இந்தியா -வில் சப்-4m எஸ்யூவி 2025 ஆண்டில் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது ஸ்கோடா நிறுவனம்.
published on பிப்ரவரி 28, 2024 04:40 pm by rohit for ஸ்கோடா kylaq
- 30 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவிற்கான முதல் EV -யான என்யாக் iV 2024 -ம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என்பதை ஸ்கோடா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
புதிய சப்-4m எஸ்யூவி மார்ச் 2025 -க்குள் அறிமுகம் செய்யப்படும் என உறுதி செய்யப்பட்டது; முதல் டிசைன் ஸ்கெட்ச் டீசரும் வெளியாகியுள்ளது.
-
ஸ்கோடா காரிக் ஸ்கோடா க்விக் மற்றும் ஸ்கோடா கரோக் ஆகிய பெயர்கள் இதற்கான பட்டியலில் உள்ளன.
-
குஷாக் எக்ஸ்ப்ளோரர் கான்செப்ட் காட்சிக்கு வைக்கப்பட்டது; ஆனால் இது அதிகாரப்பூர்வ தயாரிப்பாக இல்லாமல் இருக்கலாம்.
ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகிய இரண்டு கார்களுக்கான ‘இந்தியா 2.0’ திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தைக்கான அடுத்த கார் அறிமுகத்துக்கான தகவல்களை இப்போது வெளியிட்டுள்ளது. தற்போது டாடா நெக்ஸான் மற்றும் மாருதி பிரெஸ்ஸா போன்றவற்றால் ஆதிக்கம் செலுத்தப்படும் இந்தியாவில் கடுமையான போட்டியை கொண்ட சப்-4எம் எஸ்யூவி பிரிவில் ஸ்கோடா நுழையும் என்பது உறுதியாகியுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிற்காக ஸ்கோடா என்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்று பார்ப்போம்:
ஒரு புதிய சப்-4மீ எஸ்யூவி
ஸ்கோடாவின் சமீபத்திய அறிவிப்பு மூலம் புதிய கார் அறிமுகமாகும் என்பது உறுதியாகியுள்ளது. சப்-4m எஸ்யூவி "அனைவரும் அணுகக்கூடிய விலையில்" இருக்கும் என ஸ்கோடாவின் தெரிவித்துள்ள்ளது. மார்ச் 2025 -க்குள் ஸ்கோடா பரபரப்பான போட்டி கொண்ட பிரிவில் நுழையவுள்ளது. இன்னும் பெயரிடப்படாத எஸ்யூவி -யானது MQB-A0-IN பிளாட்ஃபார்ம் மூலம் சப்போர்ட் செய்யும் குஷாக் காம்பாக்ட் எஸ்யூவி போன்று இருக்கும். ஆனால் அளவுக்கேற்ப இது மாற்றியமைக்கப்படலாம். இது பிரீமியம் வடிவமைப்பு விவரங்கள் மற்றும் பன்ச் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் ஃபுல்லி லோடட் காராக இருக்க வாய்ப்புள்ளது.
இந்த புதிய எஸ்யூவி -க்கான பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை மேலும் பொதுமக்கள் புதிய பெயரை பரிந்துரைக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். ஸ்கோடா பட்டியலிட்டுள்ள சில பெயர்கள்: ஸ்கோடா காரிக் ஸ்கோடா க்விக் ஸ்கோடா கலாக் ஸ்கோடா கமாக் மற்றும் ஸ்கோடா கரோக். மேலும் வரவிருக்கும் ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்க்க முடிந்தது. டிசைன் டீஸர் ஸ்கெட்ச் ஸ்பிளிட் ஹெட்லேம்ப் செட்டப்புடன் கூடிய மஸ்குலர் ஸ்டைலிங் இருக்கும் என்பதும் தெரிகிறது.
இந்தியாவிற்கான ஸ்கோடாவின் முதல் EV 2024 ஆண்டில் வெளியாகிறது
இந்தியாவிற்கான முதல் EV -யாக என்யாக் iV இருக்கும் என்பதை ஸ்கோடா உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்த ஆண்டிலேயே விற்பனைக்கு வரும். இது முற்றிலும் பில்ட்-அப்-யூனிட் (CBU) காராக இருப்பதால் ஸ்கோடா EV -யானது சுமார் ரூ.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கோடா நிறுவனம் ஏற்கனவே 2022 -ம் ஆண்டு முதல் இந்தியாவில் EV -யை சோதனை செய்து வரும் நிலையில் இந்திய சந்தைக்கான காரின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
குஷாக் எக்ஸ்ப்ளோரர் பதிப்பு வெளியிடப்பட்டது
இந்த பெரிய அறிவிப்புகளுடன் ஸ்கோடா இந்தியா குஷாக் எக்ஸ்ப்ளோரர் கான்செப்ட்டையும் காட்சிப்படுத்தியது. 5-ஸ்போக் பிளாக் ரிம்ஸ் , வலுவான ஆல்-டெரெய்ன் டயர்கள் மற்றும் ஒரு ரூஃப் ரேக் போன்ற தனித்துவமான ஆஃப்-ரோடுக்கென சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது வெளிப்புறத்தில் ஆரஞ்சு ஹைலைட்களுடன் ஒரு மேட் கிரீன் கலரை கொண்டுள்ளது. பெரும்பாலான குரோம் எலமென்ட்களுடன் பிளாக் ஆக்ஸென்ட்களுடன் மாற்றப்பட்டுள்ளன. காம்பாக்ட் எஸ்யூவி -யின் 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் வேரியன்ட்டின் அடிப்படையில் காட்சிப்படுத்தப்பட்ட மாடலான இது அதிகாரப்பூர்வமாக வெளியாக வாய்ப்பில்லை. ஆனால் ஃபோக்ஸ்வேகன் டைகுன் டிரெயில் பதிப்பில் நாம் பார்த்தது போல் குறைவான மாற்றங்களுடன் ஒரு ஸ்பெஷல் எடிஷன் வேரியன்ட்டை எதிர்பார்க்கலாம்.
வேறு என்ன விவரங்கள் பகிரப்பட்டன ?
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் அதன் ஒட்டுமொத்த விற்பனை 1 லட்சத்தைத் தாண்டியதாக ஸ்கோடா தெரிவித்துள்ளது. 2025 ஆண்டு புதிய சப்-4m எஸ்யூவி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னரே ஸ்கோடா அதன் உற்பத்தி திறனை சுமார் 30 சதவீதம் அதிகப்படுத்தியுள்ளது. மேலும் இந்தியா இப்போது ஸ்கோடாவின் உலகளாவிய சந்தைகளில் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக உள்ளது இப்போது செக் குடியரசிற்கு வெளியே தயாரிக்கப்படும் ஸ்கோடா கார்களில் சுமார் 50 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாடல்களாகும்.
புதிய ஸ்கோடா சப்-4எம் எஸ்யூவி -யில் எவற்றையெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.