குளோபல் மார்கெட்டுக்கான Suzuki e Vitara கார் அறிமுகம்
published on நவ 05, 2024 04:47 pm by shreyash for மாருதி இ vitara
- 41 Views
- ஒரு கருத்தை எழுதுக
சுஸூகி இ விட்டாரா -வில் 49 kWh மற்றும் 61 kWh என்ற இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 550 கி.மீ வரையிலான ரேஞ்சை இது கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாருதியின் முதல் ஆல் எலக்ட்ரிக் காராக சுஸூகி இ விட்டாரா உள்ளது.
-
வெளிப்புறத்தில் லைட்டிங் எலமென்ட்கள் மற்றும் பிளாக் கலர் சக்கரங்களுடன் மிரட்டலான வடிவமைப்பை பார்க்க முடிகிறது.
-
ஃபுளோட்டிங் இன்டெகிரேட்டட் ஸ்கிரீன் செட்டப் உடன் டூயல்-டோன் டாஷ்போர்டு கொடுக்கப்பட்டுள்ளது.
-
2-வீல் டிரைவ் (2WD) மற்றும் AWD பதிப்பு என இரண்டு ஆப்ஷன் -களிலும் கிடைக்கிறது.
-
2025 -ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
-
விலை ரூ.22 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இ விட்டாரா என அழைக்கப்படும் மாருதி eVX கான்செப்ட் -ன் தயாரிப்பு-ஸ்பெக் பதிப்பு காரை இத்தாலி நாட்டின் மிலன் நகரத்தில் சுஸூகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச மார்கெட்டில் இது சுஸூகி இ விட்டாரா என அழைக்கப்படும். இந்த ஆல் எலக்ட்ரிக் எஸ்யூவி 2025 -ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட உள்ளது. இந்த EV பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களும் இங்கே உள்ளன. இது எங்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள மாருதி சுஸூகியின் முதல் EV ஆகும்.
வடிவமைப்பு மற்றும் அளவுகள்
சுஸூகி இ விட்டாரா வடிவமைப்பை பார்க்கையில் அடிப்படையில் eVX கான்செப்ட் போலவே உள்ளது. இது ஸ்லீக்கரான எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் ஒய்-வடிவ எல்இடி டிஆர்எல் -களும் உள்ளன. பெரிய பம்பரில் ஃபாக் லைட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் பார்க்கும் போது தடிமனான பாடி கிளாடிங் மற்றும் 19-இன்ச் பிளாக்-அவுட் அலாய் வீல்கள் (AWD பதிப்பிற்கு மட்டுமே) ஆகியவை காரணமாக இ விட்டாரா முரட்டுத்தனமாக தோற்றமளிக்கிறது. பின்புற டோர் ஹேண்டில்கல் சி-பில்லரில் கொடுக்கப்பட்டுள்ளன.
பின்புறத்தை பொறுத்தவரையில் இ விட்டாரா ஆனது அதன் கான்செப்ட் பதிப்பில் பார்த்ததைப் போலவே, 3-பீஸ் லைட்டிங் எலமென்ட்களுடன் கனெக்டட் LED டெயில் லைட்களை கொண்டுள்ளது. இ விட்டாரா 4 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 180 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளது.
நீளம் |
4,275 மி.மீ |
அகலம் |
1,800 மி.மீ |
உயரம் |
1,635 மி.மீ |
வீல்பேஸ் |
2700 மி.மீ |
கிரவுண்ட் கிளியரன்ஸ் |
180 மி.மீ |
மேலும் பார்க்க: காஸ்மெட்டிக் அப்டேட்கள் மற்றும் புதிய வசதிகளுடன் Citroen Aircross Xplorer எடிஷன் வெளியிடப்பட்டுள்ளது
பட்டு போன்ற இன்ட்டீரியர்
இ விட்டாரா -வில் டூயல்-டோன் பிளாக் மற்றும் ஆரஞ்சு கேபின் தீம் உள்ளது. இதில் 2-ஸ்போக் பிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் மற்றும் குரோம் கலர் உடன் வெர்டிகல் ஏசி வென்ட்கள் உள்ளன. கேபினுக்குள் இருக்கும் முக்கிய ஹைலைட்களில் ஒன்று அதன் இன்டெகிரேட்டட் ஃபுளோட்டிங் ஸ்கிரீன் செட்டப் ஆகும் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட்டுக்காகவும் மற்றொன்று டிரைவர்ஸ் டிஸ்பிளேக்காகவும்).
இ விட்டாரா காரில் உள்ள விரிவான வசதிகளின் பட்டியலை சுஸுகி இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் இது ஆட்டோமெட்டிக் ஏசி, வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகளுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை உள்ளன.
பேட்டரி பேக் ஆப்ஷன்கள்
ஐரோப்பிய-ஸ்பெக் இ விட்டாரா 2 பேட்டரி பேக் தேர்வுகளுடன் வருகிறது: 49 kWh மற்றும் 61 kWh. விரிவான விவரங்கள் இங்கே:
பேட்டரி பேக் |
49 kWh |
61 kWh |
|
பவர் |
144 PS |
174 PS |
184 PS |
டார்க் |
189 Nm |
189 Nm |
300 Nm |
டிரைவ் டைப் |
2-வீல் டிரைவ் (2WD) |
2-வீல் டிரைவ் (2WD) |
ஆல்-வீல் டிரைவ் (AWD) |
இ விட்டாரா -வுக்கான கிளைம்டு ரேஞ்ச் விவரங்களை சுஸூகி இன்னும் வெளியிடவில்லை. 550 கி.மீ வரை ரேஞ்ச் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
எதிர்பார்க்கப்படும் இந்திய வெளியீடு மற்றும் விலை
மாருதி சுஸூகி இ விட்டாரா 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 22 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இ விட்டரா ஆனது MG ZS EV, டாடா கர்வ்வ் EV, மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.