சோதனை செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ள Skoda Sub-4m எஸ்யூவி, 2025 ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
published on ஏப்ரல் 05, 2024 07:44 pm by rohit for ஸ்கோடா kylaq
- 66 Views
- ஒரு கருத்தை எழுதுக
வெளிப்புறம் முழுவதுமாக மறைக்கப்பட்ட சோதனைக் காரின் வீடியோ ஒன்றின் மூலமாக வடிவமைப்பு பற்றிய சில முக்கிய விவரங்களை பார்க்க முடிந்தது
-
குஷாக்கின் MQB-A0-IN பிளாட்ஃபார்மை புதிய சப்-4m எஸ்யூவி ஸ்கோடா அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.
-
வீடியோவில் இடம்பெற்றிருந்த கார் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தது, உட்புறத்தையும் பார்க்க முடிந்தது; குஷாக் காரில் உள்ளதை போன்ற டச் ஸ்கிரீனை இதில் பார்க்க முடிந்தது.
-
சன்ரூஃப், 360 டிகிரி கேமரா மற்றும் 6 ஏர்பேக்குகள் இதில் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
குஷாக்கின் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் யூனிட் பிரிவின் வரி வரம்புக்கு ஏற்றவாறு கிடைக்கும்.
-
ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவியின் விலை ரூ.8.50 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
ஸ்கோடா இந்தியாவில் அடுத்த ஆண்டு சப்-4m எஸ்யூவி பிரிவில் நுழைவதற்கான அதன் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. இதன் வெளியீடு 2025 -ன் தொடக்கத்தில் இருக்கலாம். ஸ்கோடா ஏற்கனவே இந்தியாவில் சாலைகளில் எஸ்யூவியை சோதனை செய்ய தொடங்கியுள்ளது. இப்போது எஸ்யூவி -யின் சோதனைக் கார்களில் ஒன்றைக் காட்டும் புதிய ஸ்பை வீடியோ ஆன்லைனில் வெளிவந்துள்ளது. அதன் எக்ஸ்ட்டீரியர் மற்றும் இன்ட்டீரியரை காட்டுகின்றது.
ஸ்பை காட்சிகளில் தெரிந்த விவரங்கள்
ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவி முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தாலும் வெளிப்புறத்தில் உள்ள சில முக்கிய வடிவமைப்பு விவரங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. LED DRL -களுடன் ஸ்பிளிட்-ஹெட்லைட் செட்டப் இதில் இருக்கும். மற்றபடி ஒரு நேர்த்தியான பட்டர்ஃபிளை கிரில் மற்றும் பம்பரின் கீழ் பாதியில் ஹனிகோம்ப் வடிவத்தைக் கொண்ட பெரிய ஏர் டேம் ஆகியவற்றையும் பார்க்க முடிகின்றது.
சோதனை காரின் ஸ்டீல் வீல்கள் கவர்களுடன் பொருத்தப்பட்டிருந்தது மற்றும் அது ரேப்பரவுண்ட் LED டெயில்லைட்களை கொண்டிருந்தது. பக்கவாட்டில் இது ஸ்கோடா குஷாக் -ன் ஒரு சிறிய பதிப்பு போல் தெரிகிறது. ஆனால் பின்புறத்தில் இருந்து பார்க்கும் போதுதான் இது ஸ்கோடா காம்பாக்ட் எஸ்யூவி போல இருக்கின்றது. இது புதிய MQB-A0-IN கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டது.
கேபின் அப்டேட்கள்
முழுவதுமாக மூடப்பட்டிருந்தாலும் கூட வீடியோவில் ஸ்கோடா எஸ்யூவி -யின் கேபினையும் பார்க்க முடிகின்றது. டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டை நாம் பார்க்க முடிகின்றது(வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உடன் வரலாம்).
ஸ்கோடா டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே, க்ரூஸ் கண்ட்ரோல், சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் காற்றோட்டமான முன் இருக்கைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பாதுகாப்பைப் பொறுத்தவரை ஸ்கோடா எஸ்யூவி-4m எஸ்யூவி ஆனது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360-டிகிரி கேமரா மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றுடன் வரலாம்.
மேலும் படிக்க: மீண்டும் சந்தைக்கு திரும்பிய Skoda Superb கார், விலை ரூ.54 லட்சமாக நிர்ணயம்
ஒரே ஒரு பவர்டிரெய்ன் ஆஃபர்
குஷாக்கிலிருந்து சிறிய 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (115 PS/178 Nm) சப்-4m எஸ்யூவியை ஸ்கோடா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுக்கான ஆப்ஷன் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவி மார்ச் 2025க்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.8.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும். இது மாருதி பிரெஸ்ஸா, கியா சோனெட், டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, நிஸான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மட்டுமில்லாமல் மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் சப்-4மீ கிராஸ் ஓவர் ஆகியவற்றுடனும் போட்டியிடும் .