Tata Curvv மற்றும் Tata Curvv EV: இரண்டு கார்களுக்கும் இடையே வடிவமைப்பு உள்ள வேறுபாடுகள்
published on பிப்ரவரி 20, 2024 04:49 pm by ansh for டாடா கர்வ் இவி
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
வடிவமைப்பில் இவி-என்பதை குறிப்பிட்டு காட்டும் வேறுபாட்டை தவிர, கர்வ்வ் EV கான்செப்ட் கார் பெரிதாகவும், முரட்டுத்தனமாகவும் தோற்றமளித்தது.
சமீபத்தில் 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் தயாரிப்புக்கு தயாராக உள்ள வடிவத்தில் டாடா கர்வ்வ் காட்சிக்கு வைக்கப்பட்டது. கடந்த 2022 -ம் ஆண்டில் டாடா -வுடம் இருந்து நாம் பார்த்தது கர்வ்வ் இவி கான்செப்ட் ஆகும். சமீபத்தில் நாம் பார்த்தது ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) வெர்ஷன் ஆகும். இது EV பதிப்போடு அதே ஒட்டுமொத்த வடிவத்தையும் அளவையும் பகிர்ந்து கொள்கிறது, ஆனால் வடிவமைப்பில் சில குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன, அதை நீங்கள் இங்கே பார்க்கலாம்.
முன்பக்கம்
இங்கே நீங்கள் கவனிக்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசம் கிரில் ஆகும். கர்வ்வ் -ன் ICE பதிப்பு கிடைமட்டமாக குரோம் எலமென்ட்களுடன் கருப்பு கிரில்லை பெறுகிறது – புதிய கார்களான ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகியவற்றில் உள்ளதைப் போன்றது – EV கான்செப்ட் காரின் பாடி கலரில் மூடிய கிரில்லை கொண்டிருந்தது.
மற்ற மேம்படுத்தப்பட்ட டாடா மாடல்களை போல கர்வ்வ் செங்குத்தாக உள்ள ஹெட்லைட்களுடன் இருப்பதை இங்கே காணலாம், ஆனால் கர்வ்வ் EV காரில் பல்வேறு லைட்டிங் எலமென்ட்களுடன் முக்கோண வடிவத்தில் உள்ளன.
மேலும் படிக்க: Tata Nexon குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட் முடிவுகள் ஒப்பீடு: முந்தையது மற்றும் புதியது
பானெட் முழுவதும் கொடுக்கப்பட்டுள்ள DRL -கள் இரண்டு பதிப்புகளிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும், ஆனால் பம்பர் வடிவமைப்பு வித்தியாசமானது. முன்பக்கத்தில் இரண்டுமே பிளாக் கலர் பம்பரை பெற்றாலும், கர்வ்வ் ICE அதன் கிரில்லில் உள்ளதைப் போலவே கிடைமட்ட குரோம் எலமென்ட்களை கொண்டுள்ளது.
பக்கவாட்டு தோற்றம்
கர்வ்வ் EV மற்றும் ICE இரண்டின் ஒட்டுமொத்த வடிவமைப்பும் தோற்றமும் ஒரே போல உள்ளது, ஆனால் இங்கேயும் சில வித்தியாசங்களை பார்க்கலாம். முதல் வித்தியாசம் EV உடன் ஒப்பிடும் போது கர்வ்வ் ICE -ல் சற்று தாழ்வாக கொடுக்கப்பட்டுள்ள பின்புற ஸ்பாய்லர் ஆகும். இரண்டாவது வேறுபாடு டோர் கிளாடிங் -ன் வடிவமைப்பு.
