டாடா பன்ச்-க்கு போட்டியாக ஹூண்டாய் -இல் இருந்து மிக விரைவில் வெளிவரப்போகும் எஸ்யூவி !
published on ஏப்ரல் 06, 2023 01:27 pm by tarun for ஹூண்டாய் எக்ஸ்டர்
- 45 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய எஸ்யூவி -யின் விலை பன்ச் -ஐ போலவே ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரைஇருக்கலாம்.
-
ஸ்பை ஷாட்டுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, எஸ்யூவி சில முரட்டுத்தனமான ஸ்டைலிங்குடன் பாக்ஸ் போன்ற அமைப்பு மற்றும் மேற்பகுதியில் சில மாறுபாடுகளைக் கொண்டிருக்கும்.
-
எலக்ட்ரிக் சன்ரூஃப், பெரிய டச் ஸ்கிரீன் சிஸ்டம், ஆறு ஏர்பேகுகள் மற்றும் ESP ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.
-
கிரான்ட் i10 நியோஸ் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் எதிர்பார்க்கப்படுகிறது; 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினையும் பெறலாம்.
-
ஹூண்டாய் எஸ்யூவியின் முதல் டீஸர் "உடனடியாக" அறிமுகமாகும் என்று தெரிகிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய எஸ்யூவியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அது மைக்ரோ எஸ்யூவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ஏற்கனவே இந்தியாவிலும் தென் கொரியாவிலும் இது தென்பட்டது.
பாக்ஸ் போன்ற தோற்றத்தைப் பெற்றுள்ள எஸ்யூவி
ஸ்பை ஷாட்டுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, புதிய ஹூண்டாய் எஸ்யூவி பெட்டி போன்ற உடற்பகுதி மற்றும் மேல் பகுதியில் சில மாறுபாடுகளைக் கொண்டிருக்கும். தற்போதைய என்ட்ரி லெவல் ஹூண்டாய் எஸ்யூவியுடன் ஒப்பிடுகையில், இது விகிதாசார அளவில் சிறியதாக இருக்கும். முக்கியமாக, இது பாடி கிளாடிங், ரூஃப் ரெயில்கள் மற்றும் ஸ்டப்பி பானட் உள்ளிட்ட சில முரட்டுத்தனமான தோற்ற அமைப்பைக் கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனைகளில் காணப்படும் பல ஸ்டைலான காட்சி கூறுகளில் பெரிய கிரில், H-வடிவ LED DRLகள், ஃபங்கி அலாய் வீல்கள் மற்றும் H-வடிவ LED டெயில் விளக்குகள் ஆகியவையும் அடங்கும்.
ஒரு தனித்துவமான கேபின் தீமை பெற முடியும்
புதிய எஸ்யூவி கிராண்ட் i10 நியோஸ் மற்றும் வென்யூவின் ஆகியவற்றின் கலைவையான இன்டீரியர் தீமை பெறும் என்று எதிர்பார்க்கிறோம். கேபின் முழுவதும் பல பிரீமியம் டச்களுடன் டூயல்-டோன் தீமை நாம் காணலாம்.
மேலும் படிக்க: 2023 ஹீண்டாய் வெர்னா கார் வேரியன்ட்கள் விளக்கப்பட்டுள்ளன : எந்த காரை நீங்கள் வாங்க வேண்டும்?
அம்சங்கள் நிரம்பிய கேபின்
(கிரான்ட் i10 நியோஸ்-இன் படம் ஒரு எடுத்துக்காட்டாக பயன்படுத்தப்பட்டுள்ளது)
மற்ற ஹூண்டாய்களைப் போலவே, இந்த எஸ்யூவியும் பிரீமியம் அம்சத் தொகுப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பெரிய டச் ஸ்கிரீன் சிஸ்டம், ஒரு டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, எலக்ட்ரிக் சன்ரூஃப், குரூஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங்குகள் ஆகியவற்றைப் பெறலாம்.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ISOFIX குழந்தைகளுக்கான சீட் மவுன்ட்கள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.
கிராண்ட் i10 நியோஸ்-இன் பவர்டிரெய்னைப் பெறலாம்
புதிய ஹூண்டாய் எஸ்யூவி கிராண்ட் i10 நியோஸின் 83PS 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைப் பெறும் என எதிர்பார்க்கிறோம். ஹேட்ச்பேக்கைப் போலவே, வரவிருக்கும் மாடலும் ஐந்து வேக மேனுவல் மற்றும் AMT விருப்பங்களைப் பெறலாம். 1 -லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினையும் நாம் எதிர்பார்க்கலாம். 1.2-லிட்டர் இன்ஜினுடன் இயங்கும் சில வேரியன்ட்களில் CNG ஆப்ஷன் கூட வழங்கப்படலாம்.
மேலும் படிக்க: ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்சனுடன் கூடிய 10 மிக மலிவான கார்கள்
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
புதிய ஹீண்டாய் மைக்ரோ எஸ்யூவி யின் விலை சுமார் ரூ.6 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். டாடா பன்ச், சிட்ரோயன் C 3 மற்றும் மாருதி இக்னிஸ் போன்றவற்றை எதிர்கொள்ளும்.
படங்களின் ஆதாரம்
0 out of 0 found this helpful