Skoda Kylaq ஆஃப்லைன் முன்பதிவுகள் தொடக்கம்
published on நவ 25, 2024 06:59 pm by rohit for ஸ்கோடா kylaq
- 48 Views
- ஒரு கருத்தை எழுதுக
சப்-4m எஸ்யூவி பிரிவில் ஸ்கோடாவின் முதல் தயாரிப்பாக கைலாக் வரவுள்ளது. ஸ்கோடா இந்தியாவின் கார் வரிசையில் என்ட்ரி-லெவல் கார் ஆக இருக்கும்.
-
ஸ்கோடா அதன் இந்திய எஸ்யூவி வரிசையில் கைலாக்கை குஷாக்கிற்கு கீழே ஸ்லாட் செய்ய உள்ளது.
-
கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர் பிளஸ் மற்றும் பிரெஸ்டீஜ் என நான்கு டிரிம்களில் வழங்கப்படும்:
-
வடிவமைப்பில் ஆல் LED லைட்ஸ் மற்றும் 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் ஆகியற்றை பார்க்க முடிகிறது.
-
பிளாக் மற்றும் கிரே கலர் கேபின் தீம் மற்றும் செமி லெதரெட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றுடன் வரும்.
-
10.1 இன்ச் டச் ஸ்கிரீன், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் 6 ஏர்பேக்குகள் உடன் வரும்.
-
ஒரே ஒரு 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்படலாம். இது 6-ஸ்பீடு MT மற்றும் 6-ஸ்பீடு AT ஆப்ஷன்களுடன் வரலாம்.
-
விலை ரூ. 7.89 லட்சத்திலிருந்து தொடங்கும் (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கடுமையான போட்டி நிறைந்த சப்-4m எஸ்யூவி பிரிவில் என்ட்ரி லெவல் காராக ஸ்கோடா கைலாக் களமிறங்கவுள்ளது. இது ஏற்கனவே உலகளவில் அறிமுகமாகியுள்ளது. இதன் ஆரம்ப விலையை ஸ்கோடா ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வ முன்பதிவுகள் டிசம்பர் 2 -ஆம் தேதி தொடங்கும். இப்போது வெளியீட்டுக்கு முன்னதாகவே சில ஸ்கோடா டீலர்கள் முன்பதிவுகளை ஏற்றுக்கொள்கின்றனர். ஸ்கோடா கைலாக்கின் விரைவான பார்வை இங்கே:
வடிவமைப்பு விவரங்கள்
இரண்டும் எவ்வளவு ஒரே மாதிரியாக இருப்பதால் முதல் பார்வையில் ஸ்கோடா -வின் கைலாக் காரை குஷாக் என்று நீங்கள் தவறாக நினைக்கலாம். எஸ்யூவி -கள் ஸ்கோடாவின் சப்-4எம் எஸ்யூவியின் வெளிப்புற ஹைலைட்ஸ், LED DRL -களுடன் ஸ்பிளிட்-எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் பட்டாம்பூச்சி வடிவ கிரில் ஆகியவற்றை பார்க்க முடிகிறது. இது 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் 'ஸ்கோடா' மோனிக்கரை கொண்ட பிளாக் நிற ஸ்ட்ரிப் மூலம் கனெக்ட் செய்யப்பட்ட ரேப்பரவுண்ட் எல்இடி டெயில் லைட்களுடன் வருகிறது.
கேபின் மற்றும் ஹைலைட்ஸ்
கைலாக் பிளாக் மற்றும் கிரே கலர் கேபின் தீம், 2-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் செமி-லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றுடன் வருகிறது. 10.1-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் 8-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகியவை காரில் இருக்கும். ஸ்கோடா ஒரு சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் 6-வே பவர்டு முன் இருக்கைகளையும் இந்த காரில் வழங்கியுள்ளது.
இதன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ரிவர்சிங் கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவை கொடுக்கப்படும்.
தொடர்புடையது: ஸ்கோடா கைலாக் மற்றும் மஹிந்திரா XUV 3XO: விவரங்கள் ஒப்பீடு
ஒரே ஒரு பெட்ரோல் இன்ஜின் மட்டும் கொடுக்கப்படலாம்
குஷாக் மற்றும் ஸ்லாவியாவில் உள்ள அதே 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (115 PS/178 Nm) ஸ்கோடா வரும். இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
விலை எவ்வளவு இருக்கும் ?
ஸ்கோடா கைலாக் காரின் விலை ரூ. 7.89 லட்சத்தில் (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) இருந்து தொடங்கலாம். முழு விலை பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சோனெட், மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV 3XO, மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: கைலாக் ஆன்ரோடு விலை