புதிய Skoda Kylaq கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
published on நவ 06, 2024 04:58 pm by rohit for ஸ்கோடா kylaq
- 103 Views
- ஒரு கருத்தை எழுதுக
கைலாக் -காருக்கான முன்பதிவுகள் டிசம்பர் 2, 2024 அன்று திறக்கப்படும். அதே நேரத்தில் வரவிருக்கும் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் கார் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து ஜனவரி 27, 2025 முதல் டெலிவரி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்கோடாவின் இந்திய போர்ட்ஃபோலியோவில் கைலாக் ஆனது புதிய என்ட்ரி லெவல் எஸ்யூவி -யாக இருக்கும்.
-
கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர் பிளஸ் மற்றும் பிரெஸ்டீஜ் என 4 வேரியன்ட்களில் கிடைக்கும்
-
வடிவமைப்புக்காக குஷாக் -கில் இருந்து நிறைய விஷயங்களை இது பெற்றுள்ளது. ஸ்பிளிட்-எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் ரேப்பரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள் ஆகியவை காரில் இருக்கும்.
-
பிளாக் மற்றும் கிரே தீம் மற்றும் சில்வர் மற்றும் குரோம் ஆக்ஸென்ட்களுடன் இன்ட்டீயர் இருக்கும்.
-
10.1-இன்ச் டச் ஸ்கிரீன், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் சன்ரூஃப் ஆகியவை அடங்கும்.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் டிராக்ஷன் கன்ட்ரோல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
-
ஒரே ஒரு 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் 6-ஸ்பீடு MT மற்றும் AT ஆப்ஷன்களுடன் இது கிடைக்கிறது.
இந்தியாவில் புதிய ஸ்கோடா கைலாக் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.7.89 லட்சத்தில் (அறிமுக எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) இருந்து தொடங்குகிறது. இந்த எஸ்யூவிக்கான முன்பதிவு வரும் டிசம்பர் 2 -ம் தேதியன்று அன்று திறக்கப்படும். பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025 நிகழ்வில் இது காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து ஜனவரி 27 -ம் தேதி முதல் வாடிக்கையாளர் டெலிவரிகள் தொடங்கும். கிளாசிக், சிக்னேச்சர், சிக்னேச்சர் பிளஸ், மற்றும் பிரஸ்டீஜ் என 4 வேரியன்ட்களில் ஸ்கோடா கைலாக்கை கொடுக்கிறது.
குஷாக் -கின் குழந்தை போன்ற தோற்றம்
குஷாக்கை போலவே கைலாக் காரிலும் ஸ்பிளிட்-எல்இடி ஹெட்லைட் வடிவமைப்பு உள்ளது. எல்இடி டிஆர்எல்கள் போனட் லைனுக்குக் கீழே அமைந்துள்ளன. மற்றும் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் பம்பருக்கு மேலே உள்ளன. இது மற்ற ஸ்கோடா கார்களில் உள்ளதை போலவே பிரபலமான பட்டாம்பூச்சி வடிவ கிரில் மற்றும் சென்ட்ரல் ஏர் டேம் -க்கான தேன்கூடு வடிவத்துடன் கூடிய பெரிய பம்பர் கொடுக்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டு தோற்றம் தெளிவானதாக உள்ளது. மேலும் இந்த கோணத்தில் இருந்து காரின் சிறிய அளவை தெரிந்து கொள்ள முடிகிறது. ரூஃப் ரெயில்ஸ், 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் ORVM-மவுண்டட் டர்ன் இண்டிகேட்டர்கள் ஆகியவற்றை பக்கவாட்டில் பார்க்க முடிகிறது
பின்புறத்தில் இன்வெர்டட் L-வடிவ இன்டர்னல் லைட் எலமென்ட்களுடன் ரேப்பரவுண்ட் LED டெயில் லைட்கள் உள்ளன. டெயில் லைட்ஸ் ‘ஸ்கோடா’ என்ற எழுத்துகளுடன் ஸ்லீக்கரான பிளாக்டு ஸ்ட்ரிப்பால் இணைக்கப்பட்டுள்ளன. டெயில்கேட்டின் கீழ் இடது பகுதியில் உள்ள ‘கைலாக்’ பேட்ஜ் மற்றும் பெரிய ஸ்கிட் பிளேட்டுடன் கூடிய பம்பரும் உள்ளது.
இதன் அளவுகள் பின்வருமாறு:
அளவுகள் |
ஸ்கோடா கைலாக் |
நீளம் |
3,995 மி.மீ |
அகலம் |
1,783 மி.மீ |
உயரம் |
1,619 மி.மீ |
வீல்பேஸ் |
2,566 மி.மீ |
கிரவுண்ட் கிளியரன்ஸ் |
189 மி.மீ |
பூட் ஸ்பேஸ் |
446 லிட்டர் (பார்சல் டிரே இல்லாமல் பயன்பாட்டில் உள்ள பின் இருக்கைகளுடன்) |
மேலும் படிக்க: ஃபோக்ஸ்வேகன் புதிய எஸ்யூவி -வுக்கு டெரா என்று பெயரிட்டுள்ளது: இந்தியாவுக்கு வருமா ?
ஸ்கோடா கைலாக் கேபின்
இது கேபினைச் சுற்றிலும் சில்வர் மற்றும் குரோம் ஆக்ஸென்ட்களுடன் பிளாக் மற்றும் கிரே கேபின் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா 2-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் செமி-லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியும் உள்ளது. இது எண்கோண வடிவிலான சைடு ஏசி வென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெரிய டச் ஸ்கிரீனுக்கு கீழே சென்ட்ரல் வென்ட்கள் அமைந்துள்ளன. சென்ட்ரல் ஏசி வென்ட்களுக்கு கீழே குஷாக்கிலிருந்து நேராக லிஃப்ட் ஆகும் கிளைமேட் கன்ட்ரோல்களுகான பேனலை பார்க்க முடிகிறது.
காரில் உள்ள வசதிகள் என்ன ?
ஸ்கோடா 10.1 இன்ச் டச் ஸ்கிரீன், 8 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகள் உள்ளன. கைலாக் -ல் சிங்கிள்-பேன் சன்ரூஃப் மற்றும் வென்டிலேஷன் உடன் 6-வே பவர்டு முன் சீட்களுடன் வருகிறது.
பாதுகாப்புக்காக இது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் மல்டி கொலிஷன் பிரேக்கிங் அவாய்டன்ஸ் ஆகியற்றை கொண்டுள்ளது.
ஸ்கோடா கைலாக் பவர்டிரெய்ன்
கைலாக் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (115 PS/178 Nm) உடன் வருகிறது. இது குஷாக் மற்றும் ஸ்லாவியா போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க: குளோபல் மார்கெட்டுக்கான Suzuki e Vitara கார் அறிமுகம்
ஸ்கோடா கைலாக் விலை மற்றும் போட்டியாளர்கள்
ஸ்கோடா நிறுவனம் கைலாக்கின் முழு விலைப்பட்டியலை இது வரை வெளியிடவில்லை. ஆனால் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படும் போது விலை விவரங்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறோம். கைலாக் ஆனது மஹிந்திரா XUV 3XO, ரெனால்ட் கைகர், டாடா நெக்ஸான் மற்றும் மாருதி பிரெஸ்ஸா போன்ற கார்களுடன் போட்டியிடும். மேலும் டொயோட்டா டெய்சர் மற்றும் மாருதி ஃபிரான்க்ஸ் போன்ற சப்-4 மீ கிராஸ்ஓவர்களுக்கு போட்டியாகவும் இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
0 out of 0 found this helpful