மேலும் படிக்க: Tata Curvv மற்றும் புதிய Nexon ஆகிய கார்களுக்கு இடையே உள்ள 3 பொதுவான விஷயங்கள்
இருப்பினும், அலாய் வீல்களின் வடிவமைப்பில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. கர்வ்வ் ICE ஆனது இதழ் வடிவ டூயல்-டோன் 18-இன்ச் அலாய் வீல்களை பெறுகிறது, அதே சமயம் கர்வ்வ் EV அதிக ஏரோடைனமிக் வடிவமைப்புடன் பெரிய டூயல்-டோன் அலாய்களை கொண்டுள்ளது.
பின்புறம்
இங்கே, அவற்றின் வடிவமைப்பிற்கு இடையிலான வித்தியாசத்தை இன்னும் தெளிவாக பார்க்கலாம். இரண்டும் ஒரே LED கனெக்டட் டெயில் லைட் செட்டப்பை பெறுகின்றன, ஆனால் கர்வ்வ் EV கான்செப்ட் பின்புற விண்ட்ஷீல்ட் மற்றும் பம்பரில் லைட்டிங் எலமென்ட்களை கொண்டுள்ளது.
முன்புறம், பிரேக் லைட்கள் மற்றும் பின்புற பம்பரும் வித்தியாசமானது, ஏனெனில் கர்வ்வ் ICE ஒரு ஸ்கிட் பிளேட்டை கொண்டுள்ளது, இது கர்வ்வ் EV கான்செப்ட்டில் இல்லை.
கேபின்
கர்வ்வ் மற்றும் கர்வ்வ் EV இரண்டின் உட்புறத்திலும், டாஷ்போர்டு வடிவமைப்பும் உபகரணங்களும் ஒரே மாதிரியானவை. இரண்டுமே இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் டிரைவரின் டிஸ்ப்ளே, டாடாவின் புதிய ஸ்டீயரிங் வீல், பேக்லிட் டாடா லோகோ மற்றும் டச் பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவற்றுக்கான பெரிய ஸ்கிரீன்களை பெறுகின்றன. டாடா தனது புதிய கேபின் வடிவமைப்பு தத்துவத்தை அதன் கார்களுக்கு எவ்வாறு செயல்படுத்தத் தயாராக உள்ளது என்பதை இது காட்டுகிறது.
இருப்பினும், கர்வ்வ் EV -யின் கேபின் ஒரு சில எலமென்ட்களுடன் மினிமலிஸ்ட் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அது கேபினுக்கு ஒரு தெளிவான தோற்றத்தை அளிக்கிறது. மறுபுறம், ICE கர்வ்வ் காரில், வேறுபட்ட தீம், 2-ஸ்போக்கிற்குப் பதிலாக 4-ஸ்போக் ஸ்டீயரிங், டாஷ்போர்டில் ஒரு பளபளப்பான கிளாஸ் ஸ்ட்ரிப் மற்றும் டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்பிளே வேறுபட்ட ஹவுசிங் உள்ளிட்ட சில மாற்றங்கள் இருக்கின்றன.
தற்போதைய நிலவரப்படி, சமீபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட கர்வ்வ் -ன் கேபினை டாடா அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. 2024 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட யூனிட் இன்னும் அதன் தயாரிப்புக்கு தயாரான நிலையில் இருப்பதால், உள்ளேயும் வெளியேயும் இன்னும் சில மாற்றங்களை டாடா கொடுக்க வாய்ப்புள்ளது.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு & விலை
டாடா முதலில் கர்வ்வ் EV -யை, ஜூலை மற்றும் செப்டம்பர் 2024 க்கு இடையில் அறிமுகப்படுத்தும். எதிர்பார்க்கப்படும் ஆரம்ப விலை ரூ.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் கர்வ்வ், EV -க்கு 3 முதல் 4 மாதங்களுக்குப் பிறகு வெளியிடப்படும், இதன் விலை ரூ. 10.50 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) எதிர்பார்க்கப்படுகிறது.
கர்வ்வ் EV - MG ZS EV மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் ICE கர்வ்வ் போட்டி நிறைந்த காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் நுழைகிறது, இது கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், மாருதி கிராண்ட் விட்டாரா, மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.