 4-ஸ்பீடு AT விருப்பங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஜிம்னி குறைந்த பயணதூர கியர்பாக்ஸுடன் 4X4 டிரைவ்டிரெயினைப் பெறும். அம்சங்களைப் பொறுத்தவரை, கார் வாங்குபவர்கள் வாஷர் உடன் கூடிய LED ஹெட்லேம்புகள், 9 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் , வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஆறு ஏர்பேக்குகள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமராவையும் பெறுவார்கள். மிகவும் திறன்வாய்ந்த மாருதியின் விலை சுமார் ரூ.10 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
இதற்கிடையில், நாங்கள் ஏற்கனவே ஜிம்னியை ஓட்டிப் பார்த்தோம், அதன் விரிவான விமர்சனம் இங்கே:
ஹோண்டா எலிவேட்
புத்தம் புதிய ஹோண்டா எலிவேட் ஐ ஜூன் 6 ஆம் தேதி நாம் பார்க்கப் போகிறோம் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, நாம் ஹோண்டா -வில் இருந்து ஒரு புத்தம் புதிய தயாரிப்பை பெறுகிறோம், இது காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் நுழையப் போகிறது. எலிவேட் பெட்ரோல் ஆப்ஷன் மட்டுமே வழங்குகிறது மற்றும் சிட்டி காரின் 1.5-லிட்டர் iVTEC யூனிட்டை கொண்டிருக்கிறது. செடானின் வலிமையான ஹைப்ரிட் தொழில்நுட்பம், அறிமுகத்திற்குப் பிறகு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கலாம் அம்சங்களைப் பொறுத்தவரை, எஸ்யூவி ஆனது மின்சார சன்ரூஃப், பெரிய டச் ஸ்கிரீன் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஆறு ஏர்பேக்குகள் மற்றும் ADAS ஆகியவற்றைப் பெறும்.
மெர்சிடீஸ் பென்ஸ் AMG SL55
12 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபல 'SL' பெயர்ப்பலகை இந்தியாவுக்குத் திரும்புகிறது. ஏழாவது தலைமுறை மெர்சிடீஸ் பென்ஸ் SL ஆனது அதன் AMG 55 4MATIC+ தோற்றத்தில் இந்தியாவில் அறிமுகமாகும், இது ஆல்-வீல் டிரைவ் மற்றும் ரியர்-வீல் ஸ்டீயரிங் ஆகியவற்றை ஸ்டாண்டர்டாக பயன்படுத்துகிறது. ஹூட்டின் கீழ், ஒரு பயங்கரமான 4-லிட்டர் ட்வின்-டர்போ V8 உள்ளது, இது வெறும் 3.9 வினாடிகளில் 100 கிமீ/மணி வேகத்தை ஜூம் செய்ய முடியும். விலை? விலை ரூ. 2 கோடியாக (எக்ஸ் ஷோ ரூம்) நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 out of 0 found this helpful