சோதனையின்போது Tata Curvv மீண்டும் ஒருமுறை படம்பிடிக்கப்பட்டுள்ளது
published on நவ 22, 2023 04:39 pm by shreyash for டாடா கர்வ் இவி
- 35 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா கர்வ்வ் கான்செப்ட்டில் காட்டப்பட்டுள்ள அதே ஆங்குலர் LED டெயில்லைட்கள் மற்றும் பெரிய டெயில்கேட் வடிவமைப்பை பெறுகிறது.
-
டாடா கர்வ் EV 2024 -ல் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இதன் எலக்ட்ரிக் வெர்ஷன், கர்வ்வ் EV, 500 கிமீ வரை உரிமை கோரப்பட்ட வரம்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டாடா கர்வ் இன் ICE வெர்ஷன் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமான புதிய 1.2 லிட்டர் T-GDi (டர்போ) பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்தும்.
-
இது 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் ஒளிரும் டாடா லோகோவுடன் கூடிய புதிய ஸ்டீயரிங் ஆகியவற்றைப் பெற வாய்ப்புள்ளது.
-
6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்படும்.
டாடா கர்வ்வ் EV 2024 -ல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது, அதற்கு முன்னதாக, அதன் மற்றொரு சோதனை கார் தற்போது படம் பிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஸ்பை புகைப்படங்கள் அதன் பின்புறம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய தெளிவான தோற்றத்தை அளிக்கின்றன.
கான்செப்ட் கார் போலவே தெரிகிறது
டாடா கர்வ் -ன் பின்புற வடிவமைப்பு 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட அதன் கான்செப்ட் பதிப்பைப் பிரதிபலிக்கிறது. கோண LED டெயில்லைட்களை மறைப்புகளின் கீழ் காணலாம், மேலும் அதன் கூபே ரூஃப்லைன் மற்றும் உயரமான டெயில்கேட் ஆகியவை மேலே உள்ள படத்தில் தெளிவாகத் தெரிகிறது. இந்தப் படங்களில் அவை தெரியவில்லை என்றாலும், ஃப்ளஷ் வகை கதவு கைப்பிடிகளை சேர்க்கப்பட்டிருந்ததை டாடா கர்வ் -ன் முந்தைய ஸ்பை புகைப்படங்களும் வெளிப்படுத்தியுள்ளன.
இதையும் பார்க்கவும்: சோதனையின்போது படம் பிடிக்கப்பட்டுள்ள Mahindra XUV.e8 (XUV700 எலக்ட்ரிக்)... புதிய விவரங்கள் தெரிய வருகின்றன
அடிப்படையில் முன்புற ஸ்பை ஷாட்கள், டாடா நெக்ஸான், டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி இன் ஃபேஸ்லிஃப்ட் பதிப்புகளில் காணப்படுவது போல் கர்வ் பிரிந்த மற்றும் செங்குத்தாக அடுக்கப்பட்ட ஹெட்லைட் செட்டப்பை பெறும். பக்கவாட்டில் பார்க்கும் போது, இது ஏரோடைனமிகல் பாணியிலான அலாய் வீல்களையும் பெறுகிறது.
உள்ளே இருந்து எப்படி இருக்கும்?
புரெடெக்ஷன்-ஸ்பெக் டாடா கர்வ் இன் உட்புறம் எப்படி இருக்கும் என்பதை நாங்கள் இன்னும் பார்க்கவில்லை, ஆனால் டாடா நெக்ஸான், டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகியவற்றின் சமீபத்திய புதுப்பிப்புகளின் அடிப்படையில், இது புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங், ஒளிரும் டாடா லோகோ ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா நிறுவனம் கர்வ் -ல் உள்ள அம்சங்களில் 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே, ஆட்டோமெட்டிக் ஏசி மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவை அடங்கும். பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது ஆறு ஏர்பேக்குகள், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமராவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அட்டானமஸ்-எமர்ஜென்ஸி பிரேக்கிங் (AEB) மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) உடன் கர்வ் -ஐ வழங்கக்கூடும்.
பவர்டிரெயின்கள்
கர்வ் EV ஆனது 500 கிமீ வரை ஓட்டும் வரம்பை வழங்குகிறது; இருப்பினும் பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாரின் விவரக்குறிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
மறுபுறம், டாடா கர்வ் -ன் ICE வெர்ஷன், 125 PS மற்றும் 225 Nm அவுட்புட்டை கொடுக்கும் புதிய 1.2-லிட்டர் T-GDi (டர்போ) பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் பற்றிய இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் இது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) ஆப்ஷனையும் பெறலாம்.
இதையும் பார்க்கவும்: கடந்த மாதத்தில் 5 பிரபலங்கள் ரூ.14 கோடிக்கு மேல் கார்களை வாங்கியுள்ளனர்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா கர்வ் EV ரூ.20 லட்சத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம், அதே சமயம் எஸ்யூபி-கூபேயின் ICE பதிப்பின் ஆரம்ப விலை ரூ.10.5 லட்சம் (அனைத்து விலையும் எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம். MG ZS EV மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் ஆகியவற்றுடன் கர்வ் EV போட்டியிடும். மற்றும் அதன் ICE பதிப்பு மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக்,ஃபோக்ஸ்வேகன் டைகுன், எம்ஜி ஆஸ்டர், ஹோண்டா எலிவேட், மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.
0 out of 0 found this helpful