Skoda Kylaq மற்றும் போட்டியாளர்கள்: பவர்டிரெய்ன் ஒப்பீடு
பெரும்பாலான சப்காம்பாக்ட் எஸ்யூவி -கள் இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை கொடுக்கின்றன. ஆனால் கைலாக் -ல் ஒரே ஒரு ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும்: அது குஷாக்கிலிருந்து பெறப்பட்ட 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆகும்.
ஸ்கோடா கைலாக் நவம்பர் 6 ஆம் தேதி உலகளவில் அறிமுகமாக உள்ளது. அதற்கு முன்னதாக ஸ்கோடா நிறுவனம் அதன் பவர்டிரெய்ன் விவரங்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. கைலாக் சப்காம்பாக்ட் எஸ்யூவிகளான டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, சோனெட், மஹிந்திரா XUV 3XO, நிஸான் மேக்னைட், மற்றும் ரெனால்ட் கைகர் கார்களுடன் நேரடியாக போட்டியிடும். கைலாக்கின் இன்ஜின் விவரங்களை அதன் போட்டியாளர்களுடன் இங்கே ஒப்பிட்டுள்ளோம்.
கவனிக்கவும்: கைலாக் காரில் பெட்ரோல் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என்பதால் மற்ற மாடல்களின் பெட்ரோல் வேரியன்ட்களை மட்டுமே நாங்கள் இந்த ஒப்பீட்டுக்காக எடுத்துள்ளோம்.
மாடல் |
இன்ஜின் |
பவர் |
டார்க் |
டிரான்ஸ்மிஷன் |
ஸ்கோடா கைலாக் |
1 லிட்டர் டர்போ பெட்ரோல் |
115 PS |
178 Nm |
6MT / 6AT |
டாடா நெக்ஸான் |
1.2 லிட்டர் டர்போ-பெட்ரோல் பெட்ரோல் |
120 PS |
170 Nm |
5MT / 6MT / 6AMT / 7DCT |
மாருதி பிரெஸ்ஸா |
1.5 லிட்டர் N/A பெட்ரோல் |
103 PS |
137 Nm |
5MT / 6AT |
ஹூண்டாய் வென்யூ |
1.2 லிட்டர் N/A பெட்ரோல் |
83 PS |
114 Nm |
5MT |
1 லிட்டர் டர்போ பெட்ரோல் |
120 PS |
172 Nm |
6MT/7DCT |
|
சோனெட் |
1.2-லிட்டர் N/A பெட்ரோல் |
83 PS |
114 Nm |
5MT |
1 லிட்டர் டர்போ பெட்ரோல் |
120 PS |
172 Nm |
6iMT/7DCT |
|
மஹிந்திரா XUV 3XO |
1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் |
111 PS |
200 Nm |
6MT / 6AT |
1.2 லிட்டர் TGDi டர்போ பெட்ரோல் |
131 PS |
230 Nm |
||
நிஸான் மேக்னைட் |
1-லிட்டர் N/A பெட்ரோல் |
72 PS |
96 Nm |
5MT/5AMT |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
100 PS |
160 Nm (MT), 152 Nm (CVT) |
5MT / CVT |
|
ரெனால்ட் கைகர் |
1-லிட்டர் N/A பெட்ரோல் |
72 PS |
96 Nm |
5MT/5AMT |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
100 PS |
160 Nm (MT), 152 Nm (CVT) |
5MT / CVT |
N/A - நேச்சுரலி ஆஸ்பிரேட்டட், DCT - டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன், AT - டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், T-GDi - டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ-பெட்ரோல்
ஸ்கோடா கைலாக் ஒற்றை இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கும். அதே நேரத்தில் அதன் போட்டி கார்களில் நெக்ஸான் மற்றும் பிரெஸ்ஸாவை தவிர - இரண்டு பெட்ரோல் இன்ஜின்களை கொடுக்கிறார்கள். கைலாக்கின் 1-லிட்டர் இன்ஜினை நேரடியாக வென்யூ மற்றும் சோனெட்டின் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்களுடன் ஒப்பிடலாம். ஸ்கோடா எஸ்யூவி அதன் கொரிய சகாக்களை விட 5 PS குறைவான அவுட்புட்டையே கொடுக்கிறது. மறுபுறம் XUV 3XO இரண்டு டர்போ-பெட்ரோல் இன்ஜின்களை வழங்குகிறது. அதன் 131 PS T-GDi (டேரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ-பெட்ரோல்) இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சப் காம்பாக்ட் எஸ்யூவி களில் மிகவும் சக்திவாய்ந்த இன்ஜின் ஆகும்.
டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் என்று வரும்போது நெக்ஸான் நான்கு கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை தேர்வு செய்ய கொடுக்கிறது: 5-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AMT மற்றும் 7-ஸ்பீடு DCT. கைலாக், ப்ரெஸ்ஸா மற்றும் XUV 3XO ஆகியவை ஆப்ஷனலான 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் உடன் வருகின்றன. மறுபுறம் நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய இரண்டு சப்காம்பாக்ட் எஸ்யூவி -கள் மட்டுமே அவற்றின் டர்போ-பெட்ரோல் இன்ஜின்களுடன் CVT ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை வழங்குகின்றன.
மேலும் பார்க்க: Skoda Kylaq பேஸ் வேரியன்ட்டின் முதல் ஸ்பை ஷாட் வெளியாகியுள்ளது
கைலாக்கில் எதிர்பார்க்கப்படும் வசதிகள்
ஸ்கோடா குஷாக் டச் ஸ்கிரீன் படம் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது
இது 10.1-இன்ச் டச் ஸ்கிரீன், 8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பின்புற வென்ட்களுடன் கூடிய ஆட்டோ ஏசி மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் ஆகியவற்றுடன் வரும். கைலாக் வென்டிலேட்டட் செயல்பாடுடன் 6-வே அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகளையும் பெறும். இதன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) இருக்கும், மேலும் இது எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் 360 டிகிரி கேமராவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை
ஸ்கோடா குஷாக் காருக்கு கீழே கைலாக் விற்பனைக்கு கொண்டு வரப்படும். மற்றும் இதன் விலை ரூ 8.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.