ஸ்கோடாவின் புதிய சப்-காம்பாக்ட் காருக்கு ‘கைலாக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது
published on ஆகஸ்ட் 21, 2024 03:44 pm by ansh for ஸ்கோடா kylaq
- 47 Views
- ஒரு கருத்தை எழுதுக
கைலாக் என்ற பெயர் "கிரிஸ்டல்" என்ற அர்த்தத்தை கொடுக்கும் சமஸ்கிருத வார்த்தையில் இருந்து பெறப்பட்டது.
வரவிருக்கும் ஸ்கோடா சப்காம்பாக்ட் எஸ்யூவி -க்கு ஸ்கோடா கைலாக் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா நிறுவனத்தின் இந்த சப்காம்பாக்ட் எஸ்யூவி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வர உள்ளது. டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO போன்ற கார்களைக் கொண்ட சப்காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் கைலாக் களமிறங்கவுள்ளது. கைலாக்கின் எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன் மற்றும் வசதிகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர், பெயர் எதைக் குறிக்கிறது என்பதைப் பார்ப்போம்.
கைலாக் என்ற பெயருக்கான பொருள்
"கைலாக்" என்ற பெயர் "கிரிஸ்டல்" என்பதற்கான சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்த சப்காம்பாக்ட் காருக்கு பெயரிடுவதற்காக ஸ்கோடா நிறுவனம் "நேம் யுவர் ஸ்கோடா" என்ற போட்டியை நடத்தியது. வரவிருக்கும் சப்காம்பாக்ட் எஸ்யூவி -க்கான பெயர்களைச் சமர்ப்பிக்கும்படி பொதுமக்களை ஸ்கோடா கேட்டுக் கொண்டது. பெயரானது "K" -வில் தொடங்கி "Q" -ல் முடிவடைய வேண்டும். மேலும் இரண்டு உச்சரிப்பாக இருக்கக்கூடாது. இந்த போட்டியில் 24,000 க்கும் மேற்பட்ட தனிப்பட்ட பெயர்களுடன் 2 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் பெயர்கள் கிடைத்தன. அவற்றில் "கைலாக்" என்ற பெயர் அதிக வாக்குகளைப் பெற்றது.
பவர்டிரெய்ன்
கைலாக் ஸ்கோடாவின் 1-லிட்டர் TSI டர்போ-பெட்ரோல் இன்ஜின் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் குஷாக் ஆகியவற்றின் கீழ் மற்றும் மிட்-ஸ்பெக் வேரியன்ட்களுக்கு சக்தி அளிக்கிறது. இந்த இன்ஜின் 115 PS மற்றும் 178 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. மேலும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இது கிடைக்கலாம்..
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
ஸ்கோடா இந்த காரில் 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன் இருக்கைகள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றை கொடுக்கலாம்.
மேலும் படிக்க: 2024 நிஸான் எக்ஸ்-டிரெயிலை விட ஸ்கோடா கோடியாக் வழக்கும் 5 வசதிகள்
பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை கொடுக்கப்படலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஸ்கோடா கைலாக்கின் விலைகள் ரூ. 8.5 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மற்ற சப் காம்பாக்ட் எஸ்யூவிகளான டாடா நெக்ஸான், கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV 3XO, மாருதி பிரெஸ்ஸா, ரெனால்ட் கைகர், மற்றும் நிஸான் மேக்னைட் போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும். மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் போன்ற சப்-4மீ கிராஸ்ஓவர்களுக்கு எதிராகவும் போட்டியிடும்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.