சமீபத்திய டாடா கர்வ்வ் ஸ்பை புகைப்படங்கள் அது கூபே வடிவமைப்பில் இருப்பதை காட்டுகின்றன

published on அக்டோபர் 24, 2023 07:12 pm by rohit for டாடா curvv

  • 47 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இது ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின்) மாடல் மற்றும் இவி என இரண்டிலும் வழங்கப்படும், மேலும் இரண்டும் 2024 -ல் வெளியிடப்படும்.

Tata Curvv spied

  • 2023 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா கர்வ்வி கார் கான்செப்ட் வடிவத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
  • புதிய நெக்ஸான் போன்ற ஸ்பிளிட் ஹெட்லைட்களுடன் LED லைட்டிங் செட்டப்பை சமீபத்திய பார்வைகள் வெளிப்படுத்துகின்றன.
  • உட்புறம், இது டூயல் டிஸ்பிளேஸ், பேக்லிட் ‘டாடா’ லோகோவுடன் கூடிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் டச் பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவற்றை கொண்டிருக்கும்.

  • வாகனத்தில் உள்ள மற்ற அம்சங்களில் வென்டிலேட்டட் இருக்கைகள், 6 ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும்.

  • இது புதிய 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும்; நெக்ஸானின் 7-வேக இரட்டை கிளட்ச் கியர்பாக்ஸை பெறக் கூடும்.

  • டாடா கர்வ்வ் விலை ரூ.10.5 லட்சத்தில் தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).

இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் முறையாக கேமராவில் சிக்கிய பிறகு, டாடா கர்வ் எஸ்யூவி அதன் உற்பத்தி முழுமையடைவதற்கு தயாராக இருப்பதால் மீண்டும் சோதனையின் போது கேமராவில் சிக்கியது. இருப்பினும், சமீபத்திய சோதனை வாகனங்களின் உருவம் முழுமையாக மறைக்கப்படவில்லை மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா – வுக்கான போட்டி காரின் பல புதிய வடிவமைப்பு விவரங்களைக் காட்டியது.

காணப்பட்ட புதிய விவரங்கள் 

இந்த சோதனை கார் புதிய டாடா காரின் கூபே போன்ற ரூஃப்லைன் முதன்முறையாக சாலையில் செல்லும் வடிவத்தில் வெளிப்பட்டது, இது பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் போன்ற சொகுசு மார்க் வாகனங்களின் எஸ்யூவி-கூபேகளில் உள்ள வடிவமைப்பைப் போன்று காணப்படுகிறது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நெக்ஸான்,  ஹாரியர் மற்றும் சஃபாரி போன்ற ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட டாடா மாடல்களில் ஹெட்லைட்கள் செங்குத்தாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் போன்ற பிளவு-LED ஹெட்லைட் அமைப்பையும் இது காட்டியது.

முன்பக்கத்தில், இது ஆட்டோ எக்ஸ்போ 2023 இல் காட்டப்பட்ட கர்வ்வ் கான்செப்ட்டை விட வித்தியாசமான அலாய் வீல் அமைப்பைக் கொண்டிருந்தது. அதன் பின்பகுதி அதிகம் தெரியவில்லை என்றாலும், ஸ்பை ஷாட்கள் இந்த வடிவமைப்பு பகுதி நேர்த்தியான கர்வ்வ் கான்செப்ட்டை போலவே, கோண  LED டெயில்லைட்கள் மற்றும் பருமனான தடித்த டெயில்கேட்களுடன் இருக்கும் என்று கணிக்கிறது 

உட்புறம் என்ன வசதிகள் இருக்கும்?

Tata Curvv concept cabin

சமீபத்திய புகைப்படங்கள் டாடாவின் எஸ்யூவி-கூபேயின் உட்புறத்தில் எந்த விவரத்தையும் வழங்கவில்லை என்றாலும், இது புதிய நெக்ஸான் போலவே இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதில் 2 பெரிய டிஸ்ப்ளேக்கள், பேக்லிட் ‘டாடா’ லோகோவுடன் கூடிய நவீன 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் புதிய டச் பேஸ்டு கிளைமேட் கன்ட்ரோல் பேனல் ஆகியவை இருக்கும்.

அதன் அம்சங்களைப் பொறுத்தவரை, டாடா கர்வ்வ் ஆனது 10.25 -இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே (நெக்ஸான் மற்றும் நெக்ஸான் இவியிலிருந்து பெற்றது), வென்டிலேட்டட் இருக்கைகள், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் பாதுகாப்பு தொகுப்பில் 6 ஏர்பேக்குகள், ISOFIX சைல்டு சீட் மவுன்ட்கள், முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கி இருக்கும். இது அட்டாமஸ்-எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட் போன்ற சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வழங்கக்கூடும்.

இதையும் படியுங்கள்: டாடா ஹாரியர் இவிஅல்லது ஹாரியர் பெட்ரோல் - எது முதலில் வெளியிடப்படும்?

பவர்டிரெய்ன் விவரங்கள்

டாடா அதன் புதிய டர்போசார்ஜ் செய்யப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் (125 பிஎஸ்/225 நியூட்டன் மீட்டர்) கர்வ் -ஐ வழங்கும். அதன் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் அவற்றில் ஒன்று நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் அதே 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனாக (DCT) இருக்கலாம். மற்ற இன்ஜின்கள் என்னவெல்லாம் வழங்கப்படலாம் என்பது தெரியவில்லை.

Tata Curvv EV concept

இது டாடாவின் ஜெனரல் 2 பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்ட மின்சார பதிப்பையும் கொண்டிருக்கும், இது 500 கிமீ வரை ரேஞ்ச் -ஐ கொண்டிருக்கும். மின்சார பவர்டிரெய்ன் பற்றிய விவரங்கள் இன்னும் குறைவாகவே கிடைக்கின்றன. இந்த இவி கார் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) மாதிரி காருக்கு முன்னதாகவே வரவிருக்கிறது.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டி

Tata Curvv rear spied

டாடா கர்வ் -ன் விலை ரூ.10.5 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கலாம் தொடங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். மாருதி கிராண்ட் விட்டாரா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், ஹூண்டாய் கிரெட்டா, ஹோண்டா எலிவேட், டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைரைடர், சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற காம்பாக்ட் எஸ்யூவி -களுக்கு இது ஒரு எஸ்யூவி-கூபே மாற்று வாகனமாக இருக்கும். இந்த கர்வ்வ் 2024 -ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட ஆதாரம்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது டாடா curvv

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience