Mahindra Thar Roxx பெயர் தொடர்பான கார்தேக்கோவின் இன்ஸ்டாகிராம் கருத்துக்கணிப்பில் சுவாரஸ்யமான முடிவுகள் கிடைத்துள்ளன
மஹிந்திராவின் புதிய காருக்கு தார் ரோக்ஸ் என்ற பெயரிடப்பட்டதை பற்றி எங்களது இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு பார்வையை இந்த கருத்துக்கணிப்பு எங்களுக்கு வழங்கியுள்ளது. அதே நேரத்தில் மஹிந்திராவால் கவனத்தில் கொள்ளக்கூடிய சாத்தியமான சில பெயர்களும் உள்ளன.
மஹிந்திரா தார் 5- டோர் அதிகாரப்பூர்வமாக 'தார் ராக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வாகனத் துறையில் குறிப்பிடத்தக்க உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதி மாதிரிக்கான சாத்தியமான போட்டியாளர்களாக இருந்த ஆறு காப்புரிமை பெற்ற பெயர்களின் தொகுப்பிலிருந்து இது சிறந்த தேர்வாக அறிவிக்கப்பட்டது. புதிய பெயர் பொதுமக்களிடமிருந்து பலவிதமான எதிர்வினைகளைப் பெற்றது. எனவே இன்ஸ்டாகிராமில் எங்களை ஃபாலோவர்கள் வரவிருக்கும் தார் 5-டோருக்கு 'ராக்ஸ்' சரியான பொருத்தம் என்பதை ஒப்புக்கொள்கிறார்களா என்று கேட்க முடிவு செய்தோம். எங்களின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் அளித்த அந்த அர்ச்சர்யமான முடிவுகளைப் பற்றி நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்:
பொதுமக்களின் கருத்து
வாக்கெடுப்பில் ஒரு எளிய கேள்வி கேட்கப்பட்டது - ‘நீங்கள் தார் ராக்ஸ் என்ற பெயரை விரும்புகிறீர்களா?’, மேலும் அதற்க்கான இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டன. அதனுடைய முடிவுகள் பின்வருமாறு:
பதிலளித்தவர்களில் 72 சதவீதம் பேர் புதிய தார் 5-டோருக்கான ‘ராக்ஸ்’ என்ற பெயரை விரும்பியுள்ளனர். இருப்பினும், 28 சதவீதம் பேர் வேறு பெயர் பொருத்தமாக இருந்திருக்கும் என்று கருதினர்.
மஹிந்திரா பதிவு செய்த வேறு பெயர்கள் என்ன?
மஹிந்திரா தார் ராக்ஸுக்குப் பதிலாக வேறு ஏதேனும் பெயரைத் தேர்வு செய்திருந்தால், நிறுவனம் தார் 5-டோர் எஸ்யூவி-க்கு வேறு ஆறு பெயர்களை பதிவு செய்து இருந்தன. இந்த பெயர்களின் விவரங்கள் வருமாறு:
மேலும் படிக்க: Mahindra Thar Roxx (தார் 5-டோர்) மற்றும் Mahindra Thar: இரண்டு கார்களுக்கும் இடையிலான 5 முக்கிய வெளிப்புற வேறுபாடுகள் இங்கே
தார் ராக்ஸ் பற்றிய மேலும் சில விவரங்கள்
மஹிந்திரா தார் ராக்ஸ் ஆகஸ்ட் 15, 2024 அன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட தார் வெர்ஷன் 3-டோர் மாடலின் பழக்கமான அமைப்பை தக்க வைத்துக் கொள்ளும். ஆனால் புதுப்பிக்கப்பட்ட ஹெட்லைட்கள், C-வடிவ உட்புறத்துடன் கூடிய LED டெயில் லைட்கள் உறுப்புகள், மற்றும் இரண்டு கூடுதல் டோர்களுடன் நீண்ட வீல்பேஸ் போன்ற அப்டேட்டுகள உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் இது அறிமுகப்படுத்தும்.
தார் ராக்ஸின் கேபின் கருப்பு மற்றும் பீஜ் நிற அப்ஹோல்ஸ்டரி மற்றும் இரண்டு 10.25-இன்ச் ஸ்கிரீன்கள், அதில் ஒன்று, டச்ஸ்க்ரீன் ஆப்ஷனுடன் வருகிறது மற்றும் மற்றொன்று டிரைவரின் டிஸ்ப்ளே, உள்ளிட்ட வசதிகளின் விரிவான தொகுப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் அம்சங்களில் பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்காக இது 6 ஏர்பேக்குகள், முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற வசதிகளை கொண்டிருக்கும்.
ஹூட்டின் கீழ் தார் 3-டோர் மாடலில் உள்ள அதே இன்ஜின்கள் தார் ராக்ஸ்ஸிலும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: 132 PS 2.2-லிட்டர் டீசல் மற்றும் 150 PS 2-லிட்டர் டர்போ-பெட்ரோல். 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்கள் இதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் விலை ரூ. 15 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி ஜிம்னிக்கு ஒரு பெரிய மாற்றாக இது இருக்கும் என நம்பப்படுகிறது அதே வேளையில் இது ஃபோர்ஸ் கூர்க்கா 5-டோருடனும் போட்டியிடும்.
மஹிந்திரா தார் ராக்ஸின் பெயரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கீழே உள்ள கருத்துகளில் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இன்ஸ்டன்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்
மேலும் படிக்க: மஹிந்திரா தார் ஆட்டோமேட்டிக்
dipan
- 24 பார்வைகள்