Skoda Kylaq பேஸ் வேரியன்ட்டின் முதல் ஸ்பை ஷாட் வெளியாகியுள்ளது
published on அக்டோபர் 24, 2024 07:08 pm by shreyash for ஸ்கோடா kylaq
- 75 Views
- ஒரு கருத்தை எழுதுக
கைலாக்கின் பேஸ் வேரியன்ட்டில் 16 இன்ச் ஸ்டீல் வீல் இருந்தது. மேலும் பின்புற வைப்பர், பின்புற டிஃபோகர் மற்றும் டச் ஸ்கிரீன் யூனிட் ஆகியவற்றை இந்த வேரியன்ட்டில் பார்க்க முடியவில்லை.
-
கைலாக் இந்தியாவில் உள்ள ஸ்கோடா -வின் என்ட்ரி-லெவல் காராக இருக்கும்.
-
லேட்டஸ்ட் ஸ்பை படங்கள் பேஸ்-ஸ்பெக் கைலாக்கின் கேபினுக்குள் நமக்கு தெளிவான தோற்றத்தை கொடுக்கின்றன.
-
கேபின் விவரங்களில் 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், அனலாக் கிளஸ்டர் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் லீவர் ஆகியவை உள்ளன.
-
படம் பிடிக்கப்பட்ட சோதனை காரில் 16 இன்ச் ஸ்டீல் வீல்களை பார்க்க முடிந்தது. மற்றும் பின்புற வைப்பர் அல்லது டிஃபோகர் ஆகியவை இல்லை.
-
6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட 115 PS 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்தும்.
-
விலை ரூ.8.50 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 6 ஆம் தேதி ஸ்கோடா கைலாக் உலகளவில் அறிமுகமாகவுள்ளது. ஸ்கோடாவின் 'இந்தியா 2.5' இன் கீழ் இந்தியாவுக்கான ஒரு புதிய தயாரிப்பாக இது இருக்கும். கைலாக் ஒரு என்ட்ரி-லெவல் கார் ஆகும். மேலும் இந்தியாவில் ஸ்கோடா -வின் மிகவும் விலை குறைவான எஸ்யூவி ஆகவும் இருக்கும். இந்த முறை கைலாக்கின் ஒரு பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்டில் சோதனை செய்யப்பட்ட போது படம் பிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்பை ஷாட்டில் என்ன பார்க்க முடிகிறது ?
லேட்டஸ்ட் ஸ்பை படங்கள் கைலாக்கின் பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் கேபினின் முதல் பார்வையை வழங்குகின்றன. இது 2-ஸ்போக் ஸ்டீயரிங், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஸ்கோடா குஷாக்கில் காணப்படும் கியர் லீவர் போன்றவற்றைக் கொண்டுள்ளது. பேஸ்-ஸ்பெக் வேரியன்ட்டாக இருப்பதால் எந்த டச் ஸ்கிரீன் யூனிட்டும் இதில் இல்லை.
இது ஒரு ஸ்பிளிட் ஹெட்லைட் செட்டப் உள்ளது, ஹெட்லைட்கள் DRL களுக்கு கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ளன. சோதனைக் கார் கார் பிளாக் கவர்களால் மூடப்பட்டிருந்தது மேலும் 16-இன்ச் வீல் இருந்தது. மேலும் இது ஒரு பேஸ்-ஸ்பெக் வேரியன்ட் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடும் வகையில் பின்புற வைப்பர் மற்றும் பின்புற டிஃபோகர் ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை.
ஹையர் வேரியன்ட்களில் எதிர்பார்க்கப்படும் வசதிகள்
ஸ்கோடா குஷாக் டச் ஸ்கிரீன் படம் எடுத்துக்காட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது
ஸ்கோடாவின் சப்காம்பாக்ட் எஸ்யூவி ஆனது 10.1-இன்ச் டச் ஸ்கிரீன், 8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, பின்புற வென்ட்கள் கொண்ட ஆட்டோ ஏசி மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் ஆகியவற்றைப் பெறும். இது 6-வே அட்ஜெஸ்ட்டபிள் முன் இருக்கைகளை வென்டிலேஷன் வசதியை கொண்டிருக்கும். பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) இருக்கும். அதே சமயம் இது எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் 360 டிகிரி கேமராவை பெறும்.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன்
இது 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படும். இது 115 PS மற்றும் 178 Nm அவுட்புட்டை கொடுக்கக்கூடியது. இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டருடன் இணைக்கப்படும்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஸ்கோடா கைலாக் காரின் விலை ரூ.8.50 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்). இது டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV 3XO மட்டுமில்லாமல் சப்-4மீ கிராஸ்ஓவர்களான மாருதி ஃபிரான்க்ஸ் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.