சோதனையின்போது படம் பிடிக்கப்பட்டுள்ள Mahindra XUV.e8 (XUV700 எலக்ட்ரிக்)... புதிய விவரங்கள் தெரிய வருகின்றன
published on நவ 20, 2023 09:22 pm by rohit for மஹிந்திரா xev இ8
- 36 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஆகஸ்ட் 2022 -ல் காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் பதிப்பின் இருந்த அதே நீளமான LED DRL ஸ்ட்ரிப் மற்றும் செங்குத்தான LED ஹெட்லைட்களை இந்த சோதனை காரில் பார்க்க முடிந்தது.
-
XUV.e8 காரானது 2024 -ம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இது மஹிந்திராவின் INGLO கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது மற்றும் திட்டமிடப்பட்ட புதிய வரம்பு EV -களில் முதன்மையானது.
-
சமீபத்திய ஸ்பை ஷாட்கள் புதிய சக்கரங்கள் இருப்பதை காட்டுகின்றன, ஆனால் பின்புறத்தில் பெரும்பாலும் மாற்றங்கள் இல்லை.
-
புதிய 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் வேறு கியர் ஷிஃப்டருடன் கேபின் காணப்பட்டது.
-
60 kWh மற்றும் 80 kWh பேட்டரி ஆப்ஷன்களை பெற, 450 கிமீ வரை உரிமை கோரப்பட்ட வரம்பைக் கொண்டுள்ளது.
-
35 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) விலை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா XUV700 ஆல்-எலக்ட்ரிக் காரை (மஹிந்திரா XUV.e8) பற்றிய முதல் பார்வை நமக்கு கிடைத்தது. ஆகஸ்ட் 2022 -ல், கான்செப்ட் வடிவத்தில் இருந்தாலும். ஒரு வருடத்திற்கும் மேலாக தயாரிப்பை நோக்கி வேகமாக முன்னேறியது, மின்சார எஸ்யூவியின் சோதனைக் கார்கள் எங்கள் தெருக்களில் தென்பட தொடங்கியுள்ளன. அத்தகைய மாதிரி கார் ஒன்று சமீபத்தில் மீண்டும் படம் பிடிக்கப்பட்டுள்ளது, இது தயாரிப்புக்கு நெருக்கமான பதிப்பாகத் தோன்றுகிறது. XUV.e8 புதுப்பிக்கப்பட்ட XUV700 -ஐ முன்னோட்டத்தை காட்டும் என நாங்கள் நம்புகிறோம், EV அறிமுகப்படுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே முதல் தோற்றம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவனிக்கப்பட்ட விவரங்கள்
முன்புறத்தில், ஆல்-எலக்ட்ரிக் XUV700 அதன் கான்செப்ட்டில் கவனிக்கப்பட்ட அதே புதிய வடிவிலான முன்பக்கத்துடன் காணப்பட்டது. பானட்டின் அகலத்தில் கொடுக்கப்பட்டுள்ள LED DRL ஸ்டிரிப் உள்ளது, மேலும் இது புதுப்பிக்கப்பட்ட செங்குத்தாக கொடுக்கப்பட்ட ஸ்பிளிட்-LED ஹெட்லைட்களையும் கொண்டுள்ளது. சோதனைக் காரானது வேறுபட்ட அலாய் வீல்களுடன் காணப்பட்டாலும், இறுதித் தயாரிப்பு மாதிரியில் அவை மாற்றியமைக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.
எவ்வாறாயினும், பின்புறத்தில் உள்ள விஷயங்கள் நிலையான XUV700 -ஐ விட ஏறக்குறைய மாறாமல் உள்ளன, ஒரே சாத்தியமான வேறுபாடு புதிய வடிவிலான பம்பர் ஆகும்.
கேபினில் உள்ள வசதிகள் ?
2-ஸ்போக் ஸ்டீயரிங் வீலை கொடுக்கப்பட்டதை கேபினுக்குள் காணப்பட்ட மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றாக பார்க்கலாம், இது புதிய டாடா எஸ்யூவி -களில் வழங்கப்படும் வடிவமைப்பு ஆகும். ஹாரியர் மற்றும் சஃபாரி. மற்றொரு அப்டேட், ஒரு புதிய டிரைவ் செலக்டர் சேர்க்கப்பட்டுள்ளது, இது கான்செப்ட்டில் காணப்பட்டதைப் போன்றே இருக்கிறது. எலெக்ட்ரிக் XUV700 கான்செப்ட்டில் காட்டப்பட்டுள்ளபடி 3-ஸ்கிரீன் செட்டப் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது, இந்த சோதனை காரில் இது மறைக்கப்பட்டிருக்கலாம்.
பேட்டரி பேக், எலக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் ரேஞ்ச்
மஹிந்திரா தனது புதிய INGLO மாடுலர் பிளாட்ஃபார்மில் XUV.e8 -யை உருவாக்கும், இது 60 kWh மற்றும் 80 kWh பேட்டரி திறன் மற்றும் 175 kW வரை ஃபாஸ்ட் சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. பெரிய பேட்டரி 450 கிமீ வரை WLTP-சான்றளிக்கப்பட்ட வரம்பை கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இயங்குதளமானது ரியர்-வீல் டிரைவ் (RWD) மற்றும் ஆல்-வீல் டிரைவ் (AWD) இரண்டிலும் கொடுக்கப்படலாம், அதே நேரத்தில் மின்சார பவர்டிரெய்ன்கள் RWD மாடல்களுக்கு 285 PS வரை மற்றும் AWD மாடல்களில் 394 PS வரை திறன் கொண்டதாக இருக்கும்.
மேலும் படிக்க: இந்த 7 ஸ்மார்ட்போன் ஜாம்பவான்கள் EV -களை தயாரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்: ஆப்பிள், சோனி, சியோமி மற்றும் பல
எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை
மஹிந்திரா XUV.e8 2024 ஆம் ஆண்டின் இறுதியில் ரூ. 35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வரும் என நம்புகிறோம். அதன் ஒரே நேரடி போட்டியாளர்BYD அட்டோ 3 ஆகும். ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் மற்றும் MG ZS EV ஆகிய கார்களுக்கு ஒரு பிரீமியம் மாற்றாக இருக்கும்
மேலும் படிக்க: XUV700 ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful