மாருதியின் 40 ஆண்டுகால ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது டாடா நிறுவனம்
2024 ஆம் ஆண்டில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் வேகன் ஆர் இரண்டாவது இடத்தைப் பிடித்தது, எர்டிகா எம்பிவி ஹேட்ச்பேக் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில் முதல் முறையாக மாருதி -யின் மாடல்கள் எதுவும் இல்லை. கடந்த 2024 -ம் ஆண்டில் அந்த பட்டியலில் டாடா பன்ச் முதலிடம் பிடித்துள்ளது. மொத்தம் 2 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு டாடா பன்ச் சிறந்த விற்பனையாளராக உருவெடுத்துள்ளது. டாடா பன்ச் முதலிடத்தை பிடித்தாலும் கூட மற்ற இரண்டு இடங்களையும் மாருதி வேகன் ஆர் மற்றும் மாருதி எர்டிகா ஆகிய கார்கள் பிடித்துக் கொண்டன. விற்பனையான பன்ச் காரின் யூனிட்களின் மொத்த எண்ணிக்கையில் EV பதிப்புகள் மற்றும் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) ஆகிய இரண்டும் அடங்கும். கூடுதலான விவரங்கள் இங்கே.
மாதம் |
யூனிட்களின் எண்ணிக்கை |
ஜனவரி |
17,978 யூனிட்கள் |
பிப்ரவரி |
18,438 யூனிட்கள் |
மார்ச் |
17,547 யூனிட்கள் |
ஏப்ரல் |
19,158 யூனிட்கள் |
மே |
18,949 யூனிட்கள் |
ஜூன் |
18,238 யூனிட்கள் |
ஜூலை |
16,121 யூனிட்கள் |
ஆகஸ்ட் |
15,643 யூனிட்கள் |
செப்டம்பர் |
13,711 யூனிட்கள் |
அக்டோபர் |
15,740 யூனிட்கள் |
நவம்பர் |
15,435 யூனிட்கள் |
டிசம்பர் |
15,073 யூனிட்கள் |
மொத்தம் |
2,02,031 யூனிட்கள் |
2024 ஜூன் வரை டாடா பன்ச் ஆனது 17,000 யூனிட் விற்பனையை எட்டியிருந்தது. இதில் ஏப்ரல் மாதத்தில் 19,000 யூனிட் டெலிவரிகளை தாண்டியது. இருப்பினும் ஜூலை முதல் செப்டம்பர் வரை விற்பனை குறைந்துள்ளது. அக்டோபரில் EV பதிப்பின் விலை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கப்பட்டதால் பண்டிகை காலத்தில் விற்பனை 15,000 யூனிட்டுகளுக்கு மேல் உயர்ந்தது. ஆண்டின் கடைசி இரண்டு மாதங்களிலும் இதேபோன்ற விற்பனை எண்ணிக்கை தக்க வைக்கப்பட்டது.
மேலும் படிக்க: 2024 டிசம்பர் மாத விற்பனை கார் விற்பனை விவரங்கள்
டாடா பன்ச்: எதனால் பிரபலமானது ?
2021 -ம் ஆண்டில் டாடா பன்ச் சப்-4m எஸ்யூவி -களுக்கு ஒரு விலை குறைவான மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இது ஒரு புதிய மைக்ரோ-எஸ்யூவி என்ற பிரிவை உருவாக்கியது, ஹூண்டாய் எக்ஸ்டர் மட்டுமே பன்ச் -க்கு ஒரே போட்டியாளராக இருந்தது. இந்த புதிய பிரிவு எஸ்யூவி பாடி ஸ்டைல் காரை வெகுஜனங்களும் அணுகக்கூடியதாக மாற்றியது.
மற்ற டாடா கார்களை போலவே பன்ச் 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது. இது அதன் அறிமுகத்தின போது விலை விஷயத்தில் தனித்துவமானதாக இருந்தது. இது செமி-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் ஆட்டோ ஏசி போன்ற வசதிகள் உள்ளிட்ட நல்ல வசதிகளுடன் வந்தது. எக்ஸ்டரின் அறிமுகத்திற்குப் பிறகு டாடா சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பெரிய 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் போன்ற புதிய அம்சங்களை பன்ச் -ல் சேர்த்தது. இதன் மூலமாக பன்ச் நிறைவான வசதிகளை கொண்ட கார்களில் ஒன்றாக மாறியது.
இது 88 PS மற்றும் 115 Nm அவுட்புட்டை கொடுக்கும் 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் CNG பதிப்பு 2023 ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பூட் பகுதியை சிறப்பாக பயன்படுத்த உதவியது.
மேலும் 2024 ஆம் ஆண்டில் டாடா பன்ச் EV என பெயரிடப்பட்ட எலக்ட்ரிக் வெர்ஷனும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வசதிகள் நிறைந்த இந்த EV -யை மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் ஒன்றாக மாற்றியது. பன்ச் EV -யை ICE மாடலில் இருந்து வேறுபடுத்தி காட்டுவதற்கு டாடா சில முயற்சிகளை எடுத்தது. சற்றே மாற்றம்ம் செய்யப்பட்ட முன்பக்கம், நவீன லைட்டிங் எலமென்ட்கள் மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற பல உயர்மட்ட வசதிகளை இந்த காரில் கொடுத்தது. சிறப்பான பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. மற்ற டாடா காரை போலவே, பன்ச் EV ஆனது 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. டாடா பன்ச் EV ஆனது MIDC கிளைம்டு 365 கி.மீ ரேஞ்ச் உடன் இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
இந்த பிரிவில் இந்த விலையில் இந்த விஷயங்கள் அனைத்தும் பன்ச் காரை அனைத்து வசதிகளையும் கொண்ட சிறப்பான ஒரு காராக மாற்றுகின்றன. மேலும் இது இது பணத்திற்கான மதிப்பை கொடுக்கும் ஒரு பேக்கேஜ் ஆகவும் கருதப்படும். ICE மாடல் ரூ.6.13 லட்சம் முதல் ரூ.10.15 லட்சம் வரையிலும், டாடா பன்ச் EV -யின் விலை ரூ.9.99 லட்சம் முதல் ரூ.14.29 லட்சம் வரையிலும் உள்ளது.
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை (அறிமுகம்)
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.