• English
  • Login / Register

Kia Sonet ஃபேஸ்லிஃப்டை இப்போது முன்பதிவு செய்தால், ஜனவரி 2024 -ல் காரை பெறலாம்!

published on டிசம்பர் 21, 2023 07:21 pm by shreyash for க்யா சோனெட்

  • 29 Views
  • ஒரு கருத்தை எழுதுக

K-கோடு மூலம் டிசம்பர் 20 அன்று புதிய சோனெட் காரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரியில் முன்னுரிமை வழங்கப்படும்.

Kia Sonet facelift

  • தற்போதுள்ள கியா வாடிக்கையாளர்கள் புதிய சோனெட்டை முன்பதிவு செய்வதற்கு K-கோடை உருவாக்கலாம்.

  • ஒவ்வொரு K-கோடும் ஒரு முன்பதிவுக்கு பயன்படும், அதை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மாற்றிக்கொள்ளலாம்.

  • கியா தற்போதுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சோனெட்டுடன் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

  • புதிய சோனெட் டிரைவருக்கான புதிய டிஜிட்டல் டிஸ்பிளே மற்றும் லெவல் 1 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அம்சங்கள் உட்பட புதிய வசதிகளை பெறுகிறது.

  • கியா புதிய சோனெட்டின் விலை ரூ 8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும்.

புதுப்பிக்கப்பட்ட சப்காம்பாக்ட் கியா சோனெட் எஸ்யூவி -க்கான முன்பதிவு இப்போது தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் சோனெட் ஃபேஸ்லிஃப்டை டோக்கன் தொகையாக ரூ.25,000க்கு முன்பதிவு செய்யலாம். சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டிற்கான டெலிவரிகள் ஜனவரி 2024 முதல் தொடங்கும் என்றும், டீசல்-மேனுவல் வேரியன்ட்களுக்கு, பிப்ரவரி 2024 முதல் டெலிவரி தொடங்கும் என்பதையும் கியா உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னுரிமை டெலிவரிக்கான K-கோடு

முன்பதிவில் காத்திருக்கும் போது வரிசையில் முன்னேற, வாடிக்கையாளர்கள் சோனெட் ஃபேஸ்லிஃப்டை முன்பதிவு செய்ய, ஏற்கனவே உள்ள கியா வாடிக்கையாளர்களிடமிருந்து K-குறியீட்டை வாங்கி பயன்படுத்தலாம். K-கோடை டிசம்பர் 20, 2023 இரவு 11:59 மணி வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

இதையும் பார்க்கவும்: கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் டாடா நெக்ஸான் பெறாத 8 விஷயங்கள்

புதிய சோனெட் -ல் உள்ள வசதிகள் என்ன ?

2024 Kia Sonet cabin

ஃபேஸ்லிஃப்டட் Kia Sonet ஆனது 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, கிளைமேட் கன்ட்ரோல் பேனல், 70+ கனெக்டட் கார் டெக்னாலஜி அம்சங்கள், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன. லேன்-கீப் அசிஸ்ட், ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் உள்ளிட்ட லெவல் 1 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களை (ADAS) இது கொண்டுள்ளது.

இன்ஜினில் மாற்றங்கள் இல்லை

New Kia Sonet

கியா புதுப்பிக்கப்பட்ட சோனெட்டுடன் அதே இன்ஜின் ஆப்ஷன்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதில் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (120 PS / 172 Nm) 6-ஸ்பீடு iMT அல்லது 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT), 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் (83 PS / 115 Nm) உடன் இணைக்கப்பட்டுள்ளது. 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் யூனிட் (116 PS / 250 Nm) 6-ஸ்பீடு iMT அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், டீசல் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை மீண்டும் பெறுகிறது.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்டின் விலை ரூ.8 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்ந்து டாடா நெக்ஸான், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV300, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட், மற்றும் மாருதி ஃப்ரான்க்ஸ் கிராஸ்ஓவர் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.

மேலும் படிக்க: கியா சோனெட் ஆட்டோமெட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Kia சோனெட்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